தீபாவளிக்கு ரிலீஸாகுமா ‘விஸ்வாசம்’?

தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள அஜித்தின் ‘விஸ்வாசம்’, அறிவித்தபடி ரிலீஸாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள அஜித்தின் ‘விஸ்வாசம்’, அறிவித்தபடி ரிலீஸாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் – சிவா கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு ‘விஸ்வாசம்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ், அந்தப் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட தங்கள் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடித்துக் கொடுக்குமாறு அஜித்திடம் கேட்டது. அதை அஜித்தும் ஏற்றுக் கொண்டார்.

‘வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ படங்களுக்கு இசையமைத்த அனிருத்துக்குப் பதிலாக, யுவன் சங்கர் ராஜா அல்லது ‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ். இசையமைப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், கடைசியில் அனிருத்தே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62வது படத்தின் படப்பிடிப்பு, சில நாட்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தொடங்கியது. ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பது உள்பட டெக்னீஷியன்ஸ் லிஸ்ட்டும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

அதேபோல் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 36வது படத்தின் படப்பிடிப்பும் பூஜையுடன் தொடங்கிவிட்டது. இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

இப்படி சமீபத்தில் ரிலீஸான படங்களின் முன்னணி ஹீரோக்களே தங்களுடைய அடுத்த படத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், அஜித்தின் படம் மட்டும் பெயர் அறிவிப்போடு இருக்கிறது. பெயர் கூட ‘விஸ்வாசம்’ அல்லது ‘விசுவாசம்’ என்ற குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹீரோயின் யார் என்று கூட அறிவிக்கப்படவில்லை.

இன்னும் ஷூட்டிங் தொடங்காத நிலையில், திட்டமிட்டபடி தீபாவளிக்கு ‘விஸ்வாசம்’ ரிலீஸாகுமா அல்லது வேறு தேதிக்கு மாற்றப்படுமா என்ற சந்தேகம் அஜித் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

×Close
×Close