விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். சித்ராவின் மரணத்தில் அவருடைய கணவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அவரை இன்னும் மறக்காத பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் சித்ராவின் பிறந்தநாளை நினைவில் வைத்து அஞ்சலி தெரிவித்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருடைய ரசிகர்கள் நேற்று சித்ராவின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்து அஞ்சலி தெரிவித்தனர்.
பாண்டியன் ஸ்டோர் இயக்குனர் சிவ சேகர், நடிகை சித்ராவின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சித்ரா மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும் சித்ராவை இன்னும் ரசிகர்கள் மட்டுமின்றி பாண்டியன் ஸ்டோர் குழுவினரும் மறக்கவில்லை என்பது அவரது பிறந்த நாளின் போது வாழ்த்துக்களை தெரிவித்ததன் மூலம் தெரியவந்துள்ளது.
மே 2-ம் தேதி சித்ராவின் பிறந்தநாள். நேற்று சித்ராவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் சித்ராவை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் சித்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பாண்டியன் ஸ்டோர் இயக்குனர் சிவ சேகர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா’ என சித்ராவின் புகைப்படத்தை பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு பாண்டியன் ஸ்டோர் பிரபலங்களும் லைக் செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”