Advertisment

ஹிட் சீரியலில் வில்லி நடிகை திடீர் மாற்றம்: புதிதாக வரும் விஜே மகாலட்சுமி கலக்குவாரா?

VJ Mahalakshmi joins Zee Tamil Thirumathi Hitler serial: திருமதி ஹிட்லர் சீரியலில் வில்லி அர்ச்சனா கேரக்டர் மாற்றம்; புது வில்லியாக அறிமுகமாகிறார் விஜே மகாலட்சுமி

author-image
WebDesk
New Update
ஹிட் சீரியலில் வில்லி நடிகை திடீர் மாற்றம்: புதிதாக வரும் விஜே மகாலட்சுமி கலக்குவாரா?

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் திருமதி ஹிட்லர் சீரியலில் வில்லியாக களமிறங்குகிறார் விஜே மகாலட்சுமி.

Advertisment

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் சீரியல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலில் இருக்கும் சீரியல் திருமதி ஹிட்லர் தான். இந்த சீரியலில் நடிகை அம்பிகா, கீர்த்தனா மற்றும் அமித் பார்கவ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சீரியலில், ஹாசினியும், ஏஜேவும் வெவ்வேறு குணாதிசயங்களோடு இருக்கும், இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்து கொள்கின்றனர். ஹாசினியை பிடிக்காத ஏஜே வீட்டு மற்ற மருமகள்கள் அவரை எப்படி வெளியே அனுப்ப வேண்டுமென்று திட்டமிட்டு செயல்படுகின்றனர். ஆனால் ஹாசினிக்கு துணையாக அம்பிகா இருக்கிறார். மற்ற மருமகள்களை ஹாசினி எப்படி சமாளிக்கிறார் என்பதாக கதை சென்றுக் கொண்டிருக்கிறது.

publive-image

இதில் மூதத மருமகள் வில்லி அர்ச்சனா கதாப்பாத்திரத்தில் இதுவரை சௌமியா ராவ் நடித்து வந்த நிலையில், தற்போது விஜே மகாலட்சுமி நடித்து வருகிறார். சௌமியா வேறு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இந்த சீரியல்களில் தன்னுடைய மிரட்டலான நடிப்பை நன்றாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் சில எபிஷோடுகளாக இவர் வரவில்லை. இந்த நிலையில் அவருக்கு பதிலாக தற்போது விஜய் மகாலட்சுமி அறிமுகமாகிறார். விஜே மகாலட்சுமி இந்த சீரியலில் நடிப்பது சீரியல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. விஜே மகாலட்சுமி சின்னத்திரையில் கதாநாயகியாக தொடங்கி வில்லி மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் வில்லியாக நடிக்கும் மகாலட்சுமி எப்படி மிரட்ட உள்ளார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil Thirumathi Hitler
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment