“சிவகார்த்திகேயன் ஓகே சொல்லணும்” - விக்னேஷ் சிவன்

‘சிவகார்த்திகேயன் கதைக்கு ஓகே சொன்னால், படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ வெளிவரும்’ என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் கதைக்கு ஓகே சொன்னால், படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ வெளிவரும்’ என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

‘போடா போடி’ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இயக்குநர் மட்டுமின்றி நடிகர், பாடலாசிரியராகவும் திறமையை வெளிப்படுத்திய விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி – நயன்தாரா நடிப்பில் ‘நானும் ரெளடி தான்’ படத்தை இயக்கினார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கினார். இந்தப் படம், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி ரிலீஸானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், தெலுங்கில் ‘கேங்’ என்ற பெயரில் ரிலீஸானது.

இந்நிலையில், அடுத்ததாக சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் விக்னேஷ் சிவன் என்கிறார்கள். இதுகுறித்து விக்னேஷ் சிவனிடம் கேட்டபோது, “சிவகார்த்திகேயனுடன் படம் பண்ண வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ‘நானும் ரெளடி தான்’ படம் இயக்குவதற்கு முன்பே சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை சொன்னேன். ஆனால், அவர் ‘மான் கராத்தே’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருந்தார்.

அதன்பிறகு நானும் பிஸியாகிவிட்டேன். இப்போது இருவருக்கும் நேரம் கூடி வந்திருக்கிறது. கதையைத் தயார் செய்து கொண்டிருக்கிறேன். அதைக் கேட்டு சிவகார்த்திகேயன் ஓகே சொன்னால், அவர்கள் தரப்பில் இருந்தே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

×Close
×Close