Advertisment

இந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Weekend Movie release

Weekend Movie release

Weekend Movie release : பொங்கல் பண்டிகைக்காக ஸ்பெஷல் ரிலீசான பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களை தொடர்ந்து இந்த வாரம் 2 புதிய படங்கள் வெளியாக இருக்கிறது.

Advertisment

2019ம் ஆண்டின் புதிய படங்கள் வெளியீட்டில் மெகா ஹிட் அடித்தது பேட்ட மற்றும் விஸ்வாசம் படம். ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட படத்திற்கும், அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் படத்திற்குமான போட்டி இன்று கடந்த 10ம் தேதி முதல் இன்று வரை தொடர்கிறது.

Weekend Movie release : இந்த வாரம் படங்கள் ரிலீஸ்

பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்துள்ளதையடுத்து இந்த வாரம், வரும் 25ம் தேதி இரண்டு படங்கள் வெளியாக இருக்கிறது. பிரபு தேவா நடிப்பி சார்லி சாப்ளின் - 2 மற்றும் பரத் - பிரேம்ஜி கூட்டணியில் சிம்பா படமும் வெளியாக இருக்கிறது.

சார்லி சாப்ளின் - 2

இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா, நிக்கி கல்ராணி, பிரபு கணேசன், அதா சர்மா, அமித் பார்கவ், லுத்புதீன், அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிம்பா

டார்க் காமெடி ஜானரில் சிம்பா படம் இயக்கியுள்ளார் அரவிந்த் ஸ்ரீதர். பிரேம்ஜி, ரமணா, பானு ஸ்ரீ மேத்தா, ஸ்வாதி திக்ஷித் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சினு சிடார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். அச்சு விஜயின் எடிட்டிங் வேலைப் பார்த்திருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment