Advertisment

Weekend Movie Release : இந்த வாரம் செம்ம போட்டி... மொத்தமா களத்தில் இறங்கும் 4 படங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Weekend Movie Releases

Weekend Movie Releases

Weekend Movie Releases : கடந்த வாரம் போல் இல்லாமல் இந்த வாரம் செம்ம டஃப் கொடுக்க கொத்தாக ரிலீஸ் களத்தில் குதித்துள்ளது 4 திரைப்படங்கள்.

Advertisment

வார இறுதி என்றாலே பெரும்பாலானோருக்கு சினிமா தான் பொழுதுபோக்கு. நண்பர்கள், காதல் ஜோடிகள் மற்றும் குடும்பத்தினர் என எல்லோரும் வார இறுதியை நல்லபடியாக கழிக்க தேர்வு செய்வது புதுப்படங்கள் தான்.

Weekend Movie Releases : இந்த வார புதுப்படங்கள்

அந்த வகையில் கடந்த வாரம், பிரபு தேவாவின் சார்லி சாப்லின் 2 மற்றும் பரத் - பிரேம் ஜி நடிப்பில் சிம்பா வெளியானது. அதனை தொடர்ந்து இந்த வாரம் முன்னணி நடிகர்கள் நடித்துள்ள 4 படங்கள் வெளியாகிறது.

வந்தா ராஜாவா தான் வருவேன்

சிம்பு, ரம்யா கிருஷ்ணன், பிரபு, நாசர், கேதரின் தெரசா, மேகா ஆகாஷ் மற்றும் மகத் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் சுந்தர் சி இப்படத்தை இயக்கி இருக்கிறார். படத்தில் நகைச்சுவை தூக்கலாக இருக்க யோகி பாபு, விடிவி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார்.

பேரன்பு

தங்க மீன்கள் இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி, அஞ்சலி மற்றும் பேபி சாதனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் மனதை உருக்கும் கதையில் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

சர்வம் தாளமயம்

இயக்குநர் ராஜிவ் மேனன் இயக்கத்தில், இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜிவி பிரகாஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் பிற முக்கிய கதாபாத்திரங்களில், மறைந்த நடிகர் சீனு மோகன், நெடுமுடி வேணு, அபர்னா பாலமுரளி நடித்துள்ளனர்.

சகா

முருகேஷ் இயக்கத்தில் பசங்க படத்தின் பட்டாளம் நடித்திருக்கும் படம் சகா. இப்படத்தில், சரண், கிஷோர், பாண்டி பகோடா மற்றும் ஸ்ரீராம் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் இடம்பெற்றிருனத யாயும் யாராகியரோ என்ற பாடம் பெருமளவில் ஹிட் ஆனது. இப்படத்திற்கு ஷபீர் என்பவர் இசையமைத்திருக்கிறார்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment