Advertisment

விக்ரம் படத்தில் உண்மை இல்லை... எழுத்தாளர் ஜெயமோகன் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

இந்தியா முழுவதும் உள்ள மக்கள் 3 வேளையும் உணவுக்கு பதிலாக போதை பொருளை சாப்பிட்டால் மட்டுமே 2 லட்சம் கோடி பிஸினஸ் நடக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விக்ரம் படத்தில் உண்மை இல்லை... எழுத்தாளர் ஜெயமோகன் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

தமிழில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஜெயமோகன். கடந்த 2005-ம் ஆண்டு வெளியான கஸ்தூரி மான் தொடங்கி தற்போது சிம்பு நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் வெந்து தணிந்தது காடு வரை நிறைய படங்களுக்கு தனது எழுத்தின் மூலம் உயிர் கொடுத்துள்ளார். இதில் பாலாவின் நான் கடவுள், ரஜினி ஷங்கர் இணந்த 2.0, வசந்தபாலனின் அங்காடித்தெரு, மணிரத்னத்தின் கடல் உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கது.

Advertisment

மேலும் வரும் செப்டம்பர் 30-ந் தேதி வெளியாக உள்ள வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன்,  வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, ஷங்கர் கமல் கூட்டணியில் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களுக்கும் தனது எழுத்து பங்களிப்பை கொடுத்துள்ளார். இதனிடையே வெந்து தணிந்தது காடு படம் குறித்து ஜெயமோகன் கூறியுள்ள கருத்து ரசிகர்களிடையே பல விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

பொதுவாக தமிழ் சினிமாவின் கமர்ஷியல் படங்கள் நாயகன் வில்லன் இவர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளை மையப்படுத்திதான் இருக்கும். நாயகன் ஒன்று செய்தால் அதற்கு போட்டியாக வில்லன் ஒன்று செய்வார். ஆனால் அது போன்று இந்த படத்தை எடுக்க முடியாது இது லைஃப். இதுவரைக்கும் நிறைய அண்டர்வோல்ட் படங்கள் வந்துள்ளது. ஆனால் இங்கு யாருக்கும் அண்டர்வோல்ட் என்றால் என்ன என்றே தெரியாது.

கேஜிஎஃப் படம் முழுக்க முழுக்க ஒரு கற்பனை அந்த மாதிரி ஒரு இடமே கிடையாது. அதேபோல் விக்ரம் எனக்கு ரொம்ப பிடித்த படம் ஆனால் அந்த படத்தில் காண்பிக்கப்படும் போதை பொருளின் மதிப்பு இந்தியா முழுவதும் உள்ள மக்கள் 3 வேளையும் உணவுக்கு பதிலாக போதை பொருளை சாப்பிட்டால் மட்டுமே 2 லட்சம் கோடி பிஸினஸ் நடக்கும். ஒரு வருடம் முழுக்க இந்தியாவில் நடக்கும் போதை பொருள் பிஸினஸ் 10 ஆயிரம் கோடி தான் என்று தனது நார்க்கார்டிக்ஸ்ல் உள்ள தனது நண்பர் சொன்னதாக கூறியுள்ளார்.

மேலும் சினிமா என்பது பார்வையாளர்களை நம்ப வைப்பது. அண்டர்வோல்ட் குறித்து நம்மை நம்ப வைக்கிற படங்களை ராம்கோபால் வர்மா 10 வருடங்களுக்கு முன்பே கொடுத்துள்ளார். அதோபோல் தமிழில் நாயகன் உட்பட பல படங்கள் நிழல் உலக காட்சிப்படுத்தியுள்ளது. மெட்ரோ சென்னையின் செயின் பறிக்கும் கும்பலின் உண்மை முகத்தை காட்டியுள்ளதாக கூறியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சினிமா ஆர்வலர்கள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் குஜராத்தில் கைப்பற்றப்பட்ட போதை பொருளின் மதிப்பு பல லட்சம் கோடியை தாண்டும் என்றும்,  அரசின் பாதுகாப்பில் இருந்து காணாமல்போன் போதை பொருளிள் மதிப்பு 5 லட்சம் கோடி என்று தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதற்கு காவலதுறை தரப்பில் இருந்து எவ்வித பதிலும் அளிக்கவில்லைஎன்றும் கூறியுள்ள நெட்டிசன்கள், நடைமுறை எதார்த்தத்தை மறந்து ஜெயமோகன் விக்ரம் படத்தை விமர்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.  

அதேபோல் இவர் எழுதிய கடல் படத்தில், கூலிக்கு கொலை செய்யும் ஒருவன், 16 வயது கிராமத்து பெண் நாயகி ஒரு பெண்ணுக்கு பிரசவம் பாக்க செல்லும்போது நாயகனும் உடன் செல்கிறான். இதில் பிரசவத்திற்கு உதவும் நாயகனின் கையில் இரத்தகரை படிக்கிறது. அதுவரைகொலை செய்து அடுத்தவர் ரத்தத்தை தனது கையில் படிய வைத்திருந்த நாயகன் இந்த பிரசவத்தின் இரத்தகரை படித்தவுடன் திருந்திவிடுவதாக காட்சி வைத்திருப்பார்.

ஆனால் பிரசவம் பார்க்கும்போது முன்பின் தெரியா ஒரு ஆணை பிரசவத்திற்கு உதவ எப்படி கிராமத்து பெண்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வி ஜயமோகனின் தற்போதைய கருத்துக்கு நெட்டிசன்களில் பதிலாக உள்ளது. தற்போது இது தொடர்பான விவாதம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment