வி.இஸட்.துரை இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ஏமாலி’. இந்தப் படத்துக்கு வி.இஸட்.துரை மற்றும் ஜெயமோகன் இருவரும் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி, பால சரவணன், சிங்கம்புலி, அனூப் அரசன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு சாம் டி ராஜ் இசையமைக்கிறார்.