Advertisment

அதிகரிக்கும் ஜெயலலிதா பயோபிக் எண்ணிக்கை: ஆனால் இந்த டைட்டில் கொஞ்சம் வித்தியாசமானது

விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் போன தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா, ’சசிகலா’ என்ற படத்தை இயக்குகிறார். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sasilalithaa

Sasilalithaa

Jayalalithaa Biopic: மறைந்த முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் அடுத்தடுத்து தயாராகிக் கொண்டிருக்கின்றன.

Advertisment

நடிகை நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கும் ’தி அயர்ன் லேடி’ என்ற படத்தை இயக்குநர் பிரியதர்ஷினி இயக்குகிறார். இவர் இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர்.

இயக்குநர் விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்குகிறார். இதில் கங்கனா ரனாவத் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் கெளதம் மேனன், ‘குயின்’ என்ற வெப் சிரீஸ் இயக்குகிறார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது இன்னொரு பயோபிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ’சசிலலிதா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகிறதாம். இதனை ஜெயம் மூவிஸ் சார்பில் ஜெகதீஸ்வர ரெட்டி தயாரித்து இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

தவிர, விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் போன தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா, ’சசிகலா’ என்ற படத்தை இயக்குகிறார்.

இதில் சசிகலாவின் வாழ்க்கை, ஜெயலலிதாவுடனான உறவு, இரக்கமற்ற குணம், மன்னார்குடி கூட்டம் ஆகியவை முக்கிய அங்கமாக இருக்குமாம். அதோடு தலைப்பு டேக் லைனாக ’அன்பு ஆபத்தான அரசியல்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு ”ஜெயலலிதா வாழ்க்கையில் இடம்பெற்றிருக்கும் விஷயங்களை மற்ற இயக்குநர்கள் தவிர்த்துவிட்டு, அதை பாஸிட்டிவான கண்ணோட்டத்தில் எடுத்து செல்ல முயற்சிப்பார்கள். ஆனால் ராம் கோபால் வர்மா துணிச்சலோடு உள்ளதை உள்ளபடியே காட்டுவார்” என்கிறார்கள் அவரை நன்கு புரிந்தவர்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment