எல்லோருமே செய்ய தயங்கிய செயலை நயன்தாரா எனக்காக செய்தார்: யோகி பாபு ஹேப்பி!!

ஒருதலையாக காதலிக்கும் லவ்வர் பாய் தான் நம்ம யோகி பாபு.

”நடிகர் யோகி பாபு காமெடி நடிகர் மட்டுமில்லை, நல்ல நடிகரும் கூட” இதை சொன்னது யார் தெரியுமா? வேற யாரு கூடிய விரைவில் கோலமாவு கோகிலாவா திரையில் அடுத்த முகத்தை காட்ட இருக்கும் நயன்தாரா தான். கடந்த சில நாட்களாக யூடியூப்பில் ரெண்டிங்கில் இடம் பிடித்த பாடல் தான் ‘கல்யாண வயசு வந்துடிச்சி டீ”

நயன் தாராவின் நடிப்பில் வெளிவர இருக்கும் கோலமாவு கோகிலா படத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த பாடல் வெளிவந்த முதல் நாள் இரவே ரசிகர்களின் ஹார்ட் ட்யூனாக மாறியது. கேட்சியான வரிகள்,அனிரூத்தின் இசையின் என ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும், பாட்டில் நடிகர் யோகி பாபுவின் எக்ஸ்பிரஷன் தான் டாக் ஆஃப் டவுன்.

பாட்டில் பாவடை சட்டையில் டோரா பேக்கை மாட்டிக் கொண்டு நயன் தாரா ரோட்டில் அங்கும் இங்கும் சென்று வருகிறார். அவரைச் சுற்றி சுற்றி ஒருதலையாக காதலிக்கும் லவ்வர் பாய் தான் நம்ம யோகி பாபு. வித்யாசமான காமீனேஷன் தான் என்றாலும் ரசிகர்களை எந்த அளவிற்கு ஈர்க்கும் என்று படக்குழுவிற்கு ஆரம்பத்தில் சந்தேகம் இருந்தது தானாம். ஆனால், பாடலுக்கான ஷூட்டிங் எல்லாம் முடித்துவிட்டு பார்த்தால் படக்குழுவே செம்ம ஹேப்பி தான்.

பாட்டில் நயன் தாராவின் அருகில் யோகி பாபு ரொம்பவே அழகாகவே தெரிந்தார். இதுப்பற்றி அவரிடம் கேட்டால், “ என்னாலேயே நம்ப முடியவில்லை. பாட்டு ஒரு நாளில் செம்ம ஹிட்டா ஆகிவிட்டது. நயன்தாரா மேடமிற்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். என்னை போல காமெடியன் கூடலாம் இப்படி ஒரு பாட்டில் நடிக்கிறது எல்லாம் ரொம்ப பெரிய விஷயம். எவ்வளவு பெரிய நடிகை அவங்க. வேற எந்த ஹீரோயின்ஸ்லாம் இதுமாதிரி எனக் கூட ஒரு பாடலில் வர ஒத்து இருப்பாங்கலானு தெரியல. ஆனா நயன் தாரா மேடம் நடிச்சாங்க. நான் வெறும் காமெடி நடிகன் மட்டுமில்லை. நல்ல நடிகன்னு கூட சொன்னாங்க.. நான் ரொம்ப ஹேப்பி” என்று அவருக்கே உரிதான அப்பாவி முகத்தோற்றத்துடன் யோகி பேசியுள்ளார்.

×Close
×Close