Advertisment

யோகி பாபு அசைவம் சாப்பிடுறது இல்லையாம்... ஏன் தெரியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Yogi Babu, யோகி பாபு

Yogi Babu, யோகி பாபு

முத்துக்குமரன் இயக்கும் ‘தர்மபிரபு’ படத்தில் எமன் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க, சித்திரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கிறார்.

Advertisment

யோகிபாபுவும் படக்குழுவினரும், படப்பிடிப்பு முடியும்வரை ஆன்மிகத்துக்கு மாறியுள்ளனர். ‘தர்மபிரபு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன் யோகி பாபு, தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் மற்றும் இயக்குநர் முத்துக்குமரன் ஆகியோர் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள எமதர்ம ராஜா கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜை , வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்குச் சென்று வழிபாடு என்று படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், எமதர்ம ராஜாவின் தெய்வீகத்தன்மையை உறுதிப்படுத்த, படப்பிடிப்பு தளத்தில் அசைவ உணவு சமைக்கவும் பரிமாறவும் வேண்டாம் எனவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படம் வெற்றி பெற நேர்மறையான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கும் என்று நம்புகின்றனர்.

எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. வாரிசு அடிப்படையில் யோகி பாபுவும், பதவி அடிப்படையில் ரமேஷ் திலக்கும் எமன் பதவிக்குப் போட்டி போடுகின்றனர். இதில் யார் எமன் பதவியைத் தட்டிச்செல்லப் போகிறார், தன் தகுதியை எப்படி நிரூபிக்கின்றனர் என்பதே ‘தர்மபிரபு’ படத்தின் கதை என கூறப்படுகிறது.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment