தமிழ் திரையுலகில் தந்தைக்கு பிறகு இசையுலகில் முக்கிய இடம் பிடித்த யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாள் இன்று. தனது 40 வது பிறந்தநாளை இவர் கொண்டாடுகிறார்.
யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாள்:
இசைஞானி இளையராஜா இசையமைத்த பல பாடல்களில் மிக பிரபலமானது, ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடல். இந்த பாடலை வெவ்வேறு பாடல் ராகங்களில் பாடுமாறு சவால் விடப்படுகிறது.
அதனை ஏற்று வேறு பாடல்கள் ராகத்திலும் இவர் பாடுகிறார். இறுதியாக தனது மகன் யுவன் போல் இந்த பாடலை இசையமைக்க வேண்டும் என்றால் எப்படி இருக்கும் என்று கேட்க, யுவன் போலவே பாடிக் காட்டுகிறார்.