Advertisment

ஐ.ஏ.எஸ் கனவு டூ கோவில் பூசாரி... வித்தியாசம் காட்டும் சீரியல் நடிகை

ஜீ தமிழின் மாரி சீரியல் சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளவர் ஆஷிகா கோபால் படுகோனே.

author-image
D. Elayaraja
New Update
ஐ.ஏ.எஸ் கனவு டூ கோவில் பூசாரி... வித்தியாசம் காட்டும் சீரியல் நடிகை

சின்னத்திரை நிகழ்ச்சிகள் தற்போது மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கயமானதாக மாறிவிட்டது. சினிமாவை விட சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் மட்டுமல்லாமல் அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

Advertisment

ரியாலிட்டி ஷோக்களின் தமி்ழ் நட்சத்திரங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வந்தாலும், சீரியலில் மற்ற மாநில மொழி நடிகைகள் தமிழில் அறிமுகமாகி வருகின்றனர். அந்த வகையில் சன்டிவியின் தமிழ் செல்வி சீரியலில் அறிமுகமானி தற்போது ஜீ தமிழின் மாரி சீரியல் சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளவர் ஆஷிகா கோபால் படுகோனே.

publive-image

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அவரிடம் தமிழ் சீரியலில் அறிமுகம் மற்றும் ரீ-என்டரி தொடர்பாக பேசினோம்.

பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை

அப்பாவுக்கு 3 வருடத்திற்கு ஒருமுறை டிரான்ஸ்வர் ஆகும். அதனால் நான் பெங்களூரிலும், மும்பையிலும் பள்ளி கல்வியை முடித்தேன். அதன்பிறகு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டேன். கல்லூரி படிப்பையும் பெங்களூரில் தொடர்ந்தேன். பி.இ கம்யூட்டசர் சையின்ஸ் இன்ஜினியரிங் பண்ணனேன்.

சீரியலில் என்ட்ரி

படித்து முடித்து சாஃபட்வேரில் வேலையும் கிடைத்தது. கல்லூரி ரிசல்ட் வந்து வேலையில் ஜாயின் பண்ண 4 மாதம் கேப் இருந்தது. அப்போது ஒரு சீரியலில் நடிக்க எனக்கு ஆடிஷன் வந்தது. கொஞ்ச நாள்தான் ஷூட் இருக்கும் ஹீரோயின் பிளாஷ்பேக் கேரக்டர்னு சொன்னாங்க. கன்னடாவில் வந்த நிஹாரிக்கா என்ற சீரியலின் நடித்தேன். இந்த சீரியல் வாய்ப்பு நான் இன்ஜினியரிங் படிக்கும்போதே வந்தது. படிப்பு விடுமுறையில் ஷூட்டிங் என்று போய்க்கொண்டிருந்தேன்.  

publive-image

சீரியலில் நாயகி வாய்ப்பு

நிஹாரிக்கா சீரியலில் நடித்தது பிடித்துபோய் அந்த சீரியலின் ஹெட் எனக்கு திருவேனி சங்கமா என்ற சீரியலில் லீடு ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இந்த சீரியல் சில மாதங்கள் போய்க்கொண்டிருந்தபோது தெலுங்கில் வாய்ப்பு கிடைத்தது. அன்னப்பூர்னா ஸ்டுடியோவில் வொர்க் ஸ்டார்ட் பண்ணிட்டேன்.

தெலுங்கு அறிமுகம்

தெலுங்கில் கதோலோ ராஜகுமாரி சீரியல் பண்ணேன். அதன்பிறகு நடிப்பில் மீதுள்ள ஆர்வத்தினால் ஜாப் ஜாயின் பண்ணாமல் விட்டுவிட்டேன் இதுவே எனக்கு சரியாக இருந்தது. அதன்பிறகு இந்த காதோலோ ராஜகுமாரி சீரியலின் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் த்ரினாயனி சீரியல் பண்னேன்.

publive-image

தமிழ் அறிமுகம்.

த்ரினாயனி சீரியலுக்கு முன்பே தமிழில் தமிழ்ச்செல்வி என்ற சீரியலில் லீடு ரோலில் நடித்தேன். தெலுங்கு சீரியல் பண்ணும்போதே சன்.டிவியில் இருந்து எனக்கு வாய்ப்பு வந்தது. தமிழ்ச்செல்வி சீரியல் நன்றாக போய்க்கொண்டிருந்தது கால்ஷீட் பிரச்சினை காரணமாக தொடர முடியவில்லை.

அதன்பிறகு தெலுங்கில் த்ரினாயானி சீரியலில் நடித்தபோது இந்த சீரியலலை தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், இதிலும் நான்தான் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பு தரப்பில் சொன்னார்கள். ஏற்கனவே செய்த கேரக்டர் அதை பற்றி நன்றாக தெரியும் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதுதான் மாரி சீரியல்.

publive-image

சாஃப்டவேர் இன்ஜினியர் டூ சீரியல் நடிகை இந்த பயணம்

படித்து முடித்து நான் வேலையில் ஜாயின் பண்ணவே இல்லை. நடிக்க வந்துவிட்டால் அதை தொடரவில்லை. அதே சமயம் நைட் எவ்வளவு வேலை அலைச்சல் சோர்வாக இருந்தாலும் காலையில் எழுந்து அதே எனர்ஜியுடன் சீக்கிரமாக ஷூட்டுக்கு சென்றுவிடுவேன். ஆனால் சாஃப்ட்வேர் ஜாப்பில் அப்படி இருப்பேனா என்பது தெரியவில்லை.

எதிர்கால திட்டம்

எதிகாலம் பற்றி எதுவும் இல்லை. இன்னைக்கு நல்லா இருந்த போதும். நாளைக்கு என்ன வருது எப்படி இருக்கு பார்க்கலாம். இப்போதைக்கு சீரியல் ரொம்ப பிஸியா போய்க்கிட்டு இருக்கு. பட வாய்ப்பு எதுவும் இல்லை. நல்ல கதை அமைந்தால் பண்ணலாம்.

publive-image

மாரி சிரியலில் தெலுங்கில் பண்ண அதே கேரக்டர் தான் தமிழிலும் பண்றேன். ஏற்கனவே ஸ்டோரி தெரியும் அதனால் இன்னும் ஈஸியா இருக்கு. தெலுங்கு தமிழ் ரெண்டுமே ஒரே கேரக்டர்தான். அதனால் எப்படி இம்ப்ருமெண்ட் பண்ணலாம்னு பார்த்துட்டு இருக்கேன். தமிழுக்கு ஏற்றதுபோல் சின்ன சின்ன மாற்றம் இருக்கு சீரியல்ல.

தமிழ்ச்செல்வி vs மாரி

தமிழில் முதல் சீரியலான தமிழ்ச்செல்வியில் கிராமத்து கேரக்டர் படித்து ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பெண். ஆனால் மாரி சீரியலில் படிப்பு இல்லாத ஒன்றும் தெரியாத ஒரு பெண் பூசாரி கேரக்டர் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment