Advertisment

மூன்றரை மணி நேர க்ளைமேக்ஸ்... பிரம்மாண்டமாக முடிவுக்கு வரும் ஜீ தமிழ் சீரியல்

முதல் சீசனை போலவே சத்யா 2-வது சீசனும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

author-image
D. Elayaraja
New Update
மூன்றரை மணி நேர க்ளைமேக்ஸ்... பிரம்மாண்டமாக முடிவுக்கு வரும் ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழின் ஹிட சீரியல்களில் ஒன்றான சத்யா 2 சீரியல் முடிவுக்கு வர உள்ள நிலையில், இதன் க்ளைமேக்ஸ் எபிசோடு சுமார் 3 மணிநேரம் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment

முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் சத்யா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து, சத்யா சீசன் 2 ஒளிபரப்பானது. முதல் சீசனை போலவே 2-வது சீசனும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதனிடையே தற்போது சத்யா 2 சீரியல் நாளையுடன் (அக்டோபர் 9) முடிவுக்கு வர உள்ள நிலையில், இதன் க்ளைமேக்ஸ் எபிசோடு மதியம் 1 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம ஒளிரப்பாக உள்ளது. பிரபு தேர்தலில் வெற்றி பெற்றது போல் தொடங்கும் இந்த க்ளைமேக்ஸ் எபிசோட்டில், மாரி ஆஷிகா, வித்யா சீரியல் புவி, ரக்சிதா, ஹாசினி விக்னேஷ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளனர்.

சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ள மற்ற சீரியல் நட்சத்திரங்கள் தங்களின் சீரியல் கேரக்டர்களாவே வருகின்றனர். இதனால், சத்யா 2 சீரியலின் க்ளைமேக்ஸ் எபிசோடு பரபரப்பும் விறுவிறுப்பும் குறையாமல் பல ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாக உள்ளது. இதனால் சத்யா சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பையும் இந்த சீரியல் ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sathya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment