பெற்றோரின் எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகர் ராஜ்கிரனின் மகள் திருமணத்தை தற்போது ஜீ தமிழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது ராஜ்கிரன் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
மக்கள் தங்களது பொழுதுபோக்கு கவனத்தை திரைப்பங்களில் இருந்து சின்னத்திரைக்கு திருப்பியது முதல் சின்னத்திரை சேனல்கள் பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றனர். சீரியல் எப்போதும்போல ஒளிபரபப்பாகி வந்தாலும் ரியாலிட்டி ஷோக்கள் அவ்வப்போது பல வித்தியாசமான கான்சப்ட்களை கண்டுபிடித்து ஒளிபரப்பி வருகின்றனர்.
அதிலும் பண்டிகை நாட்கள் வந்துவிட்டால் சேனல் டிஆர்பிக்காக வித்தியாசமான அதே சமயம் சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரெண்டிங்கில் இருக்கும் சம்பவங்கள் தொடர்பான ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதில் சேனல்கள் ஆர்வம் காட்டி வருவது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சிகளையும் நெட்டிசன்கள் கலாய்ப்பதும் நடக்கும்.
அந்த வகையில் ஆயுதபூஜை விஜயதசமியை முன்னிட்டு விஜய் டிவி, சன் டி.வி, ஜீ தமிழ் உள்ளிட்ட பல சேனல்கள் புதிய படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பியது. இதில் விஜய் டி.வி தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் புதுமண தம்பதி ரவீந்திரன் மகாலட்சுமியை அழைத்து ஷோ நடத்தினர். இவர்கள் ஏற்கனவே இணையத்தின் ஹாட் டாப்பிக் என்பதால் நிகழ்ச்சிக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.
இதன் காரணமாக விஜய் டி.வி டஃப் கொடுக்க யோசித்த ஜீ தமிழ், சமீபத்தின் தனது அப்பா ராஜ்கிரன் மற்றும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி நடிகர் முனீஸ்ராஜாவை ரகசிய காதல் திருமணம் செய்துகொண்ட அவரது மகள் பிரியாவை அழைத்து ஜீ தமிழ் நிகழ்ச்சியில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜ்கிரன் மகள் பிரியா சீரியல் நடிகர் முனீஸ்ராஜாவை காதல் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட ராஜ்கிரன், தனக்கு ஒரு மகன்தான் இருக்கிறார் என்றும், பிரியா தனது வளர்ப்பு மகள் என்றும், இவர்களின் காதல் விவகாரம் தெரிந்து முனீஸ் குறித்து விசாரித்தபோது அவர் நல்லவர் இல்லை என்பது தெரியவந்தது. எனது பெயரை பயன்படுத்தி அவர் சினிமா வாய்ப்பு கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இந்த அறிக்கை அப்போது வைரலாக பரவிய நிலையில், ராஜ்கிரன் முனீஸ்ராஜா மீது எவ்வளவு கோபமாகவும், வேதனையாகவும் இருக்கிறார் என்பது தெரிந்தது. ஆனால் தற்போது அவரின் கோபத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக, ரகசிய திருமணம் செய்துகொண்ட முனீஸ்ராஜா பிரியா தம்பதியை அழைத்து ஜீ தமிழ் உலகறிய திருமணம் செய்து வைத்துள்ளது.
இந்த திருமணம் சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்த நிலையில், இதை உலகறிய செய்ததற்காக முனீஸ்ராஜா பிரியா தம்பதி ஜீ தமிழுக்கு நன்றியும் தெரிவித்தனர். இந்த காதல் திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், வளர்ப்புமகளாக இருந்தாலும் பிரிந்து சென்ற மகளை நினைத்து வேதனையில் உள்ள ராஜ்கிரனுக்கு இது மேலும் மனவேதனையை தரும் என்று ஜீ தமிழை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.