வில்லி இவ்ளோ அழகா இருந்தா யாருக்குத் தான் பிடிக்காது?!

சைத்ராவுக்கும் தான் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வேண்டுமென்ற ஆசை மிகவும் இருந்ததால் ஓகே சொல்லி விட்டாராம்.

By: Updated: September 7, 2020, 02:16:38 PM

Serial Artist Chaitra Reddy:  ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் ஸ்வேதா கேரக்டரில் க்யூட் வில்லியாக மிரட்டிக் கொண்டிருக்கிறார் சைத்ரா ரெட்டி.

Chaitra reddy 5 தேவதை போல் சைத்ரா ரெட்டி

இவர் முதலில் கன்னட சினிமாவில் கதாநாயகியகவும், வில்லியாகவும் நடித்தார். பின்னர் பட வாய்ப்புகள் குறையவே கன்னடம் மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் இருந்து பிரியா பவானி சங்கர் விலகிய பிறகு, அந்த சீரியலில் நாயகியாக அறிமுகமானார் சைத்ரா ரெட்டி.

Chaitra reddy 5 வில்லி இத்தனை அழகாக இருந்தால், யாருக்குத் தான் பிடிக்காது?

அந்த சீரியலில் பவானி சங்கருக்கு கிடைத்துக் கொண்டிருந்த வரவேற்பு இவருக்கும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தான் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் நடிக்க சைத்ராவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Chaitra reddy 5 அழகான ராட்சசியே…

இந்த சீரியலில், “எனக்கு ஒரு அழகான வில்லி கேரக்டர் தேவைப்படுகிறது. படையப்பா படத்தில் நீலாம்பரி போல அழகா இருக்கணும். அதற்கு நீங்கள் தான் பொருத்தமாக இருப்பீர்கள்” என சைத்ராவிடம் சொன்னாராம் அந்த சீரியலின் இயக்குநர். அப்போது சைத்ராவுக்கும் தான் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வேண்டுமென்ற ஆசை மிகவும் இருந்ததால் ஓகே சொல்லி விட்டாராம்.

Chaitra reddy 5 சிரிப்பால் கவரும் சைத்ரா.

பெங்களூருவில் பிறந்து வளர்ந்த சைத்ரா, அங்கேயே பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார். தாய் மொழியாக கன்னடத்தைக் கொண்ட இவர், நடிப்பு துறைக்கு வருவதற்கு முன்னர் மாடலிங் துறையில் இருந்தார். ஏர் ஹோஸ்டாராக பணியாற்ற வேண்டும் என்பதே இவரது ஆசை. ஆனால் தற்போது நடிப்பு துறைக்கு வந்த பிறகு அந்த ஆசையை மாற்றிக் கொண்டாராம். ஹீரோயின் கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல், வில்லி கதாப்பாத்திரத்திலும் நடித்ததால், இந்த அழகான வில்லிக்கு ரசிகர்கள் குவிந்தனர்.

Chaitra reddy 5 சைத்ரா ரெட்டி

யாரடி நீ மோகினி சீரியலில் சைத்ராவின் உடை மற்றும் ஸ்டைலை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் டிவி முன்பு கூடினர். சைத்ராவுக்கு ஷ்ரவானி என இன்னொரு பெயரும் உள்ளது. இவருக்கு பேட்மிண்டன், கிரிக்கெட் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்குமாம். உணவு என்றால், தென்னிந்திய உணவும், தாய்லாந்து உணவும் சைத்ராவுக்கு பயங்கர இஷ்டம். இன்னும் நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது தான், இவரது அடுத்த இலக்காம்.

இந்த லாக்டவுனில் தான் எடுத்துக் கொண்ட படங்களை தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வந்தார் சைத்ரா. ரசிகர்களின் மனம் கவர்ந்த அந்த படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Zee tamil yaaradi nee mohini chaitra reddy swetha lifestyle

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X