ஜீ தமிழின் திருமதி ஹிட்லர் சீரியலில் மூத்த மருமகளாக நடித்து வருபவர் அர்ச்சனா. இவரது நிஜப்பெயர் சௌமியா ராவ் நாடிக். கர்நாடகாவை சேர்ந்தவர். கன்னட செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் நடிப்பு மீதான ஆர்வத்தில் கன்னட சின்னத்திரைக்குள் நுழைந்துள்ளார். முதல் சீரியலிலேயே செவிலியராக நடித்துள்ளார். தொடர்ந்து சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தமிழில் அறிமுகமானார். சன்டிவியின் வள்ளி சீரியிலில் கோஸ்ட் கேரக்டரில் நடித்தார். விஜய் டிவியின் நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் சத்யா என்ற நெகட்டிவ் ரோலில் நடித்தார். தமிழ், கன்னடம் மட்டுமின்றி தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வந்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள சௌமியா அவ்வபோது ஃபோட்டோஷூட், டப்ஸ்மேஷ் என பதிவிட்டு வருகிறார்.
Advertisment
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil