Advertisment

பாலிவுட்டில் அடுத்த சோகம்: நடிகை ஜோவா மோரானிக்கு கொரோனா

கரீம் மோரானி ஷாருக்கானின் நெருங்கிய நண்பவராவார்.    ரா.ஒன், சென்னை எக்ஸ்பிரஸ், ஹாப்பி நியூ இயர் , தில்வாலே உள்ளிட்ட பல பாலிவுட் படங்களை தயாரித்தவர்.   

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாலிவுட்டில் அடுத்த சோகம்: நடிகை ஜோவா மோரானிக்கு கொரோனா

ஷாருக் கான் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' திரைப்படத்தை தயாரித்த கரீம் மோரானின் மகள் ஷாஸா மோரானிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட சில மணி நேரங்களிலே, அவரது சகோதரியும், பிரபல திரைப்பட நடிகையுமான ஜோவா மோரானிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குடும்ப வட்டாரங்கள்   தெரிவிக்கின்றன.

Advertisment

ஷாருக் கான் தயாரித்த ஆல்வேஸ் கபி கபி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

மோரானி திங்களன்று கொரோனா வைரஸ் தொற்று சோதனை செய்தார். அன்று, மாலையே தொற்று உறுதி செய்யப்பட்டது. கோகிலாபென் திருபாய்  அம்பானி மருத்துவமனையில் தற்போது தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அதே நேரத்தில் ஷாஸா மோரானி நானாவதியில் கண்காணிப்பில் உள்ளார். இந்த குடும்பத்தின் தொடர்பில் இருந்த அனைவரும் தற்போது தனிமைபடுத்தபட்டு கண்காணிப்பில் உள்ளனர் ”என்று பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரத்து: எம்.பி. தொகுதி நிதி பங்கீடு விகிதம் தெரியுமா?

கரீம் மோரானி, கடந்த திங்களன்று, " தனது மகள்கள் இருவரும்    தீவிர கண்காணிப்பில் இருப்பதாக" தெரிவித்திருந்தார்.

"ஷாஸா மோரானிக்கு  எந்த அறிகுறிகளும் இல்லை, இருப்பினும் கொரோனா வைரஸ் பாசிடிவாக வந்துள்ளது. எனது இன்னொரு மகள் ஜோவா மோரானிக்கு  சில அறிகுறிகள் தென்பட்டன. எனவே அவர்கள் இருவரையும் பரிசோதித்தோம். இருப்பினும்,  ஜோவா- விற்கு கொரோனா வைரஸ் நெகடிவாக வந்துள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்" என்று தெரிவித்தார்.

கரீம் மோரானி ஷாருக்கானின் நெருங்கிய நண்பவராவார்.    ரா.ஒன், சென்னை எக்ஸ்பிரஸ், ஹாப்பி நியூ இயர் , தில்வாலே உள்ளிட்ட பல பாலிவுட் படங்களை தயாரித்தவர்.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment