Advertisment

எக்ஸிட் போல் முடிவுகளால் அதிகரித்து வரும் பங்குச்சந்தை புள்ளிகள்... காரணம் என்ன?

ஆட்சி மாற்றம் இல்லை என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு கிடைத்திருப்பதால் பங்கு வர்த்தகத்தில் புள்ளிகள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2019 General election Exit Poll Results Sensex

2019 General election Exit Poll Results Sensex

Sandeep Singh

Advertisment

2019 General election Exit Poll Results Sensex : 2019ம் ஆண்டு பொதுதேர்தலுக்கான, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று மாலை 06:30 மணியில் இருந்து அறிவிக்கப்பட்டன. வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் பாஜகவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்திய பங்கு சந்தைகளின் புள்ளிகள் கணிசமான அளவு உயர்ந்திருப்பதை காண இயலுகிறது. சென்செக்ஸ் மதிப்பு 900 புள்ளிகளை தொட்டுள்ளது. இதற்கான காரணங்கள் என்ன ?

நேற்று பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 86 பைசா அதிகரித்துள்ளது. இன்று காலையில் வர்த்தகம் துவங்கும் போது இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.69.36 ஆக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 2.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 284 புள்ளிகள் அதிகரித்து 11,691 என்ற புள்ளியில் வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 951 புள்ளிகள் அதிகரித்து 38,882 புள்ளியை தொட்டுள்ளது.

சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வதற்கு 2019 General election Exit Poll Results காரணமா?

ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் பங்கு வர்த்தகத்தில் பெரிய அளவு மாற்றங்கள் ஏற்படும் என்பதால் முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தக முதலீடுகள் குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பது வழக்கம் தான். பாஜகவிற்கு ஆதரவாக, தற்போது இருக்கும் ஆட்சி தொடர்ந்து நடைபெற இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு மீண்டும் கிடைத்திருப்பதால் பங்கு வர்த்தகத்தில் புள்ளிகள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

தேர்தல் சூழலில் கடைசி 15 நாட்கள் (மே 1 முதல் மே 15 வரையிலான) சென்செக்ஸ் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 1,913 புள்ளிகள் அல்லது 4.9 % மதிப்புகளை அது இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலை நீடிக்குமா?

கருத்துக் கணிப்புகளின் முடிவுகள், தேர்தல் முடிவுகளாக அமையும் பட்சத்தில் நிச்சயம், இந்த நிலை நீடிக்கும். சென்செக்ஸ் மதிப்புகள் அதிகரிக்கும். இந்திய பங்கு சந்தைகளை தொடர்ந்து கவனித்து வரும் FPIக்கள் இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

மேலும் படிக்க : கருத்துக் கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிவுகள் அல்ல… கடைசி 3 மக்களவைத் தேர்தல் முடிவுகள் தான் இதற்கு உதாரணம்!

Sensex General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment