Advertisment

20வது கால்நடை கணக்கெடுப்பு : நாட்டு உயிரினங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவு!

2012ம் ஆண்டை காட்டிலும் 2018ம் ஆண்டு கணக்கெடுப்பில் எருமை மாடுகள் வளர்ப்பு அதிகமாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
20th livestock census reports

20th livestock census reports

Harikishan Sharma

Advertisment

20th livestock census reports  :  16ம் தேதி மத்திய கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் கால்நடை கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டன. கலப்பின முறையில் புதிய வகைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் நாட்டு மாட்டினங்கள், ஆட்டினங்கள், கோழிகள் போன்ற வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. பசுக்கள் மற்றும் காளைகள் வளர்ப்பு உத்திரப்பிரதேசத்தை விட மேற்கு வங்கத்தில் அதிகரித்துள்ளது.

கால்நடை கணக்கெடுப்பு என்றால் என்ன?

கால்நடை கணக்கெடுப்பில் இந்தியா முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் வளர்க்கப்படுக் கால்நடைகளின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள முடியும். 1919-20 ஆண்டுகளில் துவங்கி தற்போது வரை 20 முறை இவ்வகை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக 2012ம் ஆண்டு இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

எந்தெந்த உயிரினங்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பில் இடம் பெறும் ?

மாடுகள், எருமைகள், செம்மறியாடுகள், ஆடுகள், பன்றிகள், குதிரை, கழுதை, முயல், யானை மற்றும் பறவையினங்களில் கோழி, வாத்து, ஈமு, வான்கோழி போன்றவை கணக்கெட்டுக்கப்படும். 6.6 லட்சம் கிராமங்கள், 89,000 நகரங்கள், புறநகர் பகுதிகளில் இருக்கும் 27 கோடி வீடுகளில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. டெல்லியில் மட்டும் இந்த கணக்கெடுப்புகள் இன்னும் முற்றுபெறவில்லை. முதன்முறையாக இந்த கணக்கெடுப்புகள் டேப்லெட் மூலமாக நடத்தப்பட்டது.

கணக்கெடுப்பு முடிவுகள்

மொத்த கால்நடையின் மதிப்பு 535.78 மில்லியன் ஆகும். மாடுகள் (192.90 மில்லியன்), ஆடுகள் (148.88 மில்லியன்), எருமைகள் (109.85 மில்லியன்), செம்மறி ஆடுகள் (74.26 மில்லியன்), பன்றிகள் (9.06) மில்லியன். இதர விலங்குகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 0.23% ஆகும்.  2012ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை காட்டிலும் தற்போது மக்களால் வளர்க்கப்படும் கழுதைகள், குதிரைகள், பன்றிகள், எருதுகள், மற்றும் ஒட்டகங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

20th livestock census reports

20th livestock census reports

இந்த கணக்கெடுப்பு முடிவுகளின் படி, உள்ளூர் நாட்டு உயிரினங்களின் எண்ணிக்கை 2012ம் ஆண்டை காட்டிலும் 6% குறைந்துள்ளது. மேலும் கலப்பின உயிரினங்களின் எண்ணிக்கை 27% அதிகரித்துள்ளது. அதாவது 50.42 மில்லியன் என்ற அளவில் அதிகரித்துள்ளது. 2012ம் ஆண்டு அதிக அளவு மாடுகளைக் கொண்டிருந்த உ.பியை பின்னே தள்ளிவிட்டு தற்போது முதலிடம் பிடித்திருக்கிறது மேற்கு வங்கம். மத்தியப் பிரதேசம் (4.42%), மகாராஷ்ட்ரா(10.07%) மற்றும் ஒடிசா(15.01%) ஆகிய மாநிலங்களில் கால்நடை வளர்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் மேற்கு வங்கம் (15.18%), பிகார் (25.18%), மற்றும் ஜார்காண்ட் (28.16%) கால்நடை வளர்ப்பு உயர்ந்துள்ளது.

நாட்டு மாடுகள் வளர்ப்பு முன்பைக் காட்டிலும் அதிக அளவில் குறைந்துள்ளது. அதன் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவாக இருப்பதால் எருமைகள், ஆடுகள், செம்மறிகள் போன்ற உயிரினங்களை வளர்க்க துவங்கி விடுகின்றனர். அதன் மூலம் கிடைக்கும் வருவாயும் குறையும் பட்சத்தில் அதனை அடிமாடுகளாகவும், கறிக்காகவும் விற்றுவிடுகின்றனர். இது அவர்களுக்கு ஒருவகையில் லாபத்தையே அளித்து வருகிறது. நாட்டுமாடுகளிடம் இருந்து பெறப்படும் பாலில் அதிக ஊட்டச்சத்து இருக்கிறது என்பதால் இந்த எண்ணிக்கை குறைவை நினைத்து ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எருமை மாடுகளை வளர்க்க ஆர்வம் காட்டும் மாநிலங்கள்

2012ம் ஆண்டை காட்டிலும் 2018ம் ஆண்டு கணக்கெடுப்பில் எருமை மாடுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ராஜஸ்தான், குஜராத், உ.பி. பிகார், மகாராஷ்ட்ரா, மத்தியப்பிரதேசம், தெலுங்கானா மாவட்டங்களில் அதிக அளவில் எருமைகள் வளர்க்கப்படுகின்றன. 108.70 மில்லியனில் இருந்து 109.85 மில்லியனாக அதிகரித்துள்ளது எருமை மாடுகளின் எண்ணிக்கை.  வளர்ப்பு பறவைகளை பொறுத்தமட்டில் 851.81 மில்லியன் பறவைகள் வளர்க்கப்படுகின்றன. 317.07 பறவைகள் வீடுகளிலும், வீட்டுப் பண்ணைகளிலும் 534.74 பறவைகள் கமர்சியல் பௌல்டிரியிலும் வளர்க்கப்படுகின்றன. வீட்டுப்பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகளின் எண்ணிக்கை 46% உயர்ந்துள்ளது.

வளர்ப்பு பறவைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக உள்ளது. தமிழகத்தை தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, அசாம், ஹரியானா, கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்களில் இறைச்சிகாக கோழிகள் மற்றும் வாத்துகள் வளர்க்கப்படுகிறது. அசாமில் 71.63% பண்ணைப் பறவைகளின் வளர்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment