Advertisment

வைரஸ் பரவலை மலிவு விலை “ஏர் க்ளீனர்” எப்படி குறைக்கும்?

இந்த சூழ்நிலையில், HUV க்கு அருகில் ஏர் கிளீனரை வைக்க ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
A low-cost air cleaner can greatly reduce transmission of virus

A low-cost air cleaner can greatly reduce transmission of virus: மேம்படுத்தப்பட்ட காற்றோட்டமான சூழல் கொரோனா பரவலை குறைக்கும் என்று ஆயாச்சிகள் கூறுகின்றன. ஆனால் பல பள்ளிகளில் போதுமான அளவு காற்றோட்ட வசதிகள் இல்லை என்பது எதார்த்தம். ஆராய்ச்சியாளார்கள் முன்மொழிந்த கருத்தினை நிரூபிக்க பாக்ஸ் ஃபேனுடன் கூடிய காற்று சுத்தகரிப்பானை பயன்படுத்த வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க இயற்பியல் நிறுவனம் ( American Institute of Physics) பதிப்பித்துள்ள Physics of Fluids இதழில் இது போன்ற மலிவு விலையில் கிடைக்கும் அலகுகளை முறையாக பயன்படுத்தினால் வைரஸ் பரவலை குறைக்க முடியும் என்று கூறியுள்ளது.

Advertisment

ஒரு கார்ட்போர்டில் காற்று வடிப்பான் மற்றும் பாக்ஸ்ஃபேன் ஆகியவற்றை இணைத்து இந்த குறைந்த விலை காற்று சுத்தகரிப்பானை உருவாக்க முடியும். விசிறி மற்றும் அட்டைத் தளத்திற்கு இடையில் காற்று வடிகட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே மேலே இருந்து உள்ளே வரும் காற்று வடிப்பான் மூலம் சுத்திகரிக்கப்பட்டு உள்ளே காற்றை அனுப்பும்.

மேலும் படிக்க : அனைவருக்கும் தடுப்பூசி; விரைவில் திட்டத்தை அறிவிக்க இருக்கும் அரசு

2 சுதந்திரமாக செயல்படும் ஆய்வகங்களில் சோதனைகள் மூலம் விஞ்ஞானிகள் காற்று சுத்தம் செய்யும் முறையில் பெறப்படும் சுத்தமான காற்று விநியோக வீதத்தை அளவிட்டனர். புகையிலையின் புகை வைரஸை உருவகப்படுத்த பயன்படுத்தப்பட்டது.

சோதனை அளவீடுகள் ஒரு வகுப்பறையின் விரிவான கணக்கீட்டு மாதிரியில் இணைக்கப்பட்டன. பெட்டி விசிறி, ஏர் கிளீனருடன் கூடுதலாக, உருவகப்படுத்துதலில் HUV (கிடைமட்ட அலகு வென்டிலேட்டர்) எனப்படும் காற்றோட்ட அலகு சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு தனிமனிதரிடம் இருந்து ஆயிரக்கணக்கான வைரஸ்கள் பரவுவதாக உருவகப்படுத்தி, அந்த தனிநபர் ஒரு ஆசிரியர் என்று நினைத்து இந்த ஆராய்ச்சியை பல்வேறு இடங்களில் நடத்தியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

பாதிக்கப்பட்ட ஆசிரியரையும் பாக்ஸ் ஃபேன் ஏர் க்ளீனரையும் வெவ்வேறு இடங்களில் வைத்து நடத்தப்பட்ட சோதனையில் சிறந்த முடிவுகள் பெறபப்ட்டன. பாதிக்கப்பட்ட நபருக்கு அருகில் ஏர் கிளீனரை வைப்பது சிறந்தது என்றாலும், யார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை எப்போதும் அறிந்து கொள்ள முடியாது. இந்த சூழ்நிலையில், HUV க்கு அருகில் ஏர் கிளீனரை வைக்க ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment