Advertisment

இமாச்சல்: காங்கிரஸ் வெற்றிக்கு டாப் 5 காரணங்கள் இவைதான்!

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 68 இடங்களில் 40 இடங்களில் முன்னிலை பெற்று பெரும்பான்மையில் உள்ளது.

author-image
WebDesk
New Update
இமாச்சல்: காங்கிரஸ் வெற்றிக்கு டாப்  5 காரணங்கள் இவைதான்!

இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 68 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும். இமாச்சல் பிரதேசத்தில் தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைய வாய்ப்புகள் உள்ளன.

Advertisment

பா.ஜ.க 26 இடங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் 1985-ம் ஆண்டு முதல் ஒரு மரபு உள்ளது. ஆளும் கட்சி தொடர்ச்சியாக அடுத்த தேர்தல்களில் வெற்றி பெறுவதில்லை. இதை முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் முறியடிப்பார் என பா.ஜ.க கூறிவந்த நிலையில் இதன் போக்கு மாறியுள்ளது.

5 காரணங்கள்

  1. மாநிலத்தின் பாரம்பரியம் மேலோங்கியது

இமாச்சலத்தில் கடந்த 37 ஆண்டுகளாக, ஆளும் கட்சிக்கு அடுத்த முறை மக்கள் வாய்ப்பளிப்பதில்லை. அதாவது தொடர்ச்சியாக வெற்றி பெற வாய்ப்பளிப்பதில்லை. ஒவ்வொறு முறையும் காங்கிரஸ், பா.ஜ.க என மாற்றி மக்கள் வாக்களிக்கின்றனர். மாநிலத்தின் மிகவும் பிரபலமான இரண்டு முதல்வர்கள் காங்கிரஸின் வீரபத்ர சிங் மற்றும் பாஜகவின் பிரேம் குமார் துமால் கூட இந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றத் தவறிவிட்டனர்.

இந்தத் தேர்தல்களிலும் வாக்காளர்கள் இந்தப் பாரம்பரியத்தை உண்மையாகக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி கூட கட்சிகளை மாற்றும் இந்த "ரிவாஸை" மாற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார். ஆனால் மக்கள் பாரம்பரியத்தை பின்பற்றியதாகவே தெரிகிறது.

கட்சியில் தொடரும் தலைமைத்துவ நெருக்கடி மற்றும் ஆறு முறை முதல்வராக இருந்த வீரபத்ர சிங் மறைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை கருத்தில் கொண்டு மக்கள் காங்கிரசை தேர்ந்தெடுத்ததாக தெரிகிறது. குஜராத்தில் பாஜகவுக்கான ஆதரவு அலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு அதன் உருவான பெருமையை மலைப்பகுதியில் காங்கிரஸ் தக்கவைத்துள்ளது.

  1. அரசு ஊழியர்களின் ஆதரவு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம்

அரசு ஊழியர்கள் மாநிலத்தில் ஒரு வலிமையான வாக்கு வங்கியை உருவாக்குகிறார்கள். இன்றும், அவர்கள் 2 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர், மேலும் 5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளனர். இவர்கள் நீண்ட காலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி வந்தனர். காங்கிரஸ் இதை அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தது. பாஜக அத்தகைய வெளிப்படையான கருத்துக்களை வெளியிடவில்லை.

  1. அரசு செயல்படவில்லை என்ற உணர்வு, பாஜக அதிருப்தியாளர்கள்

முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் நேர்மையானவராக இருந்தும் தனக்கு நெருக்கமான ஒரு குழுவை வைத்து அரசு நடத்த விடுகிறது என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது. தலைமைச் செயலாளர்கள் அடிக்கடி மாற்றம். கடந்த 5 ஆண்டுகளில் 7 பேர் நியமனம் செய்யப்பட்டனர். காவல்துறை ஆட்சேர்ப்பு ஊழல், அரி நகர் பஞ்சாயத்து அறிவிப்பு, சிம்லா வளர்ச்சித் திட்ட வரைவு போன்ற சில அவசர முடிவுகள் அறிவிக்கப்பட்டு ,திரும்ப பெற்றவை முதல்வர் பொறுப்பில் இல்லை என்ற எண்ணத்தை கூட்டியது.

மேலும், 11 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காதது பாஜகவில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் பாஜக எதிராக செயல்பட வழிவகுத்தது. பாஜக வாக்குளை கணிசமாக பிரித்தனர்.

  1. இமாச்சலத்தின் பெருமையான ஆப்பிள் உற்பத்தியில் மகிழ்ச்சியின்மை

மேல் இமாச்சலப் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தும் மாநிலத்தின் செழிப்புக்கான திறவுகோலை வைத்திருக்கும் ஆப்பிள் உற்பத்தியில் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடையவில்லை. தொழிலாளர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அதானி குழுமம் வழங்கும் குறைந்த விலையால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

அட்டைப்பெட்டிகள் மீதான ஜிஎஸ்டி அதிகரிப்பு ஆப்பிள் விவசாயிகளின் லாபத்தை மேலும் முடக்கியது. தோட்டக்கலையை பெருநிறுவனமயமாக்கும் முயற்சிக்கு எதிராக ஆப்பிள் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த வளமான மற்றும் பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தும் குழுவின் மகிழ்ச்சியற்ற தன்மை, அரசின் செயல்பாடு பாஜகவிற்கு எதிரான கோபத்திற்கு பங்களித்திருக்கலாம்.

  1. அக்னிபத், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு

இமாச்சல பிரதேசத்தில் ஆண்டுதோறும் ஏராளமான இளைஞர்கள் ஆயுதப்படையில் சேர்கின்றனர். மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே ராணுவத்தில் பணிபுரிய முடியும் என்றது மாநிலத்தில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாஜகவில் சேர்ந்த மேஜர் விஜய் மன்கோடியா போன்ற மூத்த தலைவர்களும் இந்த திட்டம் குறித்து தங்கள் அச்சங்களை வெளிப்படுத்தினர். கிராமங்களில் இந்த "வாழ்வாதார இழப்பு" பற்றி பரவலான கவலை இருந்தது.

பாஜகவின் விலைவாசி உயர்வு அக்டோபர் 2021-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் மக்களவைத் தொகுதியான மண்டி மற்றும் ஃபதேபூர், அர்கி, ஜுப்பல் கோட்காய் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு கிராமப்புற பெண்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. பணவீக்கத்திற்கு மத்திய அரசு மீது குற்றம் சாட்டப்பட்டதில் இருந்து இரட்டை எஞ்சின் அரசாங்கம் என்ற பாஜகவின் கூற்றிற்கு இமாச்சல் முடிவுகள் பின்னடைவாகவே உள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment