Advertisment

ஆப்கானிஸ்தான் ஜனநாயக அமைப்புகளில், வர்த்தகத்தில் முதலீடு செய்யவில்லை அமெரிக்கா - கௌதம் முகோபாதயா

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தோல்வி மற்றும் தலிபான்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வழிவகுத்தது என்ன? இந்தியா அதன் நிதி, உத்தி மற்றும் அரசியல் முதலீடுகளால் பெற்றது என்ன அல்லது இழந்தது என்ன? என்பதை விளக்குகிறார் கௌதம் முகோபாதயா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Afghanistan, Taliban takeover, Taliban, Afghanistan crisis, ஆப்கானிஸ்தான், தலிபான்கள், இந்தியா, அமெரிக்கா, கௌதம் முகோபாதயா, India, Pakistan, Goutham Mukhopadhaya, America, US

கௌதம் முகோபாதயா: அமெரிக்கா, ஆப்கானிஸ்தானுடய ஜனநாயக நிறுவனங்களிலும் வர்த்தகத்திலும் அல்லது அதன் ராணுவத்திலும்கூட முதலீடு செய்யவில்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தோல்வி மற்றும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் வருவதற்கு வழிவகுத்தது என்ன? இந்தியா அதன் நிதி, உத்திகள் மற்றும் அரசியல் முதலீடுகளால் பெற்றது என்ன அல்லது இழந்தது என்ன? போன்றவை குறித்து விரிவாகக் கூறுகிறார்.

Advertisment

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தோல்வி மற்றும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வழிவகுத்தது என்ன? இந்தியா அதன் நிதி, உத்திகள் மற்றும் அரசியல் முதலீடுகளால் பெற்றது என்ன அல்லது இழந்தது என்ன? காபூலுக்கான முன்னாள் தூதர் கௌதம் முகோபாதயா விளக்குகிறார். இறுதியாக அமெரிக்கர்கள் வெளியேறுவதற்கு முன்பு, கடந்த மாதம் முகோபாதயா உடனான உரையாடலில் இருந்து சில பகுதிகள் மற்றும் முழு வீடியோ இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா தோல்வியடைந்தது எங்கே:

ஆரம்பத்திலேயே தோல்வி சரியாக இருந்தது. அல்கொய்தா மற்றும் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்க அவர்கள் தலையிட்டதாக அமெரிக்கர்கள் தெளிவாக இருந்தனர். சரியாகச் சொல்வதானால், ஆப்கானியர்களை தலிபான்களிடமிருந்து விடுவிக்க அவர்கள் இருப்பதாக அவர்கள் கூறவில்லை. ஆனால், ஒசாமா பின்லேடனைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு 10 ஆண்டுகள் பிடித்தன மேலும் அல்-காய்தா ஒழிக்கப்பட்டது என்று கோட்பாட்டளவில் சொல்லக்கூடிய ஒரு நிலையை அடைந்தனர்.

ஆனால், அல்-கொய்தாவின் இருப்பு பாகிஸ்தானிலிருந்து ஊக்குவிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட தீவிரவாதத்திலிருந்து வெளிவந்தது என்ற யதார்த்தத்தை அவர்கள் நேருக்கு நேர் எதிர்கொண்டனர். இரண்டாம் கட்டத்தில் <ஈராக் போருக்குப் பிறகு>, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் தீவிரவாதத்திற்கு எதிராக இருந்து கிளர்ச்சிக்கு நகர்ந்தது. போரின் தோற்றம் பாகிஸ்தானில் இருந்ததால், ஒபாமா ரிச்சர்ட் ஹோல்ப்ரூக்கிற்கு 'ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்' ஆணையை கொண்டு வந்தார். ஒபாமாவுக்கு முன்பு, புஷ் பாகிஸ்தானே பிரச்சனைக்கு மூல காரணம் என்பதை உணர்ந்திருந்தார். மேலும், டிரம்ப் தனது தெற்காசிய உத்தியில் ஆகஸ்ட் 2017ல் அதே முடிவுக்கு வந்தார். அவர் குறிப்பாக, மிகவும் உறுதியாக பாகிஸ்தான் என்று பெயர் குறிப்பிட்டார். ஆனால், சில காரணங்களால், எந்த அமெரிக்க நிர்வாகமும் அந்த கண்டுபிடிப்பின் தர்க்கத்தை அதன் முடிவுக்கு கட்டாய ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி தொடர முடியவில்லை. பல ஆண்டுகளாக, ஆப்கானிஸ்தான் அதிபர் (ஹமீத்) கர்சாய் அமெரிக்கர்களிடம், "நீங்கள் ஏன் ஆப்கானிஸ்தானில் சண்டையிடுகிறீர்கள், போர் உண்மையில் பாகிஸ்தானிலிருந்து தொடங்குகிறது.” என்று வாதிட்டார்.

மேலும், அமெரிக்கா யுத்த முயற்சியிலும் ஊடகங்களிலும் சிவில் சமூகத்திலும் பெண்கள் மற்றும் பல விஷயங்களில் பணத்தை செலவழித்தாலும், அவர்கள் ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்யவில்லை. ஆப்கானிஸ்தான் 3 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள கனிம வளத்தில் அமர்ந்திருப்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், அதில் ஒரு முதலீடுகூட செய்ய இல்லை. அமெரிக்கர்கள் ஜனநாயக நிறுவனங்களில்கூட முதலீடு செய்யவில்லை; அவர்கள் வர்த்தகத்தில் முதலீடு செய்யவில்லை. அவர்கள் வர்த்தகத்தில் முதலீடு செய்ய விரும்பியிருந்தால், பாகிஸ்தானின் வழியாக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இருவழி போக்குவரத்து வர்த்தகத்தை திறக்க அவர்கள் பாகிஸ்தானை தள்ளியிருக்கலாம். அவர்கள் நிறைய பணம் செலவழித்தார்கள். ஆனால், அந்த பணம் ஏராளமான அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் ஒப்பந்தக்காரர்கள், சந்தர்ப்பவாதிகள் மற்றும் அதிகார தரகர்களின் கைகளுக்கு எந்த பலனும் அளிக்காமல் சென்றது.

வேறு பல விஷயங்களாலும் பிரச்சனை அதிகரித்தது; நான் ஒரு முக்கிய விஷயத்தை குறிப்பிடுகிறேன். தலிபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் நிர்வாகம் முதன்முதலில் சென்றபோது, ​​பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அவர்கள் தங்கள் முக்கிய ராஜதந்திர போட்டியாளர்களான சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகியவற்றுக்கு அந்த பகுதியில் திறம்பட நிகர பாதுகாப்பை வழங்கியுள்ளனர் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள் என்று நினைக்கிறேன். காரணம், ஆப்கானிஸ்தானை அதன் ராஜதந்திர முக்கியத்துவத்தின் அடிப்படையில் அவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லை; ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி மற்றும் பிராந்தியத்தின் உறுதிப்படுத்தலுக்கு அவர்கள் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளை அவர்கள் வீணடித்தனர். அதனால், அவர்கள், "நாங்கள் வெளியேறுகிறோம், இந்த அரசாங்கம் ஊழல், முதலியன; இப்போது உள்நாட்டுப் போர் அல்லது எதுவாக இருந்தாலும் அது உங்கள் தலைவலி என்று விட்டுவிட்டனர். அவர்கள் எல்லாவற்றையும் குறைத்தார்கள் - மத்திய ஆசிய குடியரசுகள், இந்தியா, ஆப்கானியர்கள் ஆகிய இணை சேதத்தை மட்டுமே குறைத்தனர்.

அங்கே மற்றொரு விளக்கம் இருக்கலாம் - அமெரிக்கர்கள் வேண்டுமென்றே தலிபான்கள் தங்கள் ராஜதந்திர போட்டியாளர்களுக்காக பிராந்தியத்தை சீர்குலைக்க வசதியாக திரும்பினர். அவர்களுடைய முகத்தில், அமெரிக்கா மற்ற எல்லா இடங்களிலும் சீனாவைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஆனால், மத்திய ஆசியாவில் அவர்களுக்கு ஒரு வெர்ச்சுவல் ராஜதந்திர அனுமதி கொடுக்க வேண்டும் என்பது குழப்பமாக இருக்கிறது … ஆனால் அவர்கள் அவர்களுக்கு ஒரு ராஜதந்திர அனுமதி கொடுக்கவில்லை என்பது உண்மை. உண்மையில், அவர்கள் சோவியத்துகளை ஆப்கானிஸ்தானுக்கு அழைத்துச் சென்றதைப் போலவே அவர்களை ஈர்க்க முயன்றனர். ஒரு புதிய கரடி பொறி அது இந்த முறை சீனர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று யூகிக்கிறேன்.

தலிபான்களும் ஜனநாயகமும் பொருத்தமில்லாதவையா?

தலிபான்கள் 1994ல் தொடங்கப்பட்ட 100 சதவிகித பாகிஸ்தானிய திட்டமாகும். இப்போது அவர்களுக்கு 27 வயதாகிறது. அவர்கள் 2001ல் தோற்கடிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு சென்ற பிறகு அவர்கள் ஒரு பிறழ்வுக்கு உட்படுத்தப்பட்டனர். தீவிர தியோபண்டி அல்லது வஹாபி முல்லாக்களால் நடத்தப்படும் பாகிஸ்தானின் அகதி முகாம்களுடன் தொடர்புடைய மதரஸாக்களில் அவர்கள் அழைத்து வரப்பட்டனர். அந்த பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான மதரஸாக்கள் உள்ளன. எனவே 5 அல்லது 6 அல்லது 10 வயதுடையவர்கள் <அப்போது>, இன்னும் சண்டையிடும் வயது <இப்போது> இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த மாணவர்கள் தற்கொலை குண்டுவீச்சாளர்களாக ஆக்கப்பட்டார்கள். மேலும், உண்மையில் தற்கொலை குண்டு வெடிக்கச் செய்யும் ஒவ்வொரு குண்டுவீச்சாளருக்கும், ஒரு பெரிய ஆதரவு குழு இருந்தது. ஆட்சேர்ப்பு தொடங்கி பயிற்சி வரை மூளை சலவை வரை தளவாடங்கள் வரை எல்லாமே இருந்தன.

பாகிஸ்தானிய திட்டம், ஆப்கானியர்களின் ஒரு தொகுதியை உருவாக்குவது ஆகும். இது அகதி முகாம்களில் வளர்ந்த மக்களின் ஆப்கான் மற்றும் பஷ்டூன் அடையாளங்களை திறம்பட அழித்து. ஒரு பெரிய பான்-இஸ்லாமிய அடையாளத்தில் எமிரேட் அல்லது கலிபாவின் கீழ் வைப்பது ஆகும். ஆப்கானிஸ்தானுக்கும் எமிரேட்டுக்கும் இடையே ஒரு தேர்வு வரும்போது, ​​தலிபான்கள் அமீரகத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் உண்மையில் ஆப்கானிஸ்தானை தங்கள் இதயத்தில் வைத்திருந்தால், அவர்கள் ஆப்கானியர்களுடன் சமாதானம் செய்திருக்க முடியும். ஆனால், உண்மையில், அவர்களைப் போல் சிந்திக்காத, எமிரேட்டை ஏற்காத, இன்னும் சிந்திக்கும் பிற ஆப்கானியர்களுக்கு எதிரான போர் ஒரு ஆப்கான் தேசிய அடையாளப் போர் என்று கருதப்படுகிறது.

ஜனநாயகம் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினால், மக்கள் அதை ஒரு மேற்கத்திய திணிப்பு என்று நினைக்கிறார்கள். உண்மையில், ஜனநாயகம் என்பது சகவாழ்வு மற்றும் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கான குறியீடாகும். இது ஜனநாயகத்தின் வடிவம் அல்ல; ஜனநாயகத் திட்டத்தில் பொதிந்துள்ள சுதந்திரம் மற்றும் உரிமைகளின் சக்தி செய்கிறது. ஆப்கானியர்கள் கடந்த 20 ஆண்டுகளில் அந்த சுதந்திரத்தையும் அந்த உரிமைகளையும் விரும்புவதில் தங்களுக்கு நிகர் இல்லை என்பதை காட்டியுள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் <ஆப்கானிஸ்தானில் நடந்த போர்>, மிக சமீபத்திய 20 ஆண்டுகளில்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளின் ஏற்றுமதி இல்லாத ஒரே கால கட்டம் ஆகும். உண்மையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியே சென்றவர்கள் திரும்பி வந்தனர். ஒரு புதிய தலைமுறை வளர்ந்தது. அவர்கள் உண்மையில் சண்டையையும் போரையும் பார்க்கவில்லை.

தலிபான்களுடன் பேசக் கூடாது என்பது இந்தியாவின் தேர்வா? அல்லது இந்தியா பேச வேண்டுமா? - அவர்கள் ஒருவேளை பாகிஸ்தானை அணுகவும் முயற்சி செய்யலாம் இல்லையா:

தாலிபான்களுடன், சில குழுக்களுடன், தனிநபர்கள் அல்லது ஒரு பிரிவினருடன் விவேகமான, திரைமறைவில் தொடர்பு கொள்வதில் இந்தியா சரியாகச் செய்தது. ஆப்கானிஸ்தான் மக்களும் அரசாங்கமும் நிச்சயமாக மிகவும் ஆர்வமாக இல்லை. எனவே, நீங்கள் (இந்தியா) தலிபான்களுடன் பேசியிருந்தால், அது சமாதான செயல்முறையின் பின்னணியில் இருந்திருக்க வேண்டும். தோஹா பேச்சுவார்த்தையில் நாங்கள் பிரதிநிதித்துவம் செய்தபோது, குறிப்பாக உள்நாட்டில் - ஆப்கான் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால், மற்ற எல்லா நாடுகளும் செய்தது போல், ஆப்கானியர்களின் முதுகுக்குப் பின்னால் ஒரு ஒப்பந்தம் செய்யப் பேசுவது, என்பது சுயநலத்திற்காக, தலிபான்களை எதிர்த்து அந்நாட்டில் பெரும்பான்மையை உருவாக்கிய ஆப்கானிஸ்தான் மக்களுக்கு துரோகம் செய்திருப்பதாக இருக்கும். கடந்த 25 ஆண்டுகளாக நீங்கள் தலிபான்களுடன் கல்வி, ஊட்டம் மற்றும் ஆதரவளித்த தலைமுறையை மாற்ற முடியாது.

மேலும், தலிபான்களை அணுகுவதன் மூலம், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு ராஜதந்திர நண்பரை நீங்கள் வெல்லலாம் என்று நீங்கள் நினைத்தால், நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம் என்று அர்த்தம். இது ஒரு பழைய உறவு, மற்றும் நிறைய தலிபான்கள் அதை விரும்பவில்லை என்றாலும், அவர்களால் அதிகம் செய்ய முடியாது; அவர்கள் பாகிஸ்தானியர்களின் பிடியில் மிகவும் இறுக்கமாக உள்ளனர். மிக முக்கியமாக, ஆப்கானிஸ்தானின் மிக முக்கியமான வரலாற்று கூட்டாளியான இந்தியா, தலிபான்களுக்கு சட்டபூர்வமான உரிமையை வழங்கியிருக்கும். இந்த செயல்பாட்டில், சுதந்திரத்தை விரும்பும் தலைமுறைக்கு தலிபான் துரோகம் செய்தது.

வெளியேற்றத்தின் போது அவர்கள் பயிற்சி செய்ததாக நான் நினைக்கிறேன். இதனால், நாங்கள் <தூதரகத்திலிருந்து> விமான நிலையத்திற்குச் செல்ல முடிந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தும் நேரம் இப்போது வரும் என்று நானும் நினைக்கிறேன். அவர்கள் எந்த வகையான அரசாங்கத்தை செய்வார்கள். அது இடைக்கால அரசாங்கமா அது அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கமா என்பதை நாம் பார்க்க வேண்டும்; பிரிவுகளுக்கு இடையே உரல் இருக்கிறதா என்று பார்ப்போம்; யார் நம்மை அணுக முடியும் அல்லது அணுக தயாராக இருக்கிறார்களா; ஐஎஸ்ஐயின் கட்டுப்பாட்டை நீர்த்துப்போகச் செய்ய முடியுமா - இப்போது அந்த விளையாட்டை விளையாட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தலிபான்களைக் கையாள்வதில் பாகிஸ்தானுடன் நாம் ஒத்துழைக்க முடியுமா - இப்போது நம் உறவுகளின் ஒட்டுமொத்த நிலையைப் பார்த்தால் அது மிகவும் கடினமாகத் தெரிகிறது. 2010-13 வரை நான் காபூலில் தூதராக இருந்தபோது, ​​விஷயங்கள் மிகவும் சிறப்பாக இருந்தபோதுகூட, பாகிஸ்தானியர்கள் அடிக்கடி நீங்கள் ஆப்கானிஸ்தானைப் பற்றி எங்களிடம் பேச வேண்டும் என்று சொல்வார்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறுவோம். ஆனால் அவர்கள் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அவர்கள் அதில் மதிப்பெண் எடுப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினார்கள்.

தலிபான்களுக்குள் உள் எதிர்ப்பு தொடர்பாக:

நாம் கண்ட தன்னிச்சையான எதிர்ப்பு மிகவும் நெருக்கமானது. தலிபான் ஆட்சியை நிராகரிக்கும் பெண்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் … ஆகஸ்ட் 19 ஆப்கானிஸ்தான் சுதந்திரத்தின் ஆண்டுவிழா, மற்றும் ஆப்கான் கொடியுடன் காபூலில் நீண்ட ஊர்வலங்கள் இருந்தன. குனார், அசதாபாத், கோஸ்ட் மற்றும் ஜலாலாபாத் போன்ற இடங்களிலும், பஷ்தூன் அல்லாத பகுதிகளிலும், இந்த கொடி எதிர்ப்புகள் பிடித்துள்ளன.

இந்த எதிர்ப்பு பஞ்ஸிரிகள், தாஜிக்கள் மற்றும் பிற இனக்குழுக்களிடையே மட்டும் இருக்கப் போவதில்லை. ஆனால், தலிபான்கள் மத்தியில் பெரும்பான்மையாக இருக்கும் பஷ்துன்களிடையே கூட தலிபான் ஆட்சி பற்றி வெறுப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஹெராத்தில் இஸ்மாயில் கான் மற்றும் மசார் பகுதியில் (உஸ்பெக்) ஜெனரல் தோஸ்தம் மற்றும் (தாஜிக்) அட்ட நூர் ஆகியோரின் எதிர்ப்பில் ஒரு வகையான முயற்சி இருந்தது. அஷ்ரப் கனி அரசாங்கத்தின் சரணடைதல் காரணமாகவும், ஓரளவிற்கு கிசுகிசுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் இராணுவப் பிரிவுகளுக்குச் சென்று சண்டையிட வேண்டாம் என்று தோன்றியது.

ஆப்கானியர்கள் பெரிதும் சிக்கியதற்கு ஒரு காரணம், போர் மற்றும் பயங்கரவாதத்தால் சோர்வு, ஒரு வகையான ராஜினாமா; அரசாங்கத்துடனான முழுமையான துண்டித்தல், சக்தியற்ற உணர்வு ஆகியவை ஒரு காரணமாக இருந்தது. எனவே, அவர்கள் ஒரு காலத்தில் தலிபான்களைப் பார்த்தபோது … ஒரு பெரிய பிரச்சாரப் போர், வெல்ல முடியாத தன்மை மற்றும் தவிர்க்க முடியாத ஒரு உருவத்தை வெளிப்படுத்தும் ஒரு வகையான உளவியல் போர், அதற்குப் பதிலடியை ஆப்கானியப் படைகள் உண்மையில் வைக்கவில்லை என்பதைக் கண்டது. ஒரு சண்டையில், பெரும்பான்மை (மக்கள்) அலை மாற்றத்தை ஏற்றுக்கொண்டனர்.

பொது மன்னிப்பு மற்றும் பொறுப்பை உணர்த்தும் வகையில், தாலிபான்கள் செய்தி அனுப்புவது போல் செயல்படுகிறார்களா என்பதை நாம் பார்க்க வேண்டும். அது களத்தில் தெரியவில்லை. தலிபான் போராளிகள் திட்டமிடல்களுடன் நடக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவானவர்கள் அல்லது அவர்களை எதிர்ப்பவர்கள் என மக்கள் அடையாளம் காணப்பட்டனர்; இந்தியாவுடன் நெருக்கமாக பழகிய மக்களைப் பற்றிய அச்சங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். இதற்கிடையில், பணப் பற்றாக்குறையும் உள்ளது. அன்றாட வாழ்க்கைக்கு ஏற்பாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. விமான நிலையத்திற்கு செல்லும் பாதையைத் தடுத்ததில், காபூலில் இருந்த அனைவரையும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி கட்டாயப்படுத்தினர். சர்வதேச சமூகம் அவர்களை சமாளிக்க கட்டாயப்படுத்த அவர்கள் களத்தில் தங்கள் இருப்பை மேம்படுத்துகிறார்கள். அது மனிதாபிமான பிரச்சினைக்கும் பொருந்தும்.

பார்வையாளர்கள் கேள்வி

20 ஆண்டுகளாக 3,00,000 ஆப்கான் துருப்புக்கள் அமெரிக்கர்களால் பயிற்றுவிக்கப்பட்டது ஏன்?

3,00,000-3,50,000 வரை ஒரு வலுவான ஆப்கானிஸ்தான் இராணுவம் உருவாக்கப்பட்டது. ஆனால், அமெரிக்கர்கள் பயங்கரவாத எதிர்ப்பு திறன்களில் மட்டுமே முதலீடு செய்தனர்; அவர்கள் ஒருபோதும் எல்லைகளைப் பாதுகாக்கும் அல்லது பிரதேசத்தை வைத்திருக்கும் ஒரு இராணுவத்தை உருவாக்கவில்லை. மேலும், அவர்களுக்கு பீரங்கி, கவசம், தளவாடங்கள், இயக்கம், பொறியியல் மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றை வழங்கவில்லை. அந்த இராணுவம் 3,00,000-க்கும் மேல் இருந்ததா என்பதும் கேள்விக்குரியது. மேலும், அதில், மற்ற சிக்கல்களும் இருந்தன - இராணுவ நியமனங்கள் மற்றும் பழைய இனப் போட்டிகள் போன்றவை இருந்தன.

இந்தியா தவறாக நம்பியதா? ஆப்கானிஸ்தான் மீதான கொள்கையை முழுமையாக மாற்ற வேண்டுமா?

நாங்கள் ஒரு முற்போக்கான ஆப்கானிஸ்தான் மீது நம்பிக்கை வைத்தோம். கடந்த 25 ஆண்டுகளில் எங்களுக்கு பலன் கிடைத்தது. திடீரென்று குதிரைகளை மாற்றுவதன் மூலம், நீங்கள் அங்கே எங்கேயும் இருக்க முடியாது. மேலும், ஜனநாயகம் தீவிரவாதத்திற்கு ஒரு மருந்தாக இருக்கும் என்று நாங்கள் நம்பினோம். ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் நடைமுறையில் இருந்த விதம் அதற்கு வழிவகுக்கவில்லை. ஆனால், மக்கள்-மக்களுக்கிடையிலான உறவை மீண்டும் வலுப்படுத்த நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம். இந்தியாவிலிருந்து ஒரு டாலர் வந்தால் அது அமெரிக்காவிலிருந்து வருகிற நூறு டாலருக்கான மதிப்புடையது என்று கர்சாய் சொல்வார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Afghanistan Taliban Taliban Take Kabul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment