Advertisment

Explained: 2019-ல் இந்தியா-பாகிஸ்தான் வர்த்தகம் எப்படி சரிந்தது ?

ஏற்கனவே குறைந்த அளவில் காணப்படும் இந்தியா- பாகிஸ்தான் வர்த்தக மதிப்பு, புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian pakistan trade, Indian pakistan trade volumes in 2019, Indian pakistan relation

Indian pakistan trade, Indian pakistan trade volumes in 2019, Indian pakistan relation

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் கடந்த ஆண்டு மிகவும் அதிகரித்தது. இதன் விளைவாக ஏற்கனவே குறைந்த அளவில் காணப்படும் இரு நாட்டு வர்த்தகம், தற்போது  பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது.

Advertisment

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் கான்வாய் மீதான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவின் இணக்கமான நாடு பாகிஸ்தான் (எம்எஃப்என்) என்ற அந்தஸ்தை இந்தியா வாபஸ் பெற்றது. (உலக வணிக அமைப்பு கோட்பாட்டின் கீழ் ஒரு நாட்டுக்கு மற்றொரு நாடு வழங்கும் வர்த்தக அந்தஸ்தாகும். 1996ம் ஆண்டு இந்தியா இந்த அந்தஸ்தை பாகிஸ்தானுக்கு வழங்கியது)

இதன் விளைவாக பாகிஸ்தான் நாட்டில் இருந்து வரும் இறக்குமதிகள் மீதான சுங்க வரியை 200% ஆகவும்  உயர்த்தியது. மேலும்,ஏப்ரல் மாதத்தில் இரு நாடுகளுக்கு இடையில் இருக்கும் எல்லை வர்த்தகத்தையும் இந்தியா  நிறுத்தியது. பாகிஸ்தான் இதற்கு பதிலடியாக, இந்தியாவுக்கான வான்வெளியை நீண்ட காலத்திற்கு மூடியது.

அண்டை நாடுகளைத் துன்புறுத்துவதை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவுகளால், எல்லை தாண்டிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளன என்று "ஒருதலைப்பட்ச முடிவுகள் இருதரப்பு இழப்புகள்" என்ற அறிக்கை கூறுகிறது.

அறிக்கையிலிருந்து சில ஸ்னாப்ஷாட்கள்:

சுதந்திரம் வாங்கிய நாட்களில் இந்தியா-பாகிஸ்தான் வர்த்தக உறவு மிகவும் ஆழமாக இருந்தது என்றே சொல்லலாம்.  உதாரணமாக, 1948-49ம் ஆண்டில் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில்,56% இந்தியாவுக்கு அனுப்பியிருந்தது. அதன் ஒட்டுமொத்த இறக்குமதியில் 32% இந்தியாவிலிருந்து தான் வந்தது.

publive-image இந்தியா- பாகிஸ்தான் வர்த்தக உறவு: புல்வாமா தாக்குதலுக்கு முன்பும், பின்பும்

 

1948-65 வரை, இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு வர்த்தகத்திற்காக பல நில வழிகளைப் பயன்படுத்தின; பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் எட்டு சுங்க நிலையங்களும், சிந்துவில் மூன்று சுங்க சோதனை நிலையங்களும் இருந்தன.

தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?

1955-56 வரை பாகிஸ்தானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி இந்தியா தான். 1947 மற்றும் 1965 க்கு இடையில், 14 இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் இருநாடுகளுக்கு இடையில்  கையெழுத்திடப்பட்டன( இரட்டை வரிவிதிப்பு, விமான சேவை வங்கி போன்றவற்றைத் தவிர்த்து ). 1965ம் ஆண்டில், ஆறு இந்திய வங்கிகளின் ஒன்பது கிளைகள் பாகிஸ்தானில் இயங்கி வந்தன.

India India Vs Pakistan Pakistan Wto
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment