Advertisment

இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள் : எந்தெந்த பிரச்சனைகளை முன்வைத்தார்கள்?

நம்முடைய மகன்களுக்கு கிடைக்கும் அதே அளவு வாய்ப்பினை நம்முடைய மகள்கள் பெறுவதற்கான சாதகமான சூழல்களை நாம் உருவாக்கித் தர வேண்டும் - ஒபாமா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
American Presidents India visit George Bush, Barack Obama, Donald Trump

President Barack Obama participates in a ceremonial welcome at Rashtrapati Bhawan in New Delhi, India, Jan. 25, 2015. (Official White House Photo by Lawrence Jackson)

 Shubhajit Roy 

Advertisment

American Presidents India visit George Bush, Barack Obama, Donald Trump :  கடந்த 15 ஆண்டுகளில் மூன்று அமெரிக்க அதிபர்கள் இந்தியா வந்துள்ளனர். பாரக் ஒபாமாவின் இரட்டை வருகையை சேர்க்கும் போது நான்கு முறை அமெரிக்க அதிபர்கள் இந்தியா வருகை புரிந்துள்ளனர். அவர்கள் பேசிய வார்த்தைகளில் அதிகம் இடம் பிடித்த வார்த்தை “இந்தியா”வாகத்தான் இருக்கும். மேலும் ஸ்வாமி விவேகானந்தர் மற்றும் இந்திய அமெரிக்க ஒற்றுமை ஆகியவை குறித்து தான் அதிக அளவில் பேசினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் W புஷ், 2006, புராணா கிலா, புதுடெல்லி

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அணு ஆயுத ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து இந்தியா வந்தார் ஜார்ஜ் புஷ். அவர் இந்திய பொருளாதார சீர்த்திருங்கள் குறித்தும் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்தும் புகழ்ந்து பேசினார். அவுட் சோர்ஸிங் மூலமாக இழந்து வரும் வேலை வாய்ப்புகள் குறித்தும் அவர் அக்கறை செலுத்தினார்.

American Presidents India visit George Bush, Barack Obama, Donald Trump

வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு இருக்கும் விதிகளை தளர்த்தும் படியும், வெளிப்படைத்தன்மை கொண்ட, குறைந்த விலையுடன் கூடிய சந்தைப் பொருட்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இவரின் பேச்சு முழுக்க முழுக்க ஒரு தீமில் கட்டியமைக்கப்பட்டது. 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் குறித்தும், அதே ஆண்டில் டிசம்பர் மாதத்தில் பாராளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்டதை மேற்கோள் காட்டினார். தீவிரவாதிகள் தவறான முடிவினை மேற்கொண்டனர். நம்முடைய நாடுகள் சுதந்திரத்தை அதிகம் விரும்புகிறது. நிச்சயம் இந்த தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வருகை புரிந்த 5 வருடங்களுக்கு பிறகு ஜார்ஜ் புஷ்ஷின் வருகை அமைந்தது. அதே சயமத்தில் தான் பயங்கரவாதத்திற்கு எதிராக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போதைய ஜார்ஜ் புஷ்ஷின் வருகையை இந்திய அரசின் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். மாணவர்களின் போராட்டமும் அரங்கேறியது.

அந்த சூழலில், மனக்கசப்பை எதிர்ப்பதற்கான சிறந்த வழி அமைதியின் வெளிப்பாட்டினை ஏற்பது தான் என்றார். மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் மதிப்பு பற்றியும் அவர் பேசினார், மேலும் அந்த வழியில் இந்தியாவின் தலைமை உலகிற்கு தேவை என்றும் கூறினார்.

தனது இந்திய பயணத்திற்குப் பிறகு அவர் பாகிஸ்தானுக்குச் செல்ல இருந்ததால், பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் “நெருங்கிய உறவு” குறித்தும் பேசினார். ஒரு வளமான, ஜனநாயக பாகிஸ்தான் இந்தியாவுக்கு அமைதியான அண்டை நாடாகவும், முஸ்லிம் உலகில் சுதந்திரத்தை வேண்டும் நாடாகவும் இருக்கும் என்று அவர் நம்புவதாகவும் கூறினார். அப்போது அமெரிக்காவில் இருந்த 20 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் குறித்தும், அந்நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்புகள் குறித்தும் அவர் உரையாடினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

பாரக் ஒபாமா : 2010 & 2015, சிரி கோட்டை, பாராளுமன்ற கூட்டுத்தொடர்

இந்தியாவுக்கு இருமுறை வருகை புரிந்த ஒரே அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தான். குடியரசு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமெரிக்க அதிபரும் இவர் தான். 2015ம் ஆண்டு அவர் இந்தியா வந்த போது, புதிதாக பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மோடியுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொண்டார். வறுமையை ஒழிக்கும் வரலாற்று வாய்ப்பு குறித்து அவர் பேசினார். அடுத்த கட்ட வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றிற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் பங்கீடும் தேவை என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க : கவனம் ஈர்த்த மெலானியா, இவான்கா டிரெஸ் கோட் – அப்படி என்ன ஸ்பெஷல்?

காலநிலை மாற்றம் குறித்து பேசிய அவர் இந்தியா க்ளீனர் எனெர்ஜிக்கு மாற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அனைத்து மனிதர்களிடத்திலும் மரியாதை செலுத்துதல் மற்றும் பெண்களின் ஆக்கப்பூர்வ வளர்ச்சி குறித்தும் அவர் பேசினார். ஒரு நாடு உலக பொருளாதாரத்தில் முன்னிலை பெற வேண்டும் என்றால், நாட்டின் பாதி மக்கள் தொகையை கொண்டவர்களின் திறமையை புறக்கணித்துவிட இயலாது. கணவர்களாய், தந்தைகளாய், சகோதரர்களாய் நாம் வளர வேண்டும். ஏன் என்றால் ஒவ்வொரு பெண் குழந்தையின் வாழ்வும் முக்கியமானது. நம்முடைய மகன்களுக்கு கிடைக்கும் அதே அளவு வாய்ப்பினை நம்முடைய மகள்கள் பெறுவதற்கான சாதகமான சூழல்களை நாம் உருவாக்கித் தர வேண்டும் என்றும் ஒபாமா அறிவித்தார்.

இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து அவர் பேசிய பேச்சு அடுத்த நாள் செய்திதாள்களில் தலையங்களாக மாறியது. ஏன் என்றால் இந்தியாவில் மத சகிப்புத் தன்மையற்ற நிலையும், அதனால் சில இடங்களில் கலவரங்களும் நிலவி வந்தது. மத நம்பிக்கைகளின் அடிப்படையில் பிளவு படாமல், ஒற்றை தேசமாக அது இருக்கும் வரை இந்தியா வெற்றி பெறும் என்று கூறினார். டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜார்ஜ் புஷ்ஷைப் போன்றும் ஒபாமாவும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் குறித்தும் அவர்களின் பங்களிப்பு குறித்தும் பேசினார்.

2010ம் ஆண்டு இந்தியாவுக்கு முதன்முறையாக ஒபாமா வந்த போது, பாகிஸ்தான் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார் ஒபாமா. மும்பை தாக்குதலைத் தொடர்ந்து அங்கே பேசிய ஒபாமா, பாகிஸ்தான் தலைவர்களிடம் “தீவிரவாத தலைவர்களை” பாதுகாப்பாக வைத்திருப்பது சரியானது அல்ல என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்துவோம் என்றும், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் சட்டத்திற்கு முன்பு கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

மன்மோகன் சிங்குடன், ஒபாமா ஒரு எளிதான, அறிவார்ந்த நட்பினைக் கொண்டிருந்தார், அந்தச் சூழல் தான் ஒபாமா இந்தியா வந்தார். இந்தியாவை ஒரு நிரந்தர உறுப்பினராக உள்ளடக்கிய சீர்திருத்தப்பட்ட ஐ.நா.பாதுகாப்புக் குழுவை எதிர்பார்ப்பதாகவும் அவர் அன்று அறிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவும் இந்தியாவும் ராணுவம் மாற்றும் பாதுகாப்பில் மிகவும் நெருங்கிய நாடுகளாக வளர்ந்து வரும் நேரத்தில் முதன்முறையாக அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்கள் இன்னும் சரியாக முடிவடையாத நிலையிலும் கூட இரு தரப்பும் தங்களின் பிரச்சனைகளை சரியான முறையில் கையாண்டு வருகின்றனர். ட்ரம்ப் மோடியை நிகரற்ற தலைவர் என்று கூறினார். இருப்பினும் அவர் கடுமையான நெகோசியேட்டர் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தன்னுடைய பேச்சில் அதிபர் டிரம்ப் "தீவிர இஸ்லாமிய பயங்கரவாதம்" குறிப்பிட்டுள்ளார், ஆனால் பாகிஸ்தானுடன் தனக்கு "நல்ல" உறவு இருப்பதாகவும், பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் அந்நாடு நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வருடம் தேர்தல் நடைபெறுகின்ற நேரத்தில் அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் மக்கள் தொகை 40 லட்சம் என்பது மிகவும் அதிகமானது. மேலும் 3 பில்லியன் டாலருக்கான வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வந்தால் அந்நாட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு சரியான பேசும் பொருளாக இது அமையும் என்று பலரும் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் அமெரிக்காவில் மேலும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

India America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment