Advertisment

கோவிட் காலத்தில் மாணவர்களுக்கு உதவும் வகையில் தேர்வு முறையை மாற்றிய கேரளா

மற்ற மாநிலங்கள் தேர்வுகளை கூட நடத்தாமல் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் நடத்தப்பட்ட தேர்வுகளில் எப்போதும் இருக்கும் இறுக்கமான நடைமுறைகளை கொண்டு வர இயலவில்லை.

author-image
WebDesk
New Update
Kerala news, Kerala, exam pattern, explained copy

Shaju Philip 

Advertisment

Amid pandemic Kerala changed exam pattern : டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு கேரளா மாணவர்களின் அதிக அளவிலான சேர்க்கைக்குப் பின்னால், தொற்றுநோயின் பின்னணியில் மாணவர்களை ஆதரிப்பதற்கான வாரியத்தின் முடிவு உள்ளது. மாணவர்கள் நன்றாக மதிப்பெண் பெற உதவும் கேள்விகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வாரியம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

கேரளாவின் கல்வி மற்றும் தேர்வு ஆணையத்தின் பொது இயக்குநர் ஜீவன் பாபு, தேர்வு முடிவுகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களை பகிர்ந்து கொண்டார். தொற்றுநோய் சூழ்நிலையின் பின்னணியில், மாணவர்களுக்கு ஆதரவாக தேர்வு நடத்தப்பட்டது. அனைத்து பாடங்களிலும், நாங்கள் கவனம் செலுத்தும் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம் மற்றும் அந்த மையப் பகுதிகளின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. தவிர, மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களைப் பெறுவதற்கு வினாக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டது, ”என்றார்.

இதன் தாக்கம் தேர்வு முடிவுகளில் வெளிப்பட்டது. 2021ம் ஆண்டு மாநில அளவில் 12ம் வகுப்பு தேர்வில் கிட்டத்தட்ட 502 மாணவர்கள் முழுமையான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மேலும் 47,881 மாணவர்கள் 90%க்கும் மேலே மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதில் பெரும்பாலானோர் 95%க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 90%க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 18,510 மட்டுமே. 234 மாணவர்கள் மட்டுமே முழுமையான மதிப்பெண்களை பெற்றனர். இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 87.94% ஆக இருந்தது. கடந்த ஆண்டு இது 85.13% ஆகவும், 2019ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 84.33% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டும் இந்த ஆண்டு அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கவில்லை. 2020-ம் ஆண்டில் மொத்தமாக 38,686 மாணவர்கள் மட்டுமே 95%க்கும் மேலே மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஆனால் இந்த ஆண்டு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு கேரள உயர்நிலை இயக்குநரகம், தொற்றுநோய் அதிகமாக இருந்த போதும் 12ஆம் வகுப்பு தேர்வை நடத்தியது. அதில் 3,73,788 மாணவர்கள் தேர்வுகளை எழுதினார்கள். அதில் 3,28,702 மாணவர்கள் உயர் கல்விக்கு தகுதி பெற்றனர்.

கேரளா தேர்வு வாரிய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் அனுமதி பெற்றதன் பின்னணியில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று பொது இயக்குநர் தெரிவித்தார். நாங்கள் ஜனவரி தொடங்கி இரண்டு மாதங்கள் வகுப்புகள் நடத்தினோம். செயல்முறை மற்றும் தியரி வகுப்புகள் நடைபெற்றது. மற்ற மாநிலங்கள் தேர்வுகளை கூட நடத்தாமல் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் நடத்தப்பட்ட தேர்வுகளில் எப்போதும் இருக்கும் இறுக்கமான நடைமுறைகளை கொண்டு வர இயலவில்லை.

மாநில உயர்நிலை இயக்குநரகம், ஏராளமான மாணவர்கள் கேரளாவிற்கு வெளியே குறிப்பாக டெல்லியில் கலை மற்றும் மனிதநேயப் பாடங்களைப் படிக்க விரும்புவதாகவும், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தனர். டெல்லி கல்லூரியில் இடம் பெற்றுள்ள மாணவர்கள் சிறந்த கல்வி மற்றும் சமூக வெளிப்பாட்டையும் பெறவும், ஆங்கிலத்தில் புலமை பெறவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பலரும் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

12ம் வகுப்பு தேர்வில் முழுமையான மதிப்பெண்களை பெற்ற ஷாமில் வி, டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில் பி.ஏ. சமூகவியல் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார். டெல்லியில் படிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. நான் சிவில் தேர்வுகளுக்கு என்னை தயார்படுத்திக் கொள்வேன் என்று ஷாமில் கூறியுள்ளார். மலப்புரம் சுபுலுஸ்சலாம் உயர் நிலைப்பள்ளியில் படித்த ஷாமில்லின் தந்தை அப்துல் கரீம் ஒரு விவசாயி. ஷாமில் மற்றும் அவருடன் படித்த மாணவர்கள் பெரும்பாலும் 95% மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அவர்களில் பலரும் டெல்லியில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment