Advertisment

இந்திய விமானப்படையின் அசுரன்... மிரட்டும் அப்பாச்சி ஏ.எச்.-64E போர் விமானம்

இந்த விமானங்கள் அனைத்தும் இந்தியாவின் மேற்கு எல்லையில் பாதுகாப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Apache AH-64E attack helicopters

Apache AH-64E attack helicopters

 Man Aman Singh Chhina

Advertisment

Apache AH-64E attack helicopters : கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய விமானப்படையானது அமெரிக்க அரசு மற்றும் போயிங் நிறுவனத்துடன் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் முதல் கட்டமாக  நேற்று (03/09/2019) 8 ஹெலிகாப்டர்கள் இந்தியாவின் விமானப்படையில் இணைக்கப்பட்டது.

இந்திய விமானப்படையில் ஏற்கன்வே ரஷ்யாவின் எம்.ஐ 24 மற்றும் எம்.ஐ. 35 ரக போர் விமானங்கள் இருக்கின்ற இந்நிலையில், அவற்றை விட எந்த வகையில் மிக சிறப்பாக இந்த ஹெலிகாப்டர் இயங்கும் என்று கூறப்படுகிறது?

ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட விமானங்கள் வெகு காலங்களுக்கு முன்பே வாங்கப்பட்டவை. அவற்றைவிட இந்த விமானங்கள் அதிக உயரம் மேலே பயணிக்கும் வல்லமை கொண்டவையாகும். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த ஹெலிகாப்டர்கள் சிறந்து விளங்கும் காரணத்தால் இந்த போர்விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது. கார்கில் போர் நடக்கும் போது, இந்திய விமானப்படையினர் தாக்குதலுக்காக செல்ல வேண்டிய உயரத்தை எம்.ஐ. 35-ஆல் எட்ட முடியவில்லை. ரஷ்ய விமானங்களில் 8 போர் வீரர்கள் அமரும் வகையில் இடம் இருந்தது.

ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த அப்பாச்சி ரக விமானங்கள் அளவில் சிறியவை. அவைகளில் கேபினட் வசதிகள் ஏதும் இல்லை ஆனால் ஃபையர் அண்ட் ஃபர்கெட் முறை, ஆண்டி டேங்க் மிஷல்ஸ், ஏர் டூ ஏர் மிஷல், ராக்கெட்டுகள் போன்றவை இடம் பெற்றிருக்கிறது. மேலும் எலெக்ட்ரானிக் சாதனகளால் துல்லியமான இலக்கினை அடையும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : வந்தது அப்பாச்சி- இந்திய விமானப் படையின் போர்வாள்

இந்திய விமானப்படையின் பழைய விமானங்களான எம்.ஐ 35 ரக விமானங்களில் எத்தனை விமானங்கள் அப்பாச்சியால் மாற்றப்படுகின்றன?

2015ம் ஆண்டு இந்திய அரசு அமெரிக்காவிடம் 22 விமானங்களுக்கான ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது. இதன் முதல் 8 விமானங்கள் தற்போது இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்து விமானங்களும் 2020ம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுவிடும். இந்த விமானங்கள் அனைத்தும் இந்தியாவின் மேற்கு எல்லையில் பாதுகாப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும். 6 விமானங்களில் மட்டும் ஆப்பரேசன் டாங்குகள் மற்றும் இன்ஃபாண்ட்ரி காம்பட் வாகனங்களுடன் இணைக்கப்பட்டு பாலைவனப் பகுதிகள் மற்றும் இந்தியாவின் வரண்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Apache AH-64E attack helicopters

தற்போது வாங்கப்பட்டுள்ள விமானங்கள் அனைத்தும் பறக்கும் நிலைமையில் இருக்கின்றதா அல்லது உள்வேலை ஏதேனும் இந்தியா தரப்பு செய்ய வேண்டுமா?

சினூக் கனரக விமானங்களைப் போன்று இவையும் பாதி பறக்கும் (semi-flyaway condition) நிலையில் வாங்கப்பட்டவை. ரோட்டர்கள் அனைத்தும் பொருத்தப்பட்ட பின்பு இவை பறக்கும் நிலைக்கு கொண்டு வரப்படும். ரோட்டர்களை இணைக்கும் பொறுப்பினை போயிங் நிறுவனமும் டாட்டா போயிங் ஏரோஸ்பேஸ் லிமிட்டட் நிறுவனமும் ஐதராபாத்தில் மேற்கொள்ள இருக்கின்றன.

இந்த விமானத்தில் வைக்கப்பட வேண்டிய ஆயுதங்களை எந்த நிறுவனம் இந்தியாவிற்கு தர உள்ளது? இந்த வகையான ஆயுதங்கள் இந்த விமானங்களில் பயன்படுத்தப்படும்?

இந்த விமானத்திற்கு தேவையான அனைத்து ஆயுதங்களையும் அப்பாச்சியை தயாரித்த போயிங் நிறுவனம் தான் வழங்குகிறது. ஏர் - டூ - க்ரௌண்ட் ஹெல்ஃபையர் மிஷல்கள், 70 எம்.எம். ஹைட்ரா ராக்கெட்டுகள், மற்றும் ஏர் - டூ - ஏர் ஸ்டிங்கர் மிஷல்கள் ஆகியவற்றை இந்த விமானத்தில் வைக்க இயலும். ஃபையர் கண்ட்ரோல் லாங்க்பவ் ரேடார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 360 டிகிரி கவரேஜ் செய்ய முடியும். நோஸ் மௌண்டட் சென்சாரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

Apache AH-64E attack helicopters பதான்கோட் ராணுவ விமான தளத்தில் கம்பீரமாக நிறுத்தப்பட்டுள்ள அப்பாச்சி

இந்த விமானங்களை ஓட்டுவதற்கான பயிற்சிகளை எங்கே எப்போது இந்திய விமானப்படை வீரர்கள் மேற்கொள்ள இருக்கின்றனர்?

அமெரிக்காவில் இருக்கும் அலபாமா மாகாணத்தின் ஃபோர்ட் ரக்கர் என்ற பகுதியில் இந்திய விமானிகளுக்கு ஏற்கன்வே அமெரிக்க ராணுவம் சிறப்பு பயிற்சியை அளித்து வருகிறது. இந்த பயிற்சி 2018ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது.

எந்தெந்த நாடுகள் இந்த ரக ஹெலிகாப்டர்களை வைத்துள்ளனர்?

எகிப்து, க்ரீஸ், இந்தோனேசியா, இஸ்ரேல், ஜப்பான், கொரியா, குவைத், நெதர்லாந்து, கத்தார், சவுதி, சிங்கப்பூர், அமீரகம், இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்த ரக ஹெலிகாப்டர்களை வைத்துள்ளன. இந்தியா அப்பாச்சி ரக விமானங்களை வாங்கும் 16வதூ நாடாகும்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Apache AH-64E attack helicopters காக்பிட்டில் இருக்கும் சிறப்பம்சங்கள்

விசுவல் மற்றும் ஆரல் க்யூஸ்

மல்டிபர்பஸ் கலர் டிஸ்பிளேக்கள்

டிஜிட்டல் கிராஃபிக்ஸ்

ஆட்டோமேட்டட் டேட்டா இன்புட்

எவ்வளவு எடையை தாங்கும்

4 ஸ்ட்ங்கர் மிஷல்ஸ்

16 ஹெல்ஃபையர் மிஷல்ஸ்

76 ராக்கெட்கள்

1200 முறை சுடக்கூடிய 30 எம்.எம். காலிபர்கள் உள்ளே உள்ளன

Indian Air Force
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment