Advertisment

ஒமிக்ரான்: வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் வழிகாட்டுதல்களில் இந்தியா மாற்றம் செய்தது ஏன்?

எச்.ஐ.வி., உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் போன்ற நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள் மருத்துவரின் முறையான மதிப்பீட்டிற்கு பிறகே வீட்டில் தனிமைப்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

author-image
WebDesk
New Update
As Omicron surges why India and US have tweaked home isolation protocols

India and US have tweaked home isolation protocols : அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், அறிகுறிகளற்ற கொரோனா நோயாளிகளின் ஐசோலேஷன் காலத்தை 10 நாட்களில் இருந்து 5 ஆக குறைத்ததை தொடர்ந்து இந்தியாவும் மிதமான தாக்கம் அல்லது அறிகுறிகளற்ற நோயாளிகளுக்கான “வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும்” வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அமெரிக்காவை போன்றே இந்தியாவும் தனிமைப்படுத்தும் காலத்தை குறைத்துள்ளது. நோயாளி தனிமையில் இருந்து வெளியேறும் முன் பரிசோதனைவதையும் புதிய வழிகாட்டு நெறிமுறை பரிந்துரை செய்யவில்லை.

Advertisment

இரவு நேர ஊரடங்கு… வழிபாட்டு தலங்களுக்கு தடை… தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்

புதிய வழிகாட்டுதல்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 7 நாட்களும், காய்ச்சல் அறிகுறிகள் இல்லாமல் தொடர்ந்து மூன்று நாட்களும் ஆன நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட நோயாளி தன்னுடைய தனிமையை 7 நாட்களுக்கு பிறகு விலக்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட நோயாளி தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறை, தனிமை காலம் முடிந்த பிறகு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர்களின் அறிகுறியற்ற தொடர்புகள் கொரோனா சோதனை மேற்கொள்ளவும், தனிமைப்படுத்திக் கொள்ளவும் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், நீரிழிவு நோய், மற்றும் எச்.ஐ.வி., உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் போன்ற நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள் மருத்துவரின் முறையான மதிப்பீட்டிற்கு பிறகே வீட்டில் தனிமைப்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகளுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுதலை வழிகாட்டுதல்கள் பரிந்துரை செய்யவில்லை.

publive-image

ஒமிக்ரானின் தன்மை

கடந்த வாரம் இருந்த கொரோனா தொற்றைக் காட்டிலும் 6 மடங்கு கொரோனா தொற்றுகள் இந்த வாரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 2.14 லட்சம் நோயாளிகள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்கிறது சுகாதாரத்துறை தரவுகள். இதே நேரத்தில் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. ஆக்ஸிஜன் மற்றும் ஐ.சி.யூ படுக்கைகளை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.

தற்போது உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு காரணமாக இருக்கும் ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவும் தன்மை கொண்டது ஆனால் டெல்டாவுடன் ஒப்பிடும் போது மிகவும் மிதமான நோய் தாக்கத்தையே இது ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வைரல் லோட் குறைவாக இருக்கும் காரணத்தால் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனுக்குடன் உடல் நலம் தேறிவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒமிக்ரானின் குறைவான பரவும் காலம் மற்றும் மிதமான நோய் தாக்கத்தில் இருந்து மீளும் தன்மை ஆகியவையே தற்போது அமெரிக்கா மற்றும் இந்தியாவில் வழிகாட்டுதல்களில் மாற்றங்களை ஏற்படுத்த வழிவகை செய்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சோதனைத் தேவையை தளர்த்துவது தொற்றுநோய்களின் எழுச்சியின் அழுத்தத்தில் இருக்கும் மருத்துவ துறையின் சிறிது சுமைகளை குறைக்க உதவும் என்று அவர்கள் கூறினர்.

ஃபிரான்ஸில் உருவாகிய மாறுபாடு பற்றி கவலை வேண்டாம் – ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

சி.டி.சி. கூறுவது என்ன?

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் நபர்களின் குவாரண்டைன் காலத்தை குறைத்தது ஏன் என்பது தொடர்பாக சி.டி.சி. தன்னுடைய இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த வைரஸின் போக்கை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போதைய சூழலில் தனிநபர்களின் சமூக மற்றும் மேம்பாட்டு நலன் சார்ந்த தேவைகள், வேலைக்கு திரும்ப செல்லுதல் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு செயல்பாடுகளை தொடர்ந்து நடத்துதல் ஆகியவை மூலமாக சமூக மற்றும் பொருளாதார செயல்பாடுகளை தொடர முடியும் என்பதால் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக சி.டி.சி. கூறியுள்ளது.

மிகவும் அதிகமான தாக்கத்தை கொண்டிருக்கும் ஐந்து நாட்களுக்கு மட்டும் தனிமைப்படுத்தலை பின்பற்றி அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு முக்கவசங்கள் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு மின்னஞ்சல் மூலம் பதில் அளித்துள்ளது சி.டி.சி.

இந்த பரிந்துரைகள் சமூக தாக்கங்களில் பிரதிபலிக்கும் என்றும் அந்த இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பு மற்றும் நடைமுறை

இந்தியாவில் உள்ள பல வல்லுநர்கள், பொருளாதாரத்தில் இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதன் அவசியத்தை, தொற்றுநோய்கள் பரவுவதற்கு எதிராக போதுமான முன்னெச்சரிக்கையுடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஒமிக்ரான் தொற்று வேகம் எடுத்து வரும் நிலையில் தற்போது இளம் பிராயத்தினருக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்தில் இருந்து முன்னெச்சரிக்கை தடுப்பூசிகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

நாம் அனைத்தையும் ஊரடங்கு போட்டு மூடிவிட்டு, 14 நாட்களுக்கு மக்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க இயலாது. அதே போன்று தனிமைப்படுத்தும் காலங்களை குறைப்பதற்கு முன் அதற்கான ஆதாரங்கள் தேவை. . ஒரு நபர் எவ்வளவு காலம் நோய்த்தொற்றுடன் இருக்கிறார் என்பதைத் தீர்மானிக்க ஆய்வுகள் தேவை, ”என்று ஒரு நிபுணர் கூறினார், அவர் கோவிட்-பொருத்தமான நடத்தையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் வீட்டிலேயே சோதனைகளை அதிகரிப்பதையும் வலியுறுத்தினார்.

மகாராஷ்டிரா கோவிட்-19 பணிக்குழுவின் நிபுணர் உறுப்பினரான டாக்டர் ஷஷாங்க் ஜோஷி, “ தற்போது மருத்துவ ரீதியாக நாம் காணும் ஒமிக்ரான் தொற்று எத்தகையதாக இருந்தாலும் அதனால் ஏற்படும் தாக்கம் மிகவும் மிதமானதாகவே உள்ளது. கடந்த 7 நாட்களில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட நபர்களில் 80 முதல் 90% பேர் தொற்று அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டிருந்தால், குவாரண்டைன் காலத்தை திரும்பப் பெறுவது தர்க்கரீதியானது தான். பணியிடத்திற்கு நெறிமுறை பொருத்தமானதாகத் தெரிகிறது. CDC சோதனை இல்லாமல் தனிமைப்படுத்தல் நெறிமுறையை பாதியாகக் குறைத்த. இரட்டை முகக்கவச முறைகளை அது வலியுறுத்துகிறது. நம்முடைய வழிகாட்டுதல்களும் அதே போன்று உள்ளது” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment