Advertisment

அறிகுறியற்ற கோவிட் -19 பரவல்: இது ஏன் முக்கியமானது, சான்றுகள் எங்கே?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
asymptomatic transmission of covid-19, covid asymptomatic transmission, india coronavirus tracker, அறிகுறியற்ற கொரோனா பாதிப்புகள், asymptomatic transmission, asymptomatic patient, indian express

asymptomatic transmission of covid-19, covid asymptomatic transmission, india coronavirus tracker, அறிகுறியற்ற கொரோனா பாதிப்புகள், asymptomatic transmission, asymptomatic patient, indian express

திங்களன்று, உலக சுகாதார அமைப்பின் கோவிட் -19 தொழில்நுட்ப பிரிவு தலைவரான மரியா வான் கெர்கோவ் இந்த நோயின் அறிகுறியற்ற பரவல் "மிகவும் அரிதானது" என்று கூறினார். உலகெங்கிலும் இருந்து சந்தேகங்களுக்கு பிறகு, ஒரு சமூக ஊடக நேர்காணலுக்கு WHO அழைத்தது, அதில் வான் கெர்கோவ் பேசுகையில், சில ஆய்வுகளின்படி அறிகுறியற்ற பரிமாற்றம் நிகழ்கிறது என்றும், அத்தகைய பரிமாற்றத்தின் நிகழ்வு 40% வரை அதிகமாக இருக்கலாம் என்றும் தெளிவுபடுத்தினார்.

Advertisment

கோவிட் -19 தொற்றுநோய்க்கான அறிகுறியற்ற பரிமாற்றத்தின் கேள்வி ஏன் ஒரு முக்கிய காரணியாகும், மற்றும் சான்றுகள் எங்கு நிற்கின்றன என்பதை பார்க்கலாம்.

அறிகுறியற்ற பரிமாற்றம் என்றால் என்ன?

அறிகுறியற்ற பரவுதல் என்பது, கோவிட் -19 அறிகுறிகள் இல்லாத ஒரு நபர் - காய்ச்சல், உடல் வலி, இருமல் போன்றவற்றுடன் - கொரோனா வைரஸை மற்றொரு நபருக்கு பரப்புவது ஆகும்.

கொரோனா பாதிப்பு - மரணங்களை கட்டுப்படுத்த திணறும் மாநிலங்கள்

வைரஸின் தொற்று அதிகமாக இருப்பதால் இது முக்கியமானதாகிறது. WHO ஆரம்பத்தில் கூறியது போல உண்மையில் அறிகுறியற்ற பரிமாற்றம் அரிதாக இருந்தால், மாஸ்க்குகளின் உலகளாவிய பயன்பாட்டின் தேவை குறையும். அத்தகைய சூழ்நிலையில், அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமே வைரஸ் பரவுவதைத் தடுக்க மாஸ்க்குகளை அணிய வேண்டும். மேலும், அறிகுறிகளைக் காட்டிய ஒவ்வொரு நபரும் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டால் வைரஸைக் தவிர்ப்பது எளிதாக இருக்கும்.

அறிகுறியற்ற பரிமாற்றம் எவ்வளவு தூரம் நிகழ்கிறது?

மதிப்பீடுகள் வேறுபடுகின்றன, ஆனால் எல்லா கணக்குகளின்படி, அது நடைபெறுகிறது. ஏப்ரல் 15 ம் தேதி நேச்சர் மெடிசினில் சீனாவில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நோயைக் கண்டறிந்த 44% பாதிப்புகள் அறிகுறிகளைக் காட்டாத ஒருவரிடமிருந்து தொற்றியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

We observed the highest viral load in throat swabs at the time of symptom onset, and inferred that infectiousness peaked on or before symptom onset. We estimated that 44%… of secondary cases were infected during the index cases’ presymptomatic stage, in settings with substantial household clustering, active case finding and quarantine outside the home,” reported researchers including from Guangzhou Medical University and the WHO Collaborating Centre for Infectious Disease Epidemiology and Control, at the University of Hong Kong. The study looked at 94 Covid-19 patients admitted to Guangzhou Eighth People’s Hospital.

“அறிகுறி தோன்றிய நேரத்தில் தொண்டையில் அதிக வைரஸ் இருப்பதை நாங்கள் கவனித்தோம், மேலும் அறிகுறி தெரிவதற்கு முன்பே, நோய்த்தொற்று தீவிரமடைந்திருக்கலாம் என்று ஊகித்தோம்" என குவாங்சோ மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் தொற்றுநோய்க்கான WHO ஒத்துழைப்பு மையம் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நோய் தொற்றுநோய் மற்றும் கட்டுப்பாடு, ஹாங்காங் பல்கலைக்கழகத்தில். குவாங்சோ எட்டாவது மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 94 கோவிட் -19 நோயாளிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வான் கெர்கோவ், அறிகுறியற்ற பரிமாற்றம் குறித்த தனது அறிக்கை குறித்து "தவறான புரிதல்" இருந்ததாகக் கூறினார். அவர் தனது நிலையைத் திருத்தி கூறினார்: “காலப்போக்கில் அறிகுறியற்றபாதிப்புகளைத் தொடர்ந்து இரண்டு-மூன்று ஆய்வுகள் நடந்துள்ளன, எல்லா தொடர்புகளையும் பார்த்து, பரவல் இல்லை என்ற முடிவுக்கு வந்தோம், ஆனால் அது மிகச் சிறிய ஆய்வுகள் ஆகும். எங்களுக்குத் தெரிந்தவற்றை வெளிப்படுத்த முயற்சிக்கும்போது, ​​நான் 'மிகவும் அரிதானது' என்ற சொற்களைப் பயன்படுத்தினேன், ஒரு தவறான புரிதல் இருந்தது. சில ஆய்வுகள் 40% பரிமாற்றம் இருக்கலாம் என்று மதிப்பிடுகின்றன

இருப்பினும், அறிகுறிகள் இல்லாத நபர்களில் எத்தனை சதவீதம் பேர் நோயைப் பரப்புகிறார்கள் என்பது ஒரு திறந்த கேள்வி என்று அவர் கூறினார். அவர் 6-41% ஒரு எண்ணிக்கையை மேற்கோள் காட்டினார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நாட்டில் அறிகுறியற்ற பாதிப்புகளின் அளவிற்கு பரவலாக மாறுபட்ட புள்ளி விவரங்களை வழங்கியுள்ளது. ஐ.சி.எம்.ஆரில் நோய்த் தொற்று பிரிவின் தலைவரான டாக்டர் ஆர்.ஆர்.கங்ககேத்கர் கூறுகையில், ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து கோவிட் -19 நோயாளிகளில் 69% அறிகுறியற்றவர்கள். ஏப்ரல் 30 வரை பதிவான அனைத்து 40,184 பாஸிட்டிவ் பாதிப்புகளிலும், 28% பேருக்கு அறிகுறியில்லாமல் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

இருமல் இல்லாத தும்மாத ஒரு அறிகுறியற்ற நபர், நீர்த்துளிகள் மூலம் வைரஸை எவ்வாறு பரப்ப முடியும்?

கொரோனா வைரஸ் SARS-CoV-2 மேல் சுவாசக் குழாயில் வாழ்கிறது. இதுதான் மனித உடலில் இருந்து பரப்புகளின் வாயிலாக மற்றவர்களுக்கு பரவுகிறது.

“பொதுவாக அறிகுறி உள்ளவர்களுக்கு பரிமாற்ற முறை வெளிப்படையானது - இருமல் அல்லது தும்மல் மூலம் தெரிந்துவிடும். ஆனால் அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்ட நபர்கள், பாடும்போது, ​​ஜிம்மில் பெரிதும் சுவாசிக்கும்போது அல்லது ஒரு நைட் கிளப்பில் உங்களுக்கு மிக நெருக்கமாக நிற்கும் யாரோ ஒருவர் கேட்க வேண்டும் என்று நீங்கள்கத்தும் போதும், எந்தவொரு சூழ்நிலையிலும் நீங்கள் அழுத்தத்தின் கீழ், காற்றை வெளிப்படுத்தும்போது, ​​நீர்த்துளிகள் பரவலாம் ”என்று WHO சுகாதார அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மைக்கேல் ரியான் தெரிவித்தார்.

அறிகுறியற்ற COVID 19 நபர்களிடம் இருந்து, ஒருவர் எப்படி தன்னை தற்காத்துக் கொள்வது?

மாஸ்க் பயன்படுத்துவது எப்போதும் ஒரு  தொடக்கமாகும். இதன் மூலம், அறிகுரியற்ற நபர்களிடம் இருந்து வைரஸ் பரவுதலைத் தடுக்கலாம். எந்தவொரு நபரிடமிருந்தும் குறைந்தது ஒரு மீட்டர் தூரத்தை பராமரிப்பது முக்கியம், கை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரித்தல் அவசியம். வீட்டில், முகமூடி அணிவது நல்லது, குறிப்பாக வீட்டில் வயதானவர்கள் இருந்தால். ஆனால் அது முடியாவிட்டால், இருமல் அல்லது தும்மும்போது வாயை மூடியோ அல்லது ஒருவரின் சட்டை ஸ்லீவிற்குள் தும்முவதோ நல்லது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment