Advertisment

உறுதியான ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முதல் மென்மையான ‘ஜெய் சியா ராம்’ வரை - கடந்து வந்த பாதை

Jai shri ram : சீதை யார், ஏன் அவருக்கு மட்டும் இவ்வளவு கஷ்டங்கள், அவர் ஏன் ராமரை விட்டு விலகினார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழும். ஆனால், சீதை என்பவர், தைரியம் மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக விளங்கி வந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ayodhya, Ram temple. Jai shri ram, ayodhya temple, Jai siya ram, ram temple, ayodhya bhoomi pujan, ayodhya temple, ayodhya news, ram mandir, ram mandir news, jai shree ram slogan

Devyani Onial

Advertisment

1990ம் ஆண்டில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ரதயாத்திரையை துவக்கியபோது எழுந்த "ஜெய் ஸ்ரீ ராம் " முழக்கம், 30 ஆண்டுகளுக்கு பிறகு, 2020ம் ஆண்டில் ஆகஸ்ட் 5ம் தேதி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பூமி பூஜை நிகழ்வின் போது பிரதமர் மோடி "ஜெய் சியா ராம்" என்று முழங்கியதுவரை, நாடு பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது.

ராம ஜென்மபூமி அமைப்பின் முக்கிய நோக்கமே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தான், அதற்காக எழுந்த " ஜெய் ஸ்ரீ ராம்" முழக்கம், தற்போது அந்த நோக்கம் நிறைவேறியுள்ளதால், " ஜெய் ஷியா ராம் " என்று உருமாறியுள்ளது.

உறுதிக்கும் கருணைக்கும் இடைப்பட்ட போராட்டம்

ராம் ராம், ஜெய் ராம் மற்றும் ஜெய் சியா ராம் உள்ளிட்ட முழக்கங்கள், பெரும்பாலும், இந்தி அதிகம் பேசும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதேபோல் ராதே ராதே முழக்கம், மதுரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ராமர், சீதை போட்டோக்களில் மட்டுமல்லாதுல வாழ்த்துப்பாடல்களிலும், பஜனைகளிலுமே, அவர்களை பிரிக்க முடியாது. சீதையின் கணவர் ராமனை, சியாவதி ராம்சந்திரா, சியாவார் ராம்சந்திரா, ஜானகிநாத் என்றே அழைத்து வருகின்றனர்.

இந்தியாவில் 12ம் நூற்றாண்டில், துருக்கியர்களின் படையெடுப்புக்கு பிறகு, ராமர் வழிபாடு அதிக முக்கியத்துவம் பெற்றது. தேசப்பிதா காந்தியடிகளும் ராமராஜ்யத்தை அமைப்போம் என்று வலியுறுத்தியதும், நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு ராமரின் அடையாளத்தை பயன்படுத்தி, சமத்துவத்திற்கான தேடலை துவங்கவும் இதுதான் காரணமாக அமைந்தது.

தேசப்பிதா காந்திக்கு முன்னதாக, 1920ம் ஆண்டில் பாபா ராமச்சந்திரா தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் இயக்கத்தில் ராமர் மற்றும் அவரது படம் கூட்டாளிகள் படம் முதன்முதலாக வரையப்பட்டிருந்தது. இந்த இயக்கத்தின் நோக்கம் யாதெனில், நாடு முழுவதும் துளசிதாசரின் ராமாயணத்தை பாடியபடி பயணித்து, அனைவரிடம் ஷலாம் என்று சொல்வதை தவிர்த்து சீதாராம் என்று சொல்வதை வலியுறுத்த பயணம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1980ம் ஆண்டு இறுதிவாக்கில், சீதா மீண்டும் விலக்கிக்கொள்ளப்பட்டார். இந்துத்துவா இயக்கங்கள் நாட்டில் வலுப்பெற்றிருந்த நிலையில், அவர்கள் தங்களது முழக்கமாக "ஜெய் ஸ்ரீ ராம் " என்பதை பயன்படுத்த துவங்கினர். ராம் என்பதிலிருந்து சீதையை விலக்கியதன் மூலம், தங்களது கோஷம் வலுப்பெற்றதை உணர்ந்த அவர்கள், இதனால் ராமரின் புகழ் மேலும் அதிகரித்ததாக உணர்ந்தனர். ராமர் படங்களிலிருந்து சீதை படம் அகற்றப்பட்டது. சீதை, நாட்டின் இளவரசி என்ற கோணத்திலேயே அவர்கள் சித்தரிக்க துவங்கினர்.

 

publive-image

1992ம் ஆண்டில், விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள், சிவ சேனா உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளை சேர்ந்த கரசேவகர்கள், டிசம்பர் 6ம் பாபர் மசூதியை இடித்தனர். இந்த நிகழ்வில், "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற முழக்கமே பிரதானமாக இருந்தது.

கடும் கோபத்தில் இருந்து ஹனுமான், தொடர்ந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்கியபடி எதிரிகளுடன் போராடி வெற்றி பெற்றதை, 2015ம் ஆண்டில் வெளியான பஜ்ரங்கி பைஜான் திரைப்படத்தின் இயக்குனர் கபீர் கான் சிறப்பாக வடிவமைத்திருந்தார். கபீர் கான், உத்தரபிரதேச மாநிலம் பருகாபாத் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் தொடர்ந்து ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் ஜெய் சியா ராம் முழக்கங்களை கேட்டு வளர்ந்துள்ளார். தனது படத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை பயன்படுத்தியே கதாநாயகன் வெற்றி பெறுவது மட்டுமல்லாது, சமாதானத்தை ஏற்படுத்தவும் முயற்சிப்பார் என்று கபீர் கான் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சமீபகாலமாக ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லச்சொல்லி முஸ்லீம்கள் அதிகளவில் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிகழ்வுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, திரைப்பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர், பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியிருந்தனர்.

இதில் உச்சகட்டமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், ஆளுங்கட்சி எம்பிக்கள், மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை நோக்கி தொடர்ந்து ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

publive-image

ராமர் படங்களில் இருந்து சீதை நீக்கப்பட்டிருந்தாலும், ராமர் குறித்த வாழ்த்துப்பாடல்கள், பஜனைகள் உள்ளிட்டவைகளில் சீதை தவறாது இடம்பெற்று வருகிறார். நாட்டில் ராமர் என்ற பெயர் வந்தால், அதனைத்தொடர்ந்து சீதையின் பெயரும் வரும் என்ற உணர்வு மக்களின் மனதில் ஆழ ஊன்றிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

சீதையின் ராமாயணம் என்ற நாவலை எழுதிய 2011ம் ஆண்டு எழுதிய எழுத்தாளர் சம்ஹிதா ஆர்னி தெரிவித்துள்ளதாவது, கிராமப்புற ராமாயணங்களல் பெண்களில் குரல் ஓங்கி ஒலிக்கும். பெண்களின் நாட்டுப்புற பாடல்கள், இத்தகைய ராமாயணங்களில் வேறுவிதமாக இருக்கும். இது அவர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிப்பதாக இருக்கும். இதில் சீதை யார், ஏன் அவருக்கு மட்டும் இவ்வளவு கஷ்டங்கள், அவர் ஏன் ராமரை விட்டு விலகினார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழும். ஆனால், சீதை என்பவர், தைரியம் மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக விளங்கி வந்துள்ளார்.

சீதையின் அருமை, பெருமைகளை அறிய நாம் சீதையின் ராமாயணத்தை கேட்போமாக!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - From assertive ‘Jai Shri Ram’, a reason to move to gentler ‘Jai Siya Ram’

Ayodhya Temple Ram Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment