Advertisment

தினமும் உங்கள் நாக்கை சுத்தம் செய்வது ஏன் அவசியம்? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆரம்பகால ஆயுர்வேத மருத்துவ நூலான சரக் சம்ஹிதா, நாக்கை சுத்தம் செய்ய பரிந்துரைக்கிறது, ஏனெனில் அது துர்நாற்றம் மற்றும் சுவையின்மை போன்றவற்றை நீக்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
health

Why Ayurveda recommends scraping your tongue every day

கடந்த இரண்டு ஆண்டுகளில் உடல், மன ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்ட போதிலும், மக்கள் தங்கள் வாய்வழி நலனை கவனித்துக்கொள்வதை பெரும்பாலும் தவறவிடுகிறார்கள். தினமும் பல் துலக்கினால் மட்டும் போதாது! உங்கள் பற்களை தவறாமல் சுத்தம் செய்வதோடு, உங்கள் நாக்கை சுத்தம் செய்வதும் முக்கியம்.

Advertisment

உங்கள் காலை ப்ரெஷ்-அப் நேரங்களில், செம்பு அல்லது வெள்ளியில் U வடிவ ஸ்கிராப்பரைக் கொண்டு உங்கள் நாக்கைத் துடைப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்று ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நித்திகா கோஹ்லி கூறினார்.

உங்கள் நாக்கை தவறாமல் சுத்தம் செய்வது, உங்கள் உடலில் உள்ள அனைத்து நச்சுகளையும் அகற்ற உதவும். மேலும் நமது வாய் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது என்று அவர் விளக்கினார்.

இதை ஒப்புக்கொண்ட, ஆயுர்வேத டாக்டர் புனீத், வாய், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்க நாக்கை துடைப்பது, ஒரு சுத்தப்படுத்தும் செயல்முறையாகும். இது நாக்கில் உள்ள அழுக்குகளை அகற்றி உடனடியாக புத்துணர்ச்சியைக் கொடுக்கும், என்று அவர் கூறினார்.

இது பல நன்மைகளைக் கொண்ட பண்டைய இந்திய பாரம்பரியம் என்று நிபுணர் எடுத்துரைத்தார்.

நாக்கு மற்றும் ஓரல் கேவிட்டி ஆகியவை உங்கள் உடல் அமைப்புக்கும் வெளிப்புற சூழலுக்கு இடையே உள்ள நுழைவாயில்கள்; எனவே, இந்த முக்கிய உறுப்பின் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் முக்கியமானது. நாக்கைத் சுத்தம் செய்வது அதன் மேல் உள்ள அசுத்தங்களை நீக்குகிறது, இது  வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும் மற்றும் பல நுண்ணுயிரிகளுக்கு இடமளிக்கும். இது முறையற்ற உணவு, மோசமான செரிமானம் மற்றும் இரைப்பை குடல் அமைப்பின் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றின் பிரதிபலிப்பால் ஏற்படலாம், என்று டாக்டர் புனீத் கூறினார்.

ஆரம்பகால ஆயுர்வேத மருத்துவ நூலான சரக் சம்ஹிதா, நாக்கை சுத்தம் செய்ய பரிந்துரைக்கிறது, ஏனெனில் அது துர்நாற்றம் மற்றும் சுவையின்மை போன்றவற்றை நீக்குகிறது. இந்த எளிய பயிற்சி உங்கள் உடலியலில் இருந்து நச்சுகளை அகற்றுவதற்கான நேரடி வழியாகும்.

ஆயுர்வேதம், நாக்கும் குடல் ஆரோக்கிய நிலைக்கும் இடையே உள்ள அர்த்தமுள்ள தொடர்பை விவரிக்கிறது என்று அவர் விளக்கினார். நாக்கில் ஏற்படும் எந்த நிறமாற்றமும் உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் நோய் அல்லது ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கிறது. நாக்கின் பல்வேறு பகுதிகள் உடலின் வெவ்வேறு பகுதிகளுடன் தொடர்பு கொள்கின்றன.

நாக்கில் நன்மை பயக்கும் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. பாக்டீரியா மற்றும் உணவுத் துகள்கள் உள்நாக்கில் குவிகின்றன. இந்த துகள்கள் சரியான நேரத்தில் சுத்தம் செய்யப்படாவிட்டால், அவை தொடர்ந்து துர்நாற்றத்திற்கு வழிவகுக்கிறது.

ஒரு சுத்தமான நாக்கு, சுவையை சிறப்பாக அடையாளம் காண உதவும், இதனால் உப்பு, சர்க்கரை மற்றும் மசாலாப் பொருட்களின் நுகர்வு குறைகிறது. உப்பு, சர்க்கரை மற்றும் மசாலாப் பொருட்களைக் குறைவாக உட்கொள்வதால், உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எனவே நாக்கை சுத்தம் செய்வது உங்கள் சுகாதாரத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், என்று அவர் விளக்கினார்.

எப்படி செய்வது?

டாக்டர் புனித், நாக் ஸ்கிராப்பிங் செய்யும் முறையை சரியாக விளக்கினார்.

* காலையில் முதலில் பிரஷ் செய்த பிறகு ஸ்கிராப்பிங் செய்யுங்கள்;

* வாயைத் திறந்து, நாக்கை மெதுவாக வெளியே நீட்டவும்.

* ஸ்கிராப்பரை நாக்கின் உள்புறத்தில் உறுதியாக வைத்து, மென்மையான அழுத்தத்துடன் முன்னோக்கி இழுக்கவும்.

* ஸ்கிராப்பரில் இருந்து அசுத்தங்களை கழுவவும். ஸ்கிராப்பிங் முடிந்தவரை மென்மையாக இருக்க வேண்டும்.

* 3-4 சுற்றுகள் ஸ்கிராப்பிங் செய்து முடித்தவுடன் உங்கள் வாயை கழுவவும்.

*ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு ஸ்கிராப்பரை வெந்நீரில் நன்கு கழுவி சேமித்து வைக்கவும்.

ஆயுர்வேத நூல்கள் ஒரு சிறந்த டங்க் ஸ்கிராப்பர் தங்கம், வெள்ளி, தாமிரம், தகரம் அல்லது பித்தளையாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது, என்று அவர் மேலும் கூறினார்.

இது உங்கள் வாய் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது!

இது உங்கள் வாய் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது!

பல் துலக்குவதைப் போலவே, நாக்கைத் துடைப்பதிலும் சில செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை உள்ளன என்று புனீத் விளக்கினார்.

செய்ய வேண்டியவை

*உங்கள் நாக்கை சுத்தமான டங்க் ஸ்கிராப்பரால் சுத்தம் செய்ய வேண்டும்.

*காலை எழுந்தவுடன் ஒரு முறையும், இரவு படுக்கைக்கு முன் ஒரு முறையும் என இரண்டு முறை செய்வது பலன் தரும்.

* மென்மையான விளிம்புகளைக் கொண்ட நல்ல தரமான ஸ்கிராப்பரை வாங்கவும்.

*டங்க்  ஸ்கிராப்பரை உங்கள் நாக்கின் மேல் லேசாக பயன்படுத்தவும். நாக்கை காயப்படுத்தக்கூடாது.

செய்யக்கூடாதவை

*உங்கள் நாக்கை துடைக்கும் போது அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்வது உங்கள் நாக்கின் சென்சிட்டிவான மேற்பரப்புக்கு தீங்கு விளைவிக்கும், மேலும் சுவை மொட்டுகளை சேதப்படுத்தும்.

* வெள்ளைத் திட்டுகள் அல்லது புண்களைக் கண்டால் ஸ்க்ராப்பிங்கைத் தொடர வேண்டாம்.

* நாக்கைத் துடைக்க டூத் பிரஷை பயன்படுத்த வேண்டாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamilm

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment