Advertisment

பலுசிஸ்தான் பிரிவினைவாதம்: பாகிஸ்தானில் வற்புறுத்தி சேர்க்கப்பட்ட கலாட் கானேட்

இந்திய துணைக்கண்டம் சுதந்திரமடைந்தபோது, 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களில் பெரும்பான்மையானவை இந்தியாவுடன் சேர்ந்தது. பாகிஸ்தானுடன் சேர முடிவு செய்த சிலவற்றில், பலுசிஸ்தான் மாகாணத்தை உள்ளடக்கியவைகள் மிகவும் சிக்கலானவை என்பதை நிரூபித்தன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Khan of Kalat, Balochistan history, Baloch separatism, பலுசிஸ்தான் பிரிவினைவாதம்: பாகிஸ்தானுடன் அச்சுறுத்தி இணைக்கப்பட்ட கலாட் கானேட், கலாட் கானேட், பாகிஸ்தான், Partition, India Pakistan, India Independence Day, Khan of Kalat Pakistan, Tamil Indian Express

இந்திய துணைக்கண்டம் சுதந்திரமடைந்தபோது, 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களில் பெரும்பான்மையானவை இந்தியாவுடன் சேர்ந்தது. பாகிஸ்தானுடன் சேர முடிவு செய்த சிலவற்றில், பலுசிஸ்தான் மாகாணத்தை உள்ளடக்கியவைகள் மிகவும் சிக்கலானவை என்பதை நிரூபித்தன.

Advertisment

1947ல் பாக்கிஸ்தான் நாடு உருவானதில் இருந்து பலூச் பிரிவினைவாதம் ஒரு தொடர் பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்திய துணைக்கண்டம் சுதந்திரமடைந்த போது, ​​சுமார் 500 சமஸ்தானங்கள் இந்தியா அல்லது பாக்கிஸ்தானில் சேர வேண்டும் என்றபோது, இந்த பிரச்னைகளின் வேர்கள் அந்த காலத்திற்குப் பின்னால் செல்கிறது. அந்த சமஸ்தானங்களில் பெரும்பாலானவை இந்தியாவுடன் சேர்ந்தது. பாகிஸ்தானுடன் சேர முடிவு செய்த சிலவற்றில், பலுசிஸ்தான் மாகாணத்தை உள்ளடக்கிய பகுதிகள் மிகவும் சிக்கலானவை என்பதை நிரூபித்தன. தற்கால பலுசிஸ்தானின் மையப் பகுதியான கலாட் பகுதியின் கான் இந்தியாவுடன் சேர விரும்பியதாக வதந்தி பரவியது. இருப்பினும், அதற்கு கணிசமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், இந்த மாகாணம் கலாட் கான் ஆட்சியின் கீழ் ஒரு சுதந்திரமான அமைப்பாகவே இருந்தது. மார்ச் 1948 வரை, அதன் ஆட்சியாளர், அதிக அரசியல் அழுத்தத்தின் கீழ், பாகிஸ்தானுடன் இணைவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

publive-image

சுதந்திரத்திற்கு முன் பலுசிஸ்தான்

பாகிஸ்தானில் உள்ள நான்கு மாகாணங்களில் இன்றைய பலுசிஸ்தான் மிகப்பெரிய மாகாணம். இது நாட்டின் தென்மேற்கு பகுதியில் ராஜதந்திர உத்தி ரீதியாக அமைந்துள்ளது. மேலும், எரிவாயு, எண்ணெய், தாமிரம், தங்கம் உள்ளிட்ட இயற்கை வளங்களின் பெரிய ஆதாரமாக உள்ளது.

சுதந்திரத்திற்கு முன்னர், பலுசிஸ்தான் மாகாணம் பல பழங்குடியினரால் ஆகியிருந்தது. அதன் தலைவர்கள் ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்த உறவுகளில் இருந்தனர்.

அந்த தலைவர்களில் கலாட்டின் பகுதியின் கான் மிக முக்கியமானவர். அவரது பிரதேசங்கள் பல்வேறு சுதந்திர நிலையில் பல நிலப்பிரபுக்களிடையே பிரிக்கப்பட்டது. அவர்களில் மூன்று பேர் - மக்ரான், லாஸ் பேலா மற்றும் கரன் - இவை தனி அரசியல் அமைப்புகளாக உருவெடுத்தன. அவர்கள் கலாட் உடன் சேர்ந்து பலுசிஸ்தான் மாநில ஒன்றியத்தை உருவாக்கினர். இது கலாட்டின் கானேட் அல்லது கலாட் கூட்டமைப்பு என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலேயர்கள் 1876-இல் கலாட்டின் கானேட்டுடன் ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். அதன் மீது நேரடி ஆட்சியை நிறுவினர். அது கலாட்டின் உடன்படிக்கை என்று அழைக்கப்பட்டது. கலாட்டின் கடைசி கான், அஹ்மத் யார் கான், பிரதேசத்திற்கு சுதந்திரம் கோருவதற்கான அடிப்படையை உருவாக்கியது.

கலாட் கானேட்டின் இணைப்பு

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்தியாவில் இருந்து பிரிட்டிஷார் வெளியேறுவது தெளிவாகத் தெரிந்ததால், கலாட் கான் ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையில் உறுதியாக நின்றார். டிசம்பர் 1946-இல், கலாட்டின் பிரதமர் முஹம்மது அஸ்லாம், அரச பிரதிநிதியின் உதவியாளரான லான்சலாட் கிரிஃபினுக்கு கடிதம் எழுதினார். அதில், இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் கலாட்டிற்கும் இடையே செய்யப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் விவரித்தார். அதில் 1876 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 3 வது பிரிவை மேற்கோள் காட்டினார். அது பிரிட்டிஷ் அரசாங்கம் கலாட்டின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டது.

வரலாற்றாசிரியர் துஷ்கா ஹெச் சயீத் எழுதிய ‘கலாட்டின் இணைப்பு: கட்டுக்கதையும் யதார்த்தமும்’ (2006) என்ற ஒரு ஆய்வுக் கட்டுரையில், “பிரிவினை காலத்தில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமஸ்தான மாநிலங்களை இணைப்பதற்கான போட்டியில் கலாட் பெரிய அளவில் இடம்பெறவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இது இந்திய துணைக்கண்டத்தின் சுற்றுப்புறத்தில் இருந்ததால், அது காஷ்மீர் அல்லது ஹைதராபாத் அல்லது ஜூனாகத் போல முக்கியத்துவத்தை கொண்டிருக்கவில்லை. இந்த இரண்டு பகுதிகளும் முஸ்லீம்கள் நிறைந்த பகுதி என்பதால், ஒரு மதத்தைச் சேர்ந்த ஆட்சியாளரின் மோதல், அதன் மக்கள் தொகை மற்றொரு மதத்தைச் சேர்ந்தம் இல்லை” என்று அவர் எழுதினார்.

மேலும், ஜின்னாவுடனான தனது நெருங்கிய நட்பின் காரணமாக, பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இணைப்பதற்குப் பதிலாக நட்பு உடன்படிக்கையை மேற்கொள்ள முடியும் என்று கான் நம்பினார். அவரது கோரிக்கை முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 11, 1947 அன்று கலாட், பாகிஸ்தான் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் கலாட் ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், பிரிட்டிஷ் அரசாங்கம் ரஷ்ய விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பயந்து சுதந்திர கலாட்டுக்கு ஆதரவாக இல்லை. மேலும், கலாட்டின் இணைப்பை வலியுறுத்த பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது.

இணைப்பதற்கான யோசனையை கடுமையாக எதிர்த்த கான், இந்த விஷயத்தை புதிதாக நிறுவப்பட்ட பாராளுமன்றத்திற்கு எடுத்துச் சென்றார். மேலும், பொதுச் சபை (தாருல் அவாம்) மற்றும் பிரபுக்களின் சபை (தாருல் உம்ரா) இரண்டு சபையினரும் இந்த விஷயத்தில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டனர். பொதுச் சபையின் தலைவராக இருந்த கவுஸ் பக்ஷ் பிசெஞ்சு, “எங்களிடம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் போல தனித்துவமான கலாச்சாரம் உள்ளது. மேலும், நாங்கள் முஸ்லிம்கள் என்ற உண்மையின் அடிப்படையில் பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்றால், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானையும் பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும்.” என்று கூறினார்.

“எங்களிடம் பணம் இல்லை, ஆனால் எங்களிடம் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன; எங்களிடம் துடிப்பான துறைமுகங்கள் உள்ளன; எங்களிடம் வரம்பற்ற வருமான ஆதாரங்கள் உள்ளன. எங்கள் பொருளாதார நிர்ப்பந்தங்கள் என்ற பெயரில் எங்களை அடிமைத்தனத்தில் தள்ள முயற்சிக்காதீர்கள். ('பிரிட்டிஷ் காலத்தில் பலூச் தேசியவாதத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி (2022)' இல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது)

கலாட்டின் மூன்று மாகாணங்களான கரன், லாஸ் பேலா மற்றும் மக்ரான் ஆகியவை பாகிஸ்தானுடன் சேர விரும்பியது நிலைமையை சிக்கலாக்கியது. கரனின் ஆட்சியாளரான மீர் முகமது ஹபிபுல்லா, ஆகஸ்ட் 21, 1947 அன்று ஜின்னாவுக்கு கடிதம் மூலம் பாகிஸ்தான் யூனியனில் அதன் மேலாளராக சேரும் முடிவை அறிவித்தார். நவம்பர் 1947-இல், அவர் ஜின்னாவுக்கு எழுதிய கடிதத்தில், “எனது அரசு கலாட் அரசின் கட்டளைகளுக்கு ஒருபோதும் அடிபணியாது. மேலும், அரசின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதை நோக்கமாகக் கொண்ட எந்த நடவடிக்கைகளையும் தொடர்ந்து எதிர்க்கும்” என்று சயீத் மேற்கோள் காட்டினார்.

அக்டோபர் 1947 வாக்கில், ஜின்னா கலாட்டின் சுதந்திரம் பற்றி தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார். மேலும், பாகிஸ்தானில் சேரும் மற்ற மாநிலங்கள் செய்ததைப் போல இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு கானிடம் கோரினார். கான் தொடர்ந்து ஒப்புக்கொள்ள மறுத்ததால், ஜின்னா இந்த விஷயத்தில் தனது தனிப்பட்ட பங்கை முடித்துக் கொண்டார். பேச்சுவார்த்தைகளை வெளியுறவு அமைச்சகத்திற்கு மாற்றினார்.

இதன் விளைவாக, மார்ச் 17, 1948 அன்று பாகிஸ்தான் அரசாங்கம் மூன்று நிலப்பிரபுத்துவ பகுதிகளின் இணைப்பை ஏற்க முடிவு செய்தது. அது கலாட் நிலத்தால் சூழப்பட்டது. அவை அதன் நிலப்பரப்பில் பாதிக்கும் குறைவானதாக இருந்தது. ஆல் இந்தியா ரேடியோவில் கலாட் இந்தியாவில் சேர விரும்புவதாக ஒரு பொய்யான செய்தி வெளியானதால் கான் மீது மேலும் அழுத்தம் அதிகரித்தது. வேறு வழியின்றி, அவர் மார்ச் 27, 1948 இல் பாகிஸ்தானுடன் இணைவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

ஜூலை 1948 இல் விரைவில், அகமது யார் கானின் சகோதரர் இளவரசர் அப்துல் கரீம் இணைவு ஒப்பந்தத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தார். அப்போது நடந்த ஐந்து பலூச் கிளர்ச்சிகளில் இது முதன்மையானது. இந்த கிளர்ச்சி பாகிஸ்தான் படைகளால் கொடூரமாக ஒடுக்கப்பட்டது. அதன் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட பிறகு, அவர்கள் பாகிஸ்தான் கூட்டமைப்பிற்குள் பலூச் உரிமைகளுக்காகவும் பலுசிஸ்தானின் சுதந்திர மாநில கோரிக்கைக்காகவும் பணியாற்றத் தொடங்கினர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment