Advertisment

நீதிபதி நசீருக்கு முன், ஆளுநர்களாக நியமிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதிகள் யார்?

உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டது என்றால், அது 2014-ல், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம், கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

author-image
WebDesk
New Update
Before Justice Nazeer who were the other former SC judges appointed Governors

இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம் பாத்திமா பீவி ஆகிய இரண்டு நீதிபதிகள்தான் நீதிபதி நசீருக்கு முன் ஆளுநர்களாக நியமிக்பட்டவர்கள்.

நீதிபதி நசீருக்கு முன், சமீப ஆண்டுகளில் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவம் மற்றும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம். பாத்திமா பீவி ஆகிய இரண்டு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மாநிலங்களின் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

ஆந்திரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்ட நீதிபதி எஸ். அப்துல் நசீர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனவரி 4-ம் தேதி ஓய்வு பெற்றார். அவர் உச்ச நீதிமன்ற அமர்வில் சுமார் 6 ஆண்டுகள் பணியாற்றினார். பிப்ரவரி 17, 2017 முதல், கர்நாடக உயர் நீதிமன்றத்திலிருந்து பதவி உயர்வு பெற்று உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.

ஓய்வுபெற்ற நீதிபதி நசீர் நீதிபதி கே.எஸ்.புட்டசாமி வழக்கில் தனியுரிமையை அடிப்படை உரிமை என்ற வழக்கில் (2018) தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் ஒரு பகுதியாக இருந்தார். முத்தலாக் வழக்கை (2017) அவர் 3:2 பெரும்பான்மைத் தீர்ப்பை மறுத்து, இது நடைமுறைக்கு எதிரானது கூறினார். பாபர் மசூதி வழக்கிலும் (2019) ஒரு பகுதியாக இருந்துள்ளார்.

நீதிபதி நசீருக்கு முன், குறைந்தது இரண்டு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சமீபத்திய ஆண்டுகளில் மாநிலங்களின் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம் பாத்திமா பீவி  ஆகிய இரண்டு நீதிபதிகள்தான் நீதிபதி நசீருக்கு முன் ஆளுநர்களாக நியமிக்பட்டவர்கள்.

உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சதாவிசம்

கடைசியாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டது என்றால், அது 2014-ல், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம், கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

1973 ஆம் ஆண்டு சென்னையில் வழக்கறிஞராகப் பதிவு செய்த அவர், அனைத்து வகையான ரிட், சிவில் மற்றும் கிரிமினல் விவகாரங்கள், நிறுவன மனுக்கள், திவால் மனுக்கள் மற்றும் ஹேபியஸ் கார்பஸ் மனுக்கள் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார். உச்ச நீதிமன்ற குறிப்புகளின்படி, அவர் அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு வழக்கறிஞராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராகவும், அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழகங்கள், நகராட்சிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் போன்றவற்றின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார்.

ஜனவரி 8, 1996-ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், ஏப்ரல் 2007-ல் பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஆகஸ்ட் 2007-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். ஜூலை 2013 முதல் ஏப்ரல் 2014 வரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தார். 2014-ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ், அவர் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பாத்திமா பீவி

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம். பாத்திமா பீவி, 1992-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, 1997 முதல் 2001 வரை தமிழ்நாடு ஆளுநராக இருந்தார்.

பாத்திமா பீவி இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி ஆவார். 1950-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்ட அவர், மே 1958-ல் கேரள கீழமை நீதித்துறை பணிகளில் முன்சிஃப் ஆக நியமிக்கப்பட்டார். கீழமை மற்றும் மாவட்ட அளவிலான நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, 1984-ல் கேரள உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். 1989-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற பிறகு, 1992-ல் ஓய்வு பெற்றார்.

எச்.டி. தேவகவுடா பிரதமராக இருந்தபோது, ஜனவரி 25, 1997 அன்று சென்னை ராஜ்பவனில் பாத்திமா பீவி ஆளுநராக பொறுப்பேற்றார்.

மே 1997-ல் ஜெ. ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க அழைத்தது தொடர்பான சர்ச்சையையும், அதற்குப் பிறகு அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்துடனான உரசல்களையும் அடுத்து, தனது ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவதற்குள், ஜூலை 1, 2001 அன்று ஆளுநர் பாத்திமா பீவி ராஜினாமா செய்தார். 2001 ஜூன் 29-30 தேதிகளில் அன்றைக்கு 78 வயதான தி.மு.க தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி மற்றும் அவருக்கு அடுத்தக் கட்டத் தலைவர்களான முரசொலி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் ஜெயலலிதா அரசால் கைது செய்யப்பட்டனர்.

அப்போது மத்தியில் வாஜ்பாய் ஆட்சியில் தி.மு.க அங்கம் வகித்தது. தூங்கிக் கொண்டிருந்த கருணாநிதியின் அறையை உடைத்து உள்ளே நுழைந்த போலீஸார் அவரை வெளியே இழுத்துச் சென்றனர். வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக முரசொலி மாறன் இருந்தார். அப்போது, டி.ஆர். பாலு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார். இவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்போதைய மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி, மூத்த பத்திரிகையாளர் ஷீலா பட்டிடம்,  “சட்டத்தின் ஆட்சியை விட தனிப்பட்ட பழிவாங்கும் அரசியலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதற்கான தொடக்கமாகத் தெரிகிறது” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment