Advertisment

உ.பி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஜனசங் தலைவர்கள், தெய்வங்கள், துறவிகளின் பெயர் சூட்டும் அரசியல்!

உத்தரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு யாருடைய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அரசியல் முக்கியத்துவம் குறித்து ஒரு பார்வை.

author-image
WebDesk
New Update
Uttar Paradesh Assembly Elections, BJP caste equations naming to New Medical colleges, uttar pradesh, pm modi, yogi adithyanath, UP politics, உத்தரப் பிரதேசம், மருத்துவக் கல்லூரிகளுக்கு ஜனசங் தலைவர்கள் பெயர், உபியில் மருத்துவக் கல்லூரிகளுக்கு தெய்வங்கள் பெயர், பாஜகவின் சாதி மத அரசியல் கணக்கு, Before Uttar Paradesh Assembly polls, tamil indian express, tamil indian express explained

உத்தரபிரதேசத்தில் ரூ.2,319 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள 9 புதிய மருத்துவக் கல்லூரிகளில் 8 கல்லூரிகள் பிரதமர் நரேந்திர மோடியால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. உள்ளூர் சாதி மற்றும் மத சமன்பாடுகளை மனதில் கொண்டு பெயர்கள் தெளிவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அலிகாரில் உள்ள ஒரு புதிய பல்கலைக்கழகத்திற்கு ஜாட் மன்னர் மகேந்திர பிரதாப் சிங்கின் பெயரைச் சூட்ட அரசாங்கம் முடிவு செய்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சமூகப் பொறியமைப்பில் இந்த முயற்சியானது அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வருகிறது.

Advertisment

ஹர்டோயில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. மற்ற 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு யாருடைய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அரசியல் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பார்ப்போம்.

மாதவ் பிரசாத் திரிபாதி மருத்துவக் கல்லூரி, சித்தார்த்தா நகர்

பாரதிய ஜனசங்கத்தின் மூத்த தலைவரான திரிபாதி, உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆரம்பிக்கப்பட்டபோது கட்சியின் முதல் மாநிலத் தலைவரானார். குறிப்பாக, கிழக்கு உத்தரபிரதேசத்தில் கட்சியை நிறுவ உதவினார். 1960களின் பிற்பகுதியிலிருந்து 1970கள் வரை எம்.எல்.ஏ.வாக இருந்த அவர் 1977ல் துமரியகஞ்ச் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவருடைய பெயரைக் மருத்துவக் கல்லூரிக்கு வைப்பது என்பது பிராமணர்களின் வாக்குகளைக் கருத்தில் கொண்டு வைக்கப்பட்டுள்ளது. அமைச்சராகவும் முதல் பாஜக மாநிலத் தலைவராகவும் கிழக்கு உ.பி.க்கு திரிபாதி ஆற்றிய பங்களிப்புகள் குறித்து பிரதமர் விரிவாகப் பேசினார்.

“மருத்துவக் கல்லூரிக்கு அவரது பெயரைச் சூட்டுவது, தொண்டர்களுக்கு 2 செய்திகளைத் தெரிவிப்பைதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதலாவதாக, கடினமான காலங்களில் கட்சிக்கு பங்களித்தவர்களை மறக்க கூடாது. இரண்டாவது வெளிப்படையான செய்தி பிராமணர்களுக்கானது; இன்னும் அவர் ஒரு மரியாதைக்குரிய பிராமணப் பெயர். ஆனால், சர்ச்சை இல்லாதவர். திரிபாதிகள் பாரம்பரியமாக அரசியல் ஆதிக்கத்தை அனுபவித்து வந்த பிராந்தியத்தில் அவர் ஒரு பாகுபலி முகமாக இருக்கவில்லை” என்று கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த கட்சித் தலைவர் ஒருவர் கூறினார்.

publive-image

சோன் லால் படேல் மருத்துவக் கல்லூரி, பிரதாப்கர்

கிழக்கு உ.பி.யில் உள்ள குர்மி வாக்குகளை, குறிப்பாக பிரதாப்கர் மற்றும் வாரணாசியை சுற்றியுள்ள படேல்களின் வாக்கு வங்கியை வைத்திருக்கும் அப்னா தளத்தின் நிறுவனர் படேல் ஆவார். மத்தியில் ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியான அப்னா தளம் 2022 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைக்கிறது. சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில், சோன் லால் படேலின் மகள் அனுப்ரியா படேலுக்கு பாஜக அமைச்சர் பதவி வழங்கியது. கல்லூரிக்கு சோன் லால் படேல் பெயர் சூட்டுவது என்பது கிழக்கு உ.பி.யின் ஒரு பெரிய பகுதியில் உள்ள ஓ.பி.சி.களின் கீழ் வரும் குர்மிகளை அணுகுவதாகும்.

வீரங்கனை அவந்திபாய் லோதி மருத்துவக் கல்லூரி, எட்டா

இந்த பெயர் ஒரு சுதந்திர போராட்ட வீரரும் மத்திய பிரதேசத்தில் உள்ள ராம்கர் ராணியின் நினைவாகவும் வைக்கப்பட்டுள்ளது. லோதி ராஜ்புட்கள் ஆதிக்கம் செலுத்தும் எட்டாவைச் சுற்றியுள்ள பகுதியில், பாஜக சமீபத்தில் அதன் பிரபலமான லோதி முகத்தை இழந்தது. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், அவரது மகன் ராஜ்வீர் எட்டா தொகுதியை மக்களவையில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இது லோதி ராஜபுத்திரர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டதோடு, ஒரு பெண் வீரரை கௌரவிக்கும் முயற்சியாகும். சமீபத்தில், முதல் மூன்று அனைத்து மகளிர் மாகாண ஆயுதப்படை காவலர் பிரிவுகளுக்கு அவந்திபாய் லோதி உட்பட பெண் வீரர்களின் பெயர் சூட்டப்பட்டது.

ஜோதா சிங் மற்றும் தரியாவ் சிங் மருத்துவக் கல்லூரி, ஃபதேபூர்

தாக்கூர்களின், குறிப்பாக ஜமீன்தார்களின் தலைமையால் குறிப்பிடப்படும் பிராந்தியத்தில், உள்ள கல்லூரிக்கு 1857 புரட்சியில் தங்கள் பங்களிப்பிற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 தாக்கூர் வீரர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உமாநாத் சிங் மருத்துவக் கல்லூரி, ஜான்பூர்

தாக்கூர் ஆதிக்கம் செலுத்தும் இந்த பகுதியில், முன்னாள் ஜனசங்கம் மற்றும் பாஜக தலைவர், கல்யாண் சிங்கின் உ.பி. அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சரின் பெயரை அரசாங்கம் தேர்வு செய்துள்ளது. ஒரு முக்கிய தாக்கூர் குடும்பத்தைச் சேர்ந்த உமாநாத் சிங், ஒரு போராட்டத்தின்போது மாரடைப்பால் காலமானார். ஜான்பூரில் பலர் அவரை "அமர் ஷஹீத்" என்று குறிப்பிடுகின்றனர். பல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைக்கு ஏற்கனவே அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மா விந்தியவாசினி மருத்துவக் கல்லூரி, மிர்சாபூர்

இந்தியா முழுவதும் உள்ள சக்தி பீடங்களில் ஒன்றான மிர்சாபூரில் உள்ள புனித யாத்திரை ஸ்தலமாக விளங்கும் விந்தியவாசினி தேவியின் நினைவாக இந்த கல்லூரி அழைக்கப்படுகிறது. இப்பகுதி விந்தியாச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் பாத யாத்திரையின் போது கோயில்களுக்குச் சென்ற நேரத்தில் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த யாத்திரை ஸ்தலத்தைப் பார்வையிடாமல் இந்தப் பகுதியில் எந்த அரசியல் பிரச்சாரமும் தொடங்குவதில்லை.

தேவ்ராஹா பாபா மருத்துவக் கல்லூரி, தியோரியா

நித்திய யோகி என்று பிரபலமாக அறியப்படும் தேவ்ராஹா பாபா, கிழக்கு மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் பரவலாகப் பின்பற்றப்படுபவர். பிருந்தாவனத்திற்குச் செல்வதற்கு முன்பு அவர் ஆரம்பத்தில் தியோரியாவில் வாழ்ந்தார் என்பதைத் தவிர, அவருடைய ஆரம்பகால வாழ்க்கை பற்றி அதிகம் அறியப்படவில்லை. அவருடைய நீண்ட அரசியல் பக்தர்கள் பட்டியலில் ராஜீவ் காந்தி, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் அர்ஜுன் சிங் போன்ற காங்கிரஸ் தலைவர்களும் அடங்குவர்.

மகரிஷி விஸ்வாமித்திரர் மருத்துவக் கல்லூரி, காஸிபூர்

முதலில் இவர் ஒரு சத்திரிய மன்னர், மகரிஷி விஸ்வாமித்திரர் பிராமணராகப் பிறக்கவில்லை என்றாலும் தியானம் மற்றும் பக்தி மூலம் மகரிஷி என்ற பட்டத்தைப் பெற்றார். வேதங்களுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை தவிர, ராமாயணத்தில் தேவஸ்தானம் மற்றும் ஆயுதம் பற்றிய அறிவை ராமர் மற்றும் அவருடைய சகோதரர் லக்ஷ்மணனுக்கு வழங்கியதன் மூலம் அவர் செய்த பங்களிப்புக்காகவும் அறியப்படுகிறார். காஸிபூரில் சத்ரியர் மற்றும் யாதவர்கள் இருவருமே உள்ளனர். மேலும் பாஜக சிறப்பாக செயல்படாத பிராந்தியத்தில் சாதி மற்றும் மத உணர்வுகள் இரண்டிற்கும் பெயர் சூட்ட முயல்கிறது; 2019-ல் இந்த மக்களவைத் தொகுதியை இழந்தது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Pm Modi Uttar Pradesh Yogi Adityanath
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment