Advertisment

டெல்டா தவிர்த்து அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மாறுபாடுகள் எவை? தீவிர ஆராய்ச்சியில் நிபுணர்கள்

தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள வரை, கொரோனா வைரஸ்கள் பரவுவதற்கும் பிறழ்வுகள் உருவாகவும் வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும்

author-image
WebDesk
New Update
Delta coronavirus variants

coronavirus variants : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய நிலையில், கிரேக்க எண்களைக் கொண்டு, உலக சுகாதார மையம், புதிய மாறுபாடுகளுக்கு பெயரிட்டு வருகிறது. சில வைரஸ்கள் மனிதர்களை பாதிக்க சிறப்பான வழிமுறைகளை பின்பற்ற, சில மாறுபாடுகள் தடுப்பூசி பாதுகாப்பில் இருந்து தப்பித்தும் கொள்கிறது. தற்போது உலக அளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வரும் டெல்டா வைரஸ் மீது ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் மற்ற வைரஸ்களையும் தடம் அறிந்து வரும் பணியையும் மேற்கொண்டுள்ளனர்.

Advertisment

டெல்டா

இந்தியாவில் கண்டறியப்பட்ட முதல் மாறுபாடானது இன்னும் அதிக கவலை அளிக்கக் கூடிய வைரஸாக உள்ளது. பல நாடுகளில் தடுப்பூசி போடாத மக்களை அதிகம் தாக்குகிறது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்களையும் தாக்கும் திறன் கொண்டது என்பதையும் நிரூபித்து வருகிறது.

கவலை அளிக்கக் கூடிய மாறுபாடு (variant of concern) என்று டெல்டாவை வரையறை செய்துள்ளது உலக சுகாதார நிறுவனம். இது தொற்று பரவலை அதிகரிக்கும், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நோய் தொற்றை உருவாக்கக் கூடும், தடுப்பூசி மற்றும் சிகிச்சைகளின் பலனை குறைக்கும் சக்தி கொண்டது என டெல்டா மாறுபாடு அறியப்பட்டுள்ளது.

சாண்டியாகோவில் இருக்கும் லா ஜொல்லா நோய் எதிர்ப்பியல் நிறுவனத்தில் பணியாற்றும் வைராலஜிஸ்ட் ஷேன் க்ரோட்டி டெல்டா வைரஸின் சூப்பர் பவர் என்பது அதன் பரவும் விகிதம் தான் என்று குறிப்பிட்டுள்ளார். சீன ஆராய்ச்சியாளார்கள், உண்மையான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களைக் காட்டிலும் 1260 மடங்கு கூடுதல் வைரஸை தங்களின் மூக்கில் கொண்டுள்ளனர் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியுள்ளனர். சில அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், டெல்டா மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட தடுப்பூசி போடாதவர்களின் உடலில் இருக்கும் அதே அளவு வைரஸ் லோட், தடுப்பூசி போட்டவர்களிடமும் காணப்படுகிறது. ஆனால் இதனை நிரூபிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை என்றும் கூறியுள்ளனர்.

உண்மையான கொரோனா வைரஸ் மனித உடல்களில் அறிகுறிகளை ஏற்படுத்த ஒரு வார காலம் எடுத்துக் கொள்ளும். ஆனால் டெல்டா மாறுபாடுகள் இரண்டு அல்லது மூன்று நாட்களிலேயே நோய் அறிகுறிகளை உருவாக்கி, நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு பதிலளிப்பதற்கும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் குறைவான நேரத்தை அளிக்கிறது. "டெல்டா பிளஸ்" மாறுபாட்டின் அறிக்கைகள் வெளிவருவதன் மூலம் டெல்டா மேலும் பிறழ்வதாகத் தோன்றுகிறது, இது ஒரு துணை வம்சாவளியைக் (sub-lineage) கொண்டுள்ளது, இது நோயெதிர்ப்பு பாதுகாப்பைத் தவிர்ப்பதாக அறியப்பட்டுள்ளது.

கவலையை ஏற்படுத்தும் மாறுபாடு என்று ஜூன் மாதம் டெல்டா ப்ளஸ் மாறுபாட்டை அறிவித்தது இந்தியா. ஆனால் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களும், உலக சுகாதார அமைப்பும் அப்படி அறிவிக்கவில்லை. Outbreak.info இணையத்தின் அறிவிப்பின் படி, ஒரு திறந்த மூல COVID-19 தரவுத்தளம், டெல்டா ப்ளஸ் மாறுபாடு குறைந்தது 32 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் மிகவும் ஆபத்தானதா என்பது தெளிவாகவில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கவலையை ஏற்படுத்தும் மாறுபாடு என்று ஜூன் மாதம் டெல்டா ப்ளஸ் மாறுபாட்டை அறிவித்தது இந்தியா. ஆனால் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களும், உலக சுகாதார அமைப்பும் அப்படி அறிவிக்கவில்லை. Outbreak.info இணையத்தின் அறிவிப்பின் படி, ஒரு திறந்த மூல COVID-19 தரவுத்தளம், டெல்டா ப்ளஸ் மாறுபாடு குறைந்தது 32 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் மிகவும் ஆபத்தானதா என்பது தெளிவாகவில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

லாம்ப்டா மாறுபாடு குறைந்து வருகிறதா?

லாம்ப்டா மாறுபாடு ஒரு புதிய அச்சுறுத்தலாக கவனத்தை ஈர்த்தது. ஆனால் டிசம்பர் மாதத்தில் பெருவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸின் இந்த மாறுபாடு குறையக்கூடும் என்று பல தொற்று நோய் நிபுணர்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.

லாம்ப்டாவை ஆர்வத்தின் மாறுபாடு என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. அதாவது இது பரிமாற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் அல்லது மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தும் என்று சந்தேகிக்கப்படும் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. ஆனால் இது இன்னும் ஆராய்ச்சியில் உள்ளது. ஆய்வகங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி தடுப்பூசிகளால் தூண்டப்பட்ட ஆண்டிபாடிகளை தடுக்கிறது லாம்ப்டா மாறுபாடு.

கலிபோர்னியாவின் லா ஜோல்லாவில் உள்ள மூலக்கூறு மருத்துவப் பேராசிரியரும் ஸ்கிரிப்ஸ் ரிசர்ச் ட்ரான்ஸ்லேஷனல் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் இயக்குநருமான மருத்துவர் எரிக் தோபோல், புதிய லம்ப்டா வழக்குகளின் சதவிகிதம் GISAID அனுப்பப்பட்டுள்ளது. , SARS-CoV-2 வகைகளைக் கண்காணிக்கும் ஒரு தரவுத்தளம் ஆகும். லாம்ப்டா மாறுபாடு குறைந்து வருவதை அந்த ஆய்வு முடிவுகள் காட்டுகிறது.

நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் சமீபத்திய அறிவிப்பில், நிபுணர்கள், அதிகப்படியான தொற்றினை லாம்ப்டா ஏற்படுத்தவில்லை. தடுப்பூசிகள் இந்த மாறுபாட்டுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என்று டாக்டர் வில்லியம் ஸ்ச்சாஃப்னெர் கூறினார். வாண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் தொற்று நோய் நிபுணராக பணியாற்றி வரும், சி.டி.சி. நடத்திய விவாதம் ஒன்றில் இவ்வாறு கூறினார்.

பி .1.621 - கண்காணிக்கப்பட கூடிய ஒன்று

பி .1.621 பிறழ்வு, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கொலாம்பியாவில் பரவ ஆரம்பித்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு இன்னும் கிரேக்க பெயர் வைக்கவில்லை. ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் இதனை ஆர்வத்தின் மாறுபாடு என்று கூறியுள்ளனர். இங்கிலாந்தின் பொது சுகாதாரத்துறை இதனை ஆராய்ச்சிகளின் கீழ் இருக்கும் ஒரு மாறுபாடு என்று கூறியுள்ளனர். இது முக்கியமான E484K, N501Y, D614G ஆகிய பிறழ்வுகளை கொண்டுள்ளது. இது நேரடியாக நோய் பரவல் மற்றும் நோய் எதிர்ப்பினை குறைப்பத்தில் இணைந்துள்ளது. இங்கிலாந்தில் இதுவரை 37 சாத்தியமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் உள்ளது. ஃப்ளோரிடாவில் அதிகப்படியான நபர்களின் இந்த மாறுபாடு இருப்பதை கண்டறிந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

மேலும் பல மாறுபாடுகள் வர வாய்ப்புகள் உள்ளதா?

வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் அந்தோனி ஃபாசி, சமீபத்தில் அதிக அமெரிக்கர்கள் தடுப்பூசி போடாத வரை அமெரிக்கா சிக்கலில் இருக்கக்கூடும் என்று எச்சரித்தார், ஏனெனில் தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள வரை, கொரோனா வைரஸ்கள் பரவுவதற்கும் பிறழ்வுகள் உருவாகவும் வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும் என்று கூறினார்.

ஏழை நாடுகளின் மக்கள்தொகையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், வேறுபாடுகள் கண்டறியப்படாமல் இருந்தாலும் நிலைமை இப்படித் தான் இருக்கும் என்று பணக்கார நாடுகளால் சர்வதேச அளவில் தடுப்பூசி அளவுகளை அதிக அளவில் விநியோகிப்பதை ஆதரிப்பவர்கள் அறிவித்துள்ளனர்.

அப்படியிருந்தும், தற்போதைய தடுப்பூசிகள் கடுமையான நோயைத் தடுக்கின்றன, ஆனால் தொற்றுநோயைத் தடுக்காது என்பது ஒரு முக்கிய பிரச்சினை என்று மயோ கிளினிக்கின் தடுப்பூசி விஞ்ஞானி டாக்டர் கிரிகோரி போலந்து கூறினார். ஏன் என்றால் வைரஸ்கள், மூக்கில் அதிக அளவு உற்பத்தி ஆகும் திறன் கொண்டவை. தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்களும் கூட குறைந்த அளவு நோயை ஏரோசோலைஸ் செய்யப்பட்ட நீர்த்துளிகள் மூலம் பரப்ப முடியும் என்று கூறினார்.

கொரோனா வைரஸை தடுக்க, நோய் பரவலை தடுக்கும் தடுப்பூசிகளை உருவாக்க வேண்டும். அது வரை புதிய கொரோனா வைரஸ்களின் உருவாக்கம் உலகிற்கு அச்சுறுத்தலாகவே இருக்கும் என்று போலாந்து மற்றும் இதர ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment