Advertisment

பி-டெக், எம்-டெக் படிப்பு முக்கியத்துவம் குறைகிறதா?-மத்திய அரசு தரும் தகவல்

கல்வி அடர்த்தி எவ்வாறு உள்ளது,மாணவர்-ஆசிரியர் விகிதம், பாலின சமத்துவ அட்டவணை, ஒரு மாணவருக்கு உயர்கல்வியில் எவ்வளவு செலவாகிறது என்பதை கணக்கீடு செய்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India Higher Education Survey report

India Higher Education Survey report

இந்தியாவின் உயர் கல்வியின் நிலையை ஆராய, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்  இணையத்தில் மூலம் நடத்தப்பட்ட உயர் கல்வி குறித்த அகில இந்திய ஆய்வு  (AISHE) அறிக்கையை ஒவ்வவொரு வருடமும் 2010-11 முதல் வெளியிட்டு வருகிறது.

Advertisment

இந்தியாவின் உயர்கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கை, பாட வகுப்புகள், தேர்வு முடிவுகள், கல்வி நிதி, உள்கட்டமைப்பு போன்ற பல  டேட்டாக்கள் சேகரிக்கப்பட்டு நாட்டின் கல்வி அடர்த்தி எவ்வாறு உள்ளது , மாணவர்-ஆசிரியர் விகிதம் குறை/நிறைகள், பாலின சமத்துவ அட்டவணை, ஒரு மாணவருக்கு உயர்கல்வியில் எவ்வளவு செலவாகிறது/செலவினம் செய்யப்பட வேண்டும் போன்றவைகள் இதன் மூலம் கணக்கீடும் செய்கிறது.

இந்த ஆண்டுக்கான அறிக்கை கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 21) வெளியானது.  அதில், தொழில்முறை படிப்பு பற்றியத் தகவல்கள் நம்மை சற்று வியக்க வைக்கின்றன. இது தொடர்பான தகவல்களை இங்கே காண்போம்.

தொழில்முறை படிப்பில் முதுகலை பட்டம்(எம்.டெக்) பெரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து வருடத்தில் பாதியாக குறைந்துள்ளது. அதாவது, 2014-15-ல் 2,89,311  இருந்த எண்ணிக்கை   2018-19 கல்வியாண்டில் 1,35,500 வாகவும், பி.டெக் மாணவர்களின் எண்ணிக்கை 42,54,919  என்பதில் இருந்து  37,70,949 வாக குறைந்திருக்கின்றன.

இருப்பினும், எம்பிஏ , எம்பிபிஎஸ், பி.எட். மற்றும் எல்எல்பி போன்ற சில தொழில்முறைப் பிரிவுகள் தொடர்ந்து அதிக மாணவர்களை ஈர்த்துவருகின்றன. உதாரணமாக, எம்பிஏ படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 2014-15ல் 4,09,432 லிருந்து 2018-19ல் 4,62,853 ஆக உயர்ந்திருக்கின்றது. இதேபோல், பி.எட். ஏறக்குறைய 80% உயர்ந்து, 2014-15ல் 6,57,194 லிருந்து கடந்த ஆண்டு 11,75,517 ஆக உயர்ந்துள்ளது.

publive-image

இந்தியாவில், தொழில்முறைப் படிப்பில் வீழ்ச்சி ஏர்ப்பட்டிருந்தாலும், உயர்கல்வியில் மொத்த மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டை விட பல முறை அதிகரித்துள்ளது. உதாரணமாக, இந்த ஆண்டில் மொத்த மாணவர்கள் சேர்க்கை 3.74 கோடியாக உள்ளது, கடந்த ஆண்டு 3.66 கோடியாகும்.

மொத்த சேர்க்கை விகிதம் :

இந்தியாவின் 18-23 வயதிற்கான தற்போதைய மொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio) 26.3% சதவீத மாக உள்ளது .இது 2017-18 கல்வியாண்டில் 25.8 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த சேர்க்கை விகிதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது:

எடுத்துக் காட்டு: உதரணமாக, 2019- ல் இந்தியாவில் 40 மாணவர்கள் உண்மையாக  உயர்கல்வியில் படுத்து வருகின்றனர். இந்தியாவில், 18-23 வயதில் மொத்தம் 50 பேர் இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

பின், இந்தியாவின் மொத்த சேர்க்கை விகிதம்  = 40/50*100 = 80% வாக இருக்கும்

publive-image

2018-19 ஆம் ஆண்டில் உயர்கல்வியில் படிக்கும் மொத்தம் 3.74 கோடி மாணவர்களில், 1.92 கோடி பேர் ஆண்கள், 1.82 கோடி பேர் பெண்கள்.  பாலின சமத்துவ குறியீடு (ஜிபிஐ) கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது . உதாரணமாக, இந்த குறியீடு  2014-15ல் 0.92 லிருந்து 2018-19 ல்  ஒன்று(1) என  உயர்ந்துள்ளது.

publive-image

உயர்கல்வி செல்லும் பெண்களின் எண்ணிக்கையை உயர்கல்வி செல்லும் ஆண்களின் எண்ணிகையோடு வகுத்தால் பாலின சமத்துவ குறியீடு கிடைக்கும். 2018-19 ல் ஒன்று என்று இருப்பதால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயர்கல்வியில் படுத்தி வருகிறார்கள் என்று அர்த்தம்.

தொழிற்முறை படிப்பில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தாலும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கலைப் படிப்புகளில் சேர்கின்றனர் என்கிறது இந்த அறிக்கை . கலைப் படிப்புகளில் சேரப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 93.49 லட்சம், இதில் 46.96% ஆண்கள், 53.03% பெண்கள். அறிவியல் தொடர்பான பாடங்களில் 47.13 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 49% ஆண்கள் மற்றும் 51% பெண்கள்.  40.3 லட்சம் மாணவர்கள்  வர்த்தகத்தில்(காமர்ஸ்) பாடகத்தில் படித்து வருகின்றனர். இதில்  51.2% ஆண்கள் மற்றும் 48.8% பெண்கள் என்று கணக்கெடுப்பு கூறுகிறது.

Union Hrd Ministry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment