Advertisment

நடைவண்டி முதல் குடை மிளகாய் வரை... சின்னங்களாக வழங்க தேர்தல் ஆணையம் எப்படி தீர்மானிக்கிறது?

Bihar Assembly Election 2020 : அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்களிக்கச் செல்லும்போது வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சப்பாத்தி உருட்டுக் கட்டை, பல்லக்கு, வளையல், குடை மிளகாய் போன்ற எண்ணற்ற சின்னங்களைக் காணலாம்.

author-image
WebDesk
New Update
bihar assembly election, bihar assembly election 2020, bihar assembly election parties, how Election Commission decides on party symbols, பீகார் சட்டமன்றத் தேர்தல், பீகார் சட்டமன்றத் தேர்தல் 2020, பீகார் தேர்தல், பாஜக, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேர்தல் ஆணையம், சின்னம் எப்படி ஒதுக்கப்படுகிறது, bihar assembly election symbol, bihar assembly election parties symbol, bihar assembly election 2020 party symbol, bihar election 2020 party symbols, bihar election 2020 party symbol, bihar election 2020 parties symbols, eci bihar election 2020 party symbols, eci bihar election party symbols

Bihar Assembly Elections 2020: வருகிற பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஒருபுறம் தாமரை (பாஜக) ஈட்டி (ஐக்கிய ஜனத தளம்) மற்றொருபுறம் கை (காங்கிரஸ்) ராந்தல் விளக்கு (ஆர்.ஜே.டி) சின்னங்களுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. இந்த சின்னங்களைத் தவிர வாக்காளர்கள், அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்களிக்கச் செல்லும்போது, வாக்களர்கள், வாக்குப்பதிவு இயந்தியத்தில், சப்பாத்தி உருட்டு கட்டை, பல்லக்கு, வளையல், குடை மிளகாய் போன்ற எண்ணற்ற சின்னங்களைக் காண எதிர்பார்க்கலாம்.

Advertisment

பீகார் தேர்தலில் கிட்டத்தட்ட 60 கட்சிகள் களம் இறங்கியிருக்கின்றன. இந்த சின்னங்கள் பல அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கும் பல சுயேட்சை வேட்பாளர்களுக்கும் மற்றவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்கும் வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான கட்சியை அடையாளம் காண்பதற்கும் உதவும்.

பாரதிய ஆம் அவாம் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி ஆகும். பீகார் தேர்தலில் 243 இடங்களிலும் போட்டியிடும் பாரதிய ஆம் அவாம் கட்சிக்கு ‘குடை மிளகாய்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல, ‘சிறிய உரல்’ சின்னம் மற்றொரு அங்கீகரிக்கப்படாத இந்து சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆம் அதிகார் மோர்சா சப்பாத்தி உருட்டு கட்டை சின்னத்திலும், ராஷ்டிரிய ஜன் விகாஸ் கட்சி குழந்தைகள் நடைவண்டி சின்னத்திலும் போட்டியிடுகிறது.

சிவசேனாவின் வில் அம்பு சின்னம், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஈட்டி சின்னத்தை போல காணப்படுகிறது என்பதால், கடந்த ஆண்டு, பீகார் மக்களவைத் தேர்தலுக்காக, சிவசேனாவை அதனுடைய வில் அம்பு சின்னைத்தைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. அதற்கு பதிலாக, டிரம்பட் சின்னம் ஒதுக்கியது. பப்பு யாதவின் ஜன் அதிகார் லோக்தந்த்ரிக் கட்சிக்கு இந்த முறை கத்தரிக்கோல் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு தேர்தலில் அக்கட்சி ‘ஹாக்கி பேட், பந்து’ சின்னத்தில் போட்டியிட்டது.

publive-image

தேர்தலில் சின்னங்களின் முக்கியத்துவம் என்ன?

இந்தியா போன்ற ஒரு பரந்த மற்றும் பன்முகப்பட்ட நாட்டில், பல தேர்தல் கட்சிகளும் சிறிய அரசியல் கட்சிகளும் மாநிலத் தேர்தல்களில் தங்கள் அதிர்ஷ்டத்தை அடைய முயற்சிக்கின்றன. சின்னங்கள்தான் வாக்காளர்களுடன் இணைவதற்கான முக்கியமான பிரச்சார கருவிகள். 1951-52ல் இந்தியா தனது முதல் தேசிய தேர்தல்களை நடத்தியதிலிருந்து சின்னங்கள் தேர்தல் செயல்முறையின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. அந்த நேரத்தில் கிட்டத்தட்ட 85 சதவீத வாக்காளர்கள் கல்வியறிவற்றவர்களாக இருந்ததால், கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு அவர்கள் விரும்பும் கட்சியை அடையாளம் காண உதவும் வகையில் காட்சி சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

publive-image

எத்தனை வகையான சின்னங்கள் உள்ளன?

தேர்தல் சின்னங்கள் (தனி ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) (திருத்தம்) ஆணை, 2017-இன் படி, கட்சி சின்னங்கள் ஒதுக்கப்பட்டவை அல்லது இலவசம் அல்ல. நாடு முழுவதும் எட்டு தேசிய கட்சிகள் மற்றும் 64 மாநிலக் கட்சிகள் ஒதுக்கப்பட்ட சின்னங்களைக் கொண்டிருக்கின்றன, தேர்தல் ஆணையம் கிட்டத்தட்ட 200 இலவச சின்னங்களைக் கொண்டுள்ளது. அவை தேர்தல்களுக்கு முன்னர் அங்கீகரிக்கப்படாத ஆயிரக்கணக்கான பிராந்தியக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத 2,538 கட்சிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, தேர்தலில் ஒரு கட்சி குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் போட்டியிட்டு அங்கீகரிக்கப்பட்டால், மற்றொரு மாநிலத்தின் தேர்தலில் போட்டியிட்டால், அக்கட்சி பயன்படுத்தும் சின்னத்தை முன்பதிவு செய்யலாம். அந்த சின்னம் அங்கே மற்ற கட்சிகல் பயன்படுத்தாவிட்டால், அல்லது வேறு எந்த கட்சி சின்னத்துடனும் ஒத்திருக்கவில்லை என்றால் அதை அக்கட்சி பயன்படுத்துவதற்கு வழங்கப்படும்.

அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன?

1968ம் ஆண்டில் முதன்முதலில் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த உத்தரவு, “அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்திற்காக, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் குறிப்புகள் விவரக்குறிப்பு, இட ஒதுக்கீடு, தேர்வு மற்றும் ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் சின்னங்களை வழங்க தேர்தல் ஆணையத்திற்கு கட்டளையிடுகிறது. வழிகாட்டு விதிகளின்படி, ஒரு சின்னம் ஒதுக்கப்படுவதற்கு, ஒரு கட்சி / வேட்பாளர் நியமன ஆவணங்களை தாக்கல் செய்யும் நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் இலவச சின்னங்களின் பட்டியலிலிருந்து 3 சின்னங்களின் பட்டியலை வழங்க வேண்டும். அவற்றில், ஒரு சின்னம் கட்சி / வேட்பாளருக்கு முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்ற அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிளவுபடும்போது, ​​சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். உதாரணமாக, சமாஜ்வாடி கட்சி பிளவுபட்டபோது, ​​தேர்தல் ஆணையம் அகிலேஷ் யாதவ் பிரிவுக்கு ‘சைக்கிள்’ ஒதுக்கியது.

இதே போல், ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து, 2 அணிகளாக உடைந்தது. இரண்டு அணியினரும் கட்சி சின்னமான இரட்டை இலைக்கு தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோரினார்கள். அதனால், தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்க வழிவகுத்தது. விசாரணைக்குப் பிறகு, இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி - பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கியது. அதிமுகவின் சட்டமன்ற மற்றும் கட்சி அமைப்பு பிரிவுகளில் பெரும்பான்மையினரின் ஆதரவை அவர்கள் வைத்திருப்பதாக உத்தரவிடப்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Bjp Aiadmk Election Commission Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment