Advertisment

பீகார் தேர்தல் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?  

மின்னணு சாதனங்களில் அதிகம் பரிச்சயம் பெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பீகார் தேர்தலை தீர்மானிக்க போகிறார்களா?

author-image
WebDesk
New Update
பீகார் தேர்தல் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?  
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.  இத்தேர்தலின் முக்கியத்துவத்தை இங்கே காணலாம்.
Advertisment

 பீகார் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?  

வரலாற்று ரீதியாக, சமூக இயக்கங்களின் அச்சாணியாக  பீகார் அரசியல் இருந்து வருகிறது.  இதில் ஜெயபிரகாஷ் நாராயணனின் முழு புரட்சி (Total Revolution) என்ற முழக்கம் ,வலிமைமிக்க இந்திரா காந்தி அரசாங்கத்தை உலுக்கியது. இதன், காரணமாக 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலை  பிரகடனப்படுத்தப்பட்டது.  மேலும், 1977ஆம் ஆண்டு ஜனதா கட்சி வெற்றி பெற்ற போது  மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசாங்கம் முதன் முறையாக அமைந்தது.  காங்கிரஸ் எதிர்ப்பு கூட்டணி  சமூக நீதி அரசியலுக்கான விதைகளை விதைத்தனர். நிதீஷ் குமார், லாலு பிரசாத், சுஷில் குமார் மோடி போன்ற பீகார் தலைவர்கள் இந்த அரசியலை முன்னெடுத்தனர்.  இந்த மூவரும் தற்போது வெவ்வேறு அரசியல் சிந்தாந்தங்களை வெளிபடுத்தி வருகின்றனர்.

1977 ஆம் ஆண்டில், பீகார் முதல்வர் கர்பூரி தாகூர், பணி மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினர். இதன் தாக்கம் கடந்த 40 ஆண்டுகளாக தேசிய மட்ட அரசியலை வழிநடத்தி வருகிறது.  பாஜக  தனது இந்துத்துவ சிந்தாந்த அரசியலை இங்கு நடைமுறை படுத்த முடியுமா?

பீகார் தேர்தல்  ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?  

இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான பீகாரில், 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 104,099,452 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 88.71% மக்களும், நகரப்புறங்களில் 11.29% மக்களும் வாழ்கின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலில்,சுமார் 7.29 கோடி பேர் வாக்களிக்க தகுதி  பெற்றுள்ளனர். இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளின் மக்கள்தொகையை விட இந்த எண்ணிக்கை  அதிகம்.

இது பல செயல்திறன் குறிகாட்டிகளில் (சமூகம், பொருளாதாரம் ) இந்தியாவின் பின்தங்கிய  மாநிலமாக விளங்கிவருகிறது. இதனால், அம்மாநில இளைஞர்கள் வேலை வாய்ப்பு காரணமாக மற்ற மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து செல்கின்றனர். கொரோனா பொது முடக்கநிலை காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.

2015 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், மோடி எனும் விஸ்வரூப அலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், தற்போது பிஜேபி, நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒன்றாக களம் இறங்குகிறது. மேலும், இந்த தேர்தலில் லாலு பிரசாத யாதவ் பிரச்சாரம் செய்யவில்லை .

எனவே, இந்த தேர்தலில் பீகார் அரசியல் ஆச்சரியத்தை ஏற்படுத்த முடியுமா?

 கொரோனா பெருந்தொற்றின் தாக்கம்: 

2015ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் 56.8  என்ற அதிகபட்ச வாக்களிப்பு சதவீதம் பதிவானது. கொவிட்-19-ஐக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும்  , வாக்காளர்களை வாக்கு  சாவடிக்கு கொண்டு வருவது அனைத்து கட்சிகளுக்கும் சவாலாக உள்ளது.  குறைந்த அளவு வாக்குப்பதிவு , குறிப்பாக  எதிர்க்கட்சிகளுக்கு மேலும் பாதகமான சூழலை உருவாக்குமா?  பாஜக வலுவாக இருக்கும் நகர்ப்புற வாக்குகளில் குறைவு ஏற்படுமா? போன்ற கேள்விகள்  முக்கியத்துவம் பெறுகிறது.

டிஜிட்டல் பிரச்சாரம்

கிராமப்புற வாழ்க்கையைக் கொண்ட மாநிலமான பீகார்,  இந்திய வரலாற்றில் மிகப்பெரிய டிஜிட்டல் அரசியல் பிரச்சாரத்தை எதிர்கொள்கிறது.

பிராதான அரசியல் கட்சித் தலைவர்கள் ஏற்கனவே மெய்நிகர் பேரணிகளை நடத்தியுள்ளனர் (பாஜக முன்னிலை வகிக்கிறது). தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் எதுவும் அங்கு பெரிதாய் காணப்படவில்லை. பீகார் மாநிலத்தில்  மற்றவர்களோடு ஒப்பிடுகையில், மின்னணு சாதனங்களில் அதிகம் பரிச்சயம் பெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் (25 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது) தேர்தலை தீர்மானிக்க போகிறார்களா?

தேர்தல் கூட்டணி :   

பீகாரில் சாதி வாக்கு வங்கிகள் தான் அரசியல் களத்தை தீர்மானிக்கிறது. பீகார் தேர்தல் பொறுத்த வரையில், லோக்ஜனசக்தி  தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு  வெளியே உள்ளது. இருப்பினும், அதன் இலக்கு ஐக்கிய ஜனதா தளம் என்றும், பாஜக இல்லை என்றும் அக்கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்தார். ; உபேந்திர குஷ்வாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி (ஆர்.எல்.எஸ்.பி), முகேஷ் சாஹ்னி- ன் விகாஷீல் இன்சான் (வி.ஐ.பி) ஜித்தன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி  (எச்.ஏ.எம்) ஆகியவை மகா கூட்டணியில் இருந்து  ( மகாகத்பந்தன் ) வெளியேறிவிட்டன

மோடி அலை?  

2019 மக்களவைத் தேர்தலில், மோடி அலை காரணமாக தேசிய ஜனநாயக் கூட்டணி (ஜே.டி.யூ மற்றும் எல்.ஜே.பி உட்பட) பீகாரில் 40 இடங்களில் 39 இடங்களை கைப்பற்றியது. மீதமுள்ள ஒரு இடத்தை காங்கிரஸ் கைப்பற்றியது.  இருப்பினும், அதற்கு பிறகு நடந்த  ஜார்க்கண்ட், டெல்லி, மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்தது. ஹரியானா தேர்தலிலும் அது மிகப்பெரிய பின்னடவை சந்தித்தது. மேலும், பீகார் மாநிலத்தில் அவசரமாக பிறக்கப்பட்ட பொது முடக்கநிலை உத்தரவால் எண்ணற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும்,  நரேந்திர மோடியின் தொடர்ச்சியான பிரபலத்தை   எதிராக போதுமானதாக இருக்குமா?

லாலு பிரசாத் யாதவ்:  

மூன்று தசாப்தங்களாக, பீகாரின் அரசியல் களம் லாலு பிரசாத் யாதவை மையப்படுத்தி வந்தது. லாலு பிரசாத் யாதவ் பதவியேற்க வேண்டும் (அ)  பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்ற ஒற்றை வாசகத்தின் அடிப்படையில் தான் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தன. ஆனால், தற்போது அவரின் மகன் தேஜஸ்வியிடம், அத்தகையை செல்வாக்கு காணப்படவில்லை . கடந்த மாதம், லாலு பிரசாத் யாதவிடம் பல காலம் நெருங்கி பயணித்த ரகுவன்ஷ் பிரசாத் சிங், அக்கட்சியில் இருந்து விலகினார். இது, பீகார் அரசியலில் மிகப்பெரிய சலசலப்பை எற்படுத்தியது.

எவ்வாறாயினும், ஆர்.எல்.எஸ்.பி, எச்.ஏ.எம், வி.ஐ.பி. போன்ற சாதி கூட்டணி கட்சிகள் தங்கள் வெற்றி வாய்ப்புகளை  மாற்ற முடியாது என்று தேஜாஷ்வி உறுதியாக நம்புகிறார். அக்கட்சியைச் சேர்ந்த  எம்.எல்.ஏக்கள் தேர்தலுக்குப் பிறகு கட்சித் தாவல் முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு அதிகம் யென்று தேஜஸ்வி கருத்துவதாகா அரசியல்  வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், 31 வயதான தேஜாஷ்வி யாதவ், போதிய நிர்வாக அனுபவத்தை கொண்டிருக்க வில்லை என்ற கருத்து அனைவரிடத்திலும் காணப்படுகிறது.

முஸ்லீம்  வாக்காளார்கள்:  

பாரம்பரியமாக, பீகாரில் உள்ள முஸ்லிம்கள் ராஷ்ட்ரியா ஜனதா தளத்தை ஆதரித்து வந்திருந்தனர். எவ்வாறாயினும், மோடி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட , குடியுரிமை திருத்தம் சட்டம் , என்.ஆர்.சி திட்டங்கள், டெல்லி கலவரங்கள், அயோத்தி தீர்ப்பு போன்றவைகளால் ஏமாற்றமடைந்த பல்லாயிரக்கணக்கான  இஸ்லாமிய மக்கள், பீகாரில்   மற்ற சில கட்சிகளை அரவணைக்கத் தயாராக இருக்கலாம். ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி  வரும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். 2015 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தான்போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் ஒன்றை மட்டுமே  ஏஐஎம்ஐஎம் கைப்பற்றியது. இருப்பினும், கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற கிஷன்கஞ்ச் இடைத்தேர்தல் ஏஐஎம்ஐஎம் கட்சி அசாத்திய வெற்றியை பதிவு செய்தது.

உபேந்திர குஷ்வாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி (ஆர்.எல்.எஸ்.பி) ; பகுஜன் சமாஜ் ; தேவேந்திர பிரசாத் யாதவின் சமாஜ்வாடி ... ஜனதா தளம் (ஆர்ஜேடி)  (ஜனநாயக)  ஆகிய கட்சிகளுடன் ஏஐஎம்ஐஎம் மூன்றாவது அணியை தற்போது உருவாக்கியுள்ளது.

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கத்தியார் அப்போதைய உத்தரபிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விடுவிக்கப்பட்டது குறித்து தேஜஷ்வி யாதவ்  எந்த எதிர்ப்பு அறிக்கையையும் வெளியிடவில்லை. 1990,    அக்டோபரில் எல்.கே அத்வானியின் ரதயாத்திரையை தடுத்து நிறுத்தியது அப்போதைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Narendra Modi Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment