Advertisment

Explained: ஏன் 1994ல் வந்த பொம்மை வழக்கு, இன்று முக்கியத்துவம் பெறுகிறது

இந்த மாற்றம் பொம்மை வழக்கால் ஏற்பட்டிருந்தாலும், 90களில் மத்திய அரசு ஆட்சியமைப்பதில் பிராந்தியக் கட்சிகளின் முக்கியத்தும் அதிகமானதும் இதற்கு ஒரு முக்கிய காரணம் .

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
maharashtra government formation, ஜனாதிபதி ஆட்சி, மகாராஷ்டிரா,பொம்மாய் வழக்கு, maharshtra floor test,presidents rule, what is Floor test, S R Bommai ruling, presidents rule

maharashtra government formation, ஜனாதிபதி ஆட்சி, மகாராஷ்டிரா,பொம்மாய் வழக்கு, maharshtra floor test,presidents rule, what is Floor test, S R Bommai ruling, presidents rule

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை புதன்கிழமை (இன்று ) நடைபெறுவதை உறுதி செய்யுமாறு மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

Advertisment

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவில் இடம்பெற்றுள்ள பல  குறிப்புகள், இனிவரும் காலங்களில் தொங்கு சட்டசபை அமையும் போது ஒரு மாநில ஆளுநரின் பங்கு என்ன?  என்ற கேள்விக்கு பொருள் தருவதாய் உள்ளது. பொம்மை வழக்கின் அடிநாதத்தை பின்தொடர்வதாகவே நேற்றைய உச்சசநீதிமன்ற தீர்பையும் நம்மால் பார்க்கமுடிகிறது.

எஸ்.ஆர்.பொம்மை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா என்பது மார்ச் 1994 ம் ஆண்டில்  ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு வழக்கு. யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை சட்டப்பேரையில் பெருன்பான்பையின் மூலம் தான் தீர்க்கப்பட வேண்டும் என்ற  வரலாற்று தீர்ப்பை அந்த அமர்வு வழங்கியது.

எஸ்.ஆர் பொம்மை வழக்கு என்ன, அது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

1985ம் ஆண்டில், கர்நாடகாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி  வெற்றி பெற்று, முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே  கீழ் அரசமைத்தது. பிறகு, 1988ம் ஆண்டில் ஹெக்டே முதல்வர் பதிவியில் இருந்து விலகியதால் எஸ்.ஆர்.பொம்மை முதல்வர் பதவிக்கு கொண்டுவரப்பட்டார். அதே ஆண்டில், மற்றொரு கட்சியான லோக் தளத்துடன் இணைத்து இந்த  ஜனதா கட்சி, ஜனதா தளமாக மாறியது. இதனால், புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பொம்மை அமைச்சரவையில்  சேர்க்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில்,  ஜனதா தளத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர் ​​மோலகேரி ஆளுநரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். மனுவில் 19 சட்டமன்ற உறுப்பினர்களின் கையொப்பமும் இருந்தது. பொம்மை அரசின் மீது நம்பிக்கை இல்லை, அதனால்  அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுகிறோம் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்தியத்தில் ஆட்சி செய்து வந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசாங்கம் 356 வது பிரிவின் மூலம், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி கர்நாடக மாநில அரசை கலைத்தது.

இந்த முடிவு மிகவும் சர்ச்சையானாலும் , இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் இந்திய அரசியலில் கூறலாம்.

அக்டோபர் 1991 ல்,  அரசியலமைப்பற்ற ஆட்சி நடைபெறுவதாக கூறி , மேகாலயா அரசை  ஜனாதிபதி தனது பிரகடனத்தால் நீக்கினார். பின்பு, அதன் சட்டபேரைவையும் கலைக்கப்பட்டது.

முன்னதாக 1988ம் ஆண்டில், ஆளுநர் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில், நாகாலாந்து அரசு நீக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், மத்திய அரசு உத்தரபிரதேச அரசை மட்டுமல்லாமல் , மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் போன்ற பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் அரசாங்கங்களை நீக்கியது.

எனவே தான், ஒன்பது நீதிபதிகள் கொண்ட பொம்மை வழக்கு அமர்வு , பிரிவு 356-ஐ பயன்படுத்துவதற்கான அரசியலமைப்பு வரம்புகளைப் விவரமாக ஆராய்ந்து தீர்ப்பளித்தது.

பொம்மை வழக்கின்  தீர்ப்பு

முதலாவதாக, ஒரு மாநில அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்வதற்கான மத்திய அரசுக்கு இருக்கும் திறனைக் கட்டுப்படுத்த நீதிமன்றம் பல வழிகாட்டுதல்களை வகுத்தது.  மேலும், கூட்டாட்சி முறை இந்திய அரசியலமைப்பின் அடிப்படை தத்துவம் என்பதை உறுதி செய்தது.

இரண்டாவதாக, சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு முறையில் மட்டும் தான் மாநில அரசு அனுபவிக்கும் ஆதரவைத் தீர்மானிக்க முடியும்  என்ற சட்ட நெறியை தனது தீர்ப்பால் வகுத்தது. மேலும், 356 பிரிவின் கீழ் வெளியிடப்படும் ஜனாதிபதி பிரகடனம் நீதிதுறை மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மூன்றாவதாக, ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரங்கள் முழுமையாக செயல் இழக்கும் போது மட்டும்தான், அம்மாநில  அரசாங்கத்தை கலைக்க ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற அதிகாரங்கள் இருக்கும் என்று நீதிமன்றம் கூறியது.

இந்த தீர்ப்பு அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டியது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, அதிகாரத்தைப் பெறுவதற்கு ஒரு கட்சி மதத்தை நாட முடியாது, மத அரசியலில் ஈடுபடுவது  கண்டறியப்பட்டால், ஜனாதிபதி 356 சட்டப்பிரிவை பயன்படுத்த தடையில்லை என்றும் தீர்ப்பளித்தது.

தீர்ப்பின் முக்கியத்துவம்: 

அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து, 356 வது பிரிவின் கீழ் ஜனாதிபதி ஆட்சி 100 க்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில்  அமல்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், எஸ்.ஆர் பொம்மை தீர்ப்புக்கு பின்னர் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருவது குறையத் தொடங்கின.

இந்த மாற்றம் உறுதியான நீதித்துறையால் ஏற்பட்டிருந்தாலும், 90களில்  மத்திய அரசு ஆட்சியமைப்பதில், பிராந்தியக் கட்சிகளின் முக்கியத்தும் அதிகமானதும் இதற்கு ஒரு முக்கிய காரணம் .

Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment