Advertisment

புத்த பூர்ணிமா: அம்பேத்கர் ஏன் பௌத்தம் தழுவினார்?

அக்டோபர் 14, 1956 அன்று பி.ஆர்.அம்பேத்கர், அவரைப் பின்பற்றிய 3,65,000 தலித்துகளுடன் இந்து மதத்தில் இருந்து வெளியேறி பௌத்தம் தழுவியபோது வரலாறு படைத்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Buddha purnima, Buddha purnima 2020, ambedkar, what is Buddha purnima, What is importance of Buddha purnima, புத்த பூர்ணிமா, புத்தரும் அவர் தம்மமும், அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?, அம்பேத்கர் பௌத்தம் தழுவியது ஏன்?, when is Buddha purnima, Buddhism, Buddhism history, B R Ambedkar, Ambedkar and Buddhism, Buddha Purnima news, the buddha and his dhamma, the buddha, babasaheb ambedkar, ambedkar converted buddhism

அம்பேத்கர் பௌத்தத்திற்கு மாறிய நிகழ்வு இந்தியாவில் தலித் இயக்கத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்தது. அது இந்து மதத்தின் நான்கு வர்ண அமைப்பின் குழப்பங்களில் இருந்து விடுதலை பெற ஒரு குரலைக் கண்டறிய அனுமதித்தது.

அம்பேத்கர் நீண்ட காலமாக இந்து மதத்தை விமர்சிப்பவராக இருந்தார். இந்து மதம் ஆங்கிலேயர்களைவிட இந்திய சமுதாயத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் என்று அவர் நம்பினார். அவர் மே 1936இல் கூறுகையில், “நான் உங்களுக்கு எல்லாவற்றையும் குறிப்பாகச் சொல்கிறேன். மனிதனுக்காகத்தான் மதம். மதத்திற்காக மனிதன் அல்ல. மனித சிகிச்சையைப் பெற, உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.” என்று கூறினார்.

அதன்பிறகு அவர் 20 ஆண்டுகளாக, எந்த மதம் தனது தேவைகளுக்கு ஏற்றது என்பதை ஆழமாக சிந்தித்தார். அவர் மாறுகிற மதம் இந்திய மண்ணிலிருந்து உருவானதாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இறுதியாக, அவர் பௌத்தத்தை தேர்ந்தெடுத்து, புத்தரும் அவர் தம்மமும் என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தார். அவர் நம்பிய மதத்தின் பிரிவுகளை மாற்றுவது பௌத்த மதத்தின் ஒட்டுமொத்த வடிவத்துடன் பொருந்தவில்லை.

அம்பேத்கர் பௌத்த மதத்திற்கு மாறியதைப் பகுப்பாய்வு செய்ய அறிஞர்கள் எப்போதுமே ஒரு பெரிய ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இது ஒரு அரசியல் நடவடிக்கை என்று சிலர் நம்புகிறார்கள். அவர் பல ஆண்டுகளாக தலித்துகளுக்கு தனி வாக்காளர்களைக் கோரி வந்தார். அவருடைய முயற்சிகளில் தோல்வியுற்றார். கெயில் ஓம்வெட் போன்ற சமூகவியலாளர்கள் அவர் பௌத்த மதத்திற்கு மாறினார் என்பது இந்த விஷயத்தில் ஒரு அரசியல் எதிர்ப்பு என்று நம்புகிறார்கள்.

இரண்டாவதாக, இந்த மத மாற்றம் இந்து மதத்தில் அவரது வாழ்நாளில்  தனிப்பட்ட அனுபவத்தின் விளைவாகும் என்ற கருத்தும் உள்ளது. மேலும், மௌரியப் பேரரசர் அசோகர் மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தனார் போன்றவர்கள், கலாச்சார மற்றும் வரலாற்றுப் பிழைகள் அம்பேத்கரில் முக்கியமான செல்வாக்கைக் கொண்டிருந்தன என்று நம்பப்படுகிறது.

மிக முக்கியமாக, பௌத்தம் ஒரு பகுத்தறிவு மற்றும் நவீன மனப்பான்மையைக் கொண்டுள்ளது என்று அம்பேத்கர் உண்மையிலேயே நம்பினார். அம்பேத்கர் பௌத்த மத மாற்றத்திற்கு காரணம் அறநெறி மற்றும் நீதி ஆகியவற்றின் சிக்கலான தேவைகளை பூர்த்தி செய்ததாக நம்பப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment