Advertisment

சி.பி.எஸ்.இ வினாத் தாள்கள் உருவாக்கப்படுவது எப்படி?

Explained: Amid controversies over questions, a look at how CBSE papers are set: சிபிஎஸ்இ தேர்வுகளில் சர்ச்சைக்குரிய வினாக்கள்; சிபிஎஸ்இ வினாத்தாள்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது தெரியுமா?

author-image
WebDesk
New Update
சி.பி.எஸ்.இ வினாத் தாள்கள் உருவாக்கப்படுவது எப்படி?

தற்போது நடைபெற்று வரும் சிபிஎஸ்இ 1ஆம் பருவத் தேர்வுகளில் வினாத்தாள்கள் தொடர்பாக இதுவரை இரண்டு சர்ச்சைகள் எழுந்துள்ளன. முதலாவதாக, 12 ஆம் வகுப்பு சமூகவியல் தேர்வுக்குப் பிறகு, CBSE பகிரங்க மன்னிப்புக் கேட்டு "பிழை" என்று விவரித்த கீழ்காணும் கேள்வி: "2002ல் குஜராத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு மற்றும் பரவலான முஸ்லிம் எதிர்ப்பு வன்முறை எந்த அரசாங்கத்தின் கீழ் நடந்தது?"

Advertisment

இரண்டாவது சர்ச்சையானது, 10 ஆம் வகுப்பு ஆங்கிலத் தாள்களின் தொகுப்பில் இடம்பெற்ற "பிற்போக்கு" மற்றும் பெண்களை புண்படுத்தும் வகையில் விமர்சிக்கப்பட்ட கருத்துகள் ஒரு புரிதல் தொடர்பான வினாவின் பத்தியில் இருந்தது. திங்களன்று, CBSE வாரியம் இந்தப் பத்தியைக் கைவிடவும், அதனுடன் வரும் கேள்விகளுக்கு அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண்களை வழங்கவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. மேலும், அதன் வினாத்தாள் அமைக்கும் செயல்முறையை மறுபரிசீலனை செய்வதாகவும் CBSE கூறியது. "சிபிஎஸ்இ இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு வருந்துகிறது மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க, வினாத்தாள் அமைக்கும் செயல்முறைகளை முழுமையாக மதிப்பாய்வு செய்து வலுப்படுத்த ஒரு நிபுணர் குழுவை அமைக்கிறது," என்று CBSE ட்விட்டரில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ வினாத்தாள் அமைப்பதில் ஈடுபட்டவர்கள் யார்?

CBSE வினாத்தாளை அமைக்கும் செயல்முறையானது ஒவ்வொரு பாடத்திற்கும் வினாத்தாள் அமைப்பாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்கள் ஆகிய இரண்டு தனித்தனி பாட நிபுணர்களை உள்ளடக்கியது. நிபுணர்களின் அடையாளங்கள் ஒருவரிடமிருந்து ஒருவரிடம் கூட ரகசியமாக வைக்கப்படுகின்றன, மேலும் அவர்கள் அமைத்த வினாத்தாளை CBSE வாரியம் பயன்படுத்துமா என்பது வினாத்தாள் அமைப்பவர்களுக்குத் தெரியாது.

CBSE இன் தேர்வு விதிகளின் கீழ், வினாத்தாள் அமைப்பவர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களுக்கான தகுதிகள்

சம்பந்தப்பட்ட பாடத்தில் அல்லது அதனுடன் தொடர்புடைய பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்;

சம்பந்தப்பட்ட பாடத்தை இடைநிலை/முதுநிலை இடைநிலை/உயர்கல்வி அளவில் கற்பிப்பதில் குறைந்தபட்சம் பத்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்; அல்லது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட மாநில அல்லது தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களாக இருத்தல் மற்றும் இரண்டாம் நிலை/முதுநிலை இடைநிலை மாணவர்கள்/ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சித் திட்டங்கள் அல்லது ஆய்வு/ஆய்வுப் பொருட்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

இருப்பினும் சிபிஎஸ்இ தலைவர் "விரும்பினால்... பாடத்துடன் தொடர்புடைய தொழிலில் உள்ள பிற நபர்களை" நியமிக்கவும் வழிவகை உள்ளது.

சேர்க்கக்கூடிய கேள்விகளின் தன்மை பற்றி விதிகள் என்ன கூறுகின்றன?

தேர்வு விதிகள் வினாத்தாள் அமைப்பாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களுக்கு கேள்விகள் தொடர்பான அறிவுறுத்தல்களின் தொகுப்பை வழங்குகின்றன.

ஒவ்வொரு வினாத்தாளும் பாடத்தின் பாடத்திட்டம், டிசைன், வடிவமைப்பு மற்றும் பாடப்புத்தகங்கள்/பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் படி அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

கேள்வி என்ன சொல்ல விரும்புகிறதோ அதிலிருந்து வேறுபட்ட விளக்கத்திற்கு வழிவகுக்கும் வகையில், எந்தக் கேள்வியும் தவறாகவோ அல்லது தெளிவற்ற வார்த்தைகளாகவோ இல்லை என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

வினாத்தாள் அமைப்பு செயல்முறை என்ன?

ஒவ்வொரு தேர்வுக்கும் பல செட் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. வினாத்தாள் அமைப்பாளர்களின் எண்ணிக்கை மாறுபடலாம், ஒவ்வொருவரும் ஒரு வினாத்தாளை வடிவமைக்கிறார்கள். வினாத்தாள் அமைக்கும் குழுவால் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் பின்னர் மதிப்பீட்டு கட்டத்திற்கு நகரும். வினாத்தாள்களின் மதிப்பீட்டை மதிப்பீட்டாளர்கள் குழு அல்லது தனிப்பட்ட மதிப்பீட்டாளர் மேற்கொள்ளலாம்.

தேர்வு விதிகளின்படி, மதிப்பீட்டாளர்கள் “ஒவ்வொரு வினாத்தாளும் பாடத்தின் பாடத்திட்டம், டிசைன், வடிவமைப்பு மற்றும் பாடப் புத்தகங்கள்/பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின்படி அமைக்கப்பட்டுள்ளது” மற்றும் ஒரு பாடத்தின் பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அலகு வாரியான வெயிட்டேஜுக்கு இணங்குவதை உறுதிசெய்ய வேண்டும். பாடத்தின் வெவ்வேறு துணை அலகுகளின் கீழ் மதிப்பெண்களின் மாறுபாடுகள் ஏதேனும் இருந்தால் "குறைந்தபட்ச மதிப்பெண்களில்" வைக்கப்பட வேண்டும் என்று தேர்வு விதிகள் கூறுகின்றன.

முன்னாள் சிபிஎஸ்இ தலைவர் அசோக் கங்குலியின் கூற்றுப்படி, மதிப்பீட்டாளரின் பங்கு "முக்கியமானது". “கேள்விகள் சரியானவை என்பதையும், பொருத்தமான மொழியைப் பயன்படுத்துவதையும், எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருப்பதையும், குறிப்பிட்ட நேரத்தில் வினாத்தாளுக்கு விடையளிக்க முடிக்க முடியும் என்பதையும் மதிப்பீட்டாளர்கள் உறுதிசெய்ய வேண்டும். மிக முக்கியமாக, வினாத்தாளின் டிசைன், வடிவமைப்பு மற்றும் அச்சிடுதலுக்கு மதிப்பீட்டாளர்கள்தான் பொறுப்பு. அச்சிடுதல் மற்றும் வடிவமைப்பு இளம் மனதைக் கவராத வகையில் இருக்க வேண்டும். நடப்பது என்னவெனில், மதிப்பீட்டாளர்கள் அரைகுறையாக மாறிவிட்டதாகத் தெரிகிறது. அவர்கள் மேம்படுத்தப்பட்டு கடுமையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்,'' என்றார்.

மதிப்பீட்டாளர்கள்தான் இறுதி வினாத்தாள்களைத் தொகுத்து வாரியத்திடம் சமர்ப்பிப்பார்கள்.

வினாத்தாளை அமைப்பதிலும் தேர்வு செய்வதிலும் சிபிஎஸ்இ அதிகாரிகளின் பங்கு என்ன?

ரகசியத்தன்மை தேவைகள் காரணமாக, வினாத்தாள்களை குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பார்க்க முடியும். மதிப்பீட்டாளர்கள் நடுநிலையான வினாத்தாள்களை வாரியத்திடம் சமர்ப்பித்த பிறகு, அவை எந்த வாரிய அதிகாரியாலும் ஆராயப்படுவதில்லை.

தேர்வு விதிகளின்படி, அனைத்து வினாத்தாள்களும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் "தலைவரால் அடையாளம் காணக்கூடிய பிற அதிகாரிகளின்" பிரத்தியேகக் காவலில் இருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஏதேனும் ஒரு வினாத்தாள்களின் தொகுப்பை இறுதியாகப் பயன்படுத்துவார் என்று கங்குலி கூறினார். “தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வினாத்தாள்களைப் படிப்பதில்லை. எந்த வினாத்தாள்கள் பயன்படுத்தப்படும் என்பது குறித்து ஒரே ‘முடிவு’ என்ற கேள்விக்கே இடமில்லை,'' என்றார்.

வினாத்தாள் கசிவு அபாயத்தைக் குறைக்க கடுமையான ரகசியத்தன்மை நெறிமுறைகள் பராமரிக்கப்படுகின்றன. நியாயமற்ற நடைமுறைகளின் அபாயங்களைக் குறைக்க, ஒரே தேர்வுக்கு பல வினாத்தாள் தொகுப்புகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கையும் பின்பற்றப்படுகிறது. ஒரே தேர்வுக்கு ஒன்பது வெவ்வேறு வினாத்தாள் தொகுப்புகள் பயன்படுத்தப்படலாம், தொகுப்புகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் சில நேரங்களில் வெவ்வேறு கேள்விகளின் வரிசையில் குறைவானதாக இருக்கும்.

10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ ஆங்கிலத் தாளைப் பொறுத்தவரை, ஒரு செட் வினாத்தாள்களில் சர்ச்சைக்குரிய பத்தி இருந்தது. சிபிஎஸ்இ அந்த பத்தியை கைவிடவும், அதனுடன் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் மாணவர்களுக்கு முழு மதிப்பெண்களை வழங்கவும் முடிவு செய்தபோது, "சீரான தன்மை மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்த" அனைத்து வினாத்தாள் தொகுப்புகளுக்கும் பத்தி 1 க்கு முழு மதிப்பெண்களை வழங்குவதாகவும் சிபிஎஸ்இ அறிவித்தது.

இந்த ஆண்டு தேர்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதேனும் உள்ளதா?

2021-2022 அமர்வில், முழு வாரியத் தேர்வு அமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. கல்வியாண்டின் இறுதியில் ஒரு இறுதி வாரியத் தேர்வு இருக்கும் நிலையில், இந்த ஆண்டு பாடத்திட்டம் பகுத்தறிவு செய்யப்பட்டு பாதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பாதியையும் சோதிக்க இரண்டு இறுதி பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இறுதி வாரியத் தேர்வு வழக்கமாக பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடத்தப்படும் அதே வேளையில், இந்த ஆண்டு, 1ஆம் பருவத் தேர்வு நவம்பரில் தொடங்கியது. 2022 ஆம் ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதம் 2 ஆம் பருவத் தேர்வு நடைபெற உள்ளது. தாளின் வடிவமைப்பிலும் முழுமையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது, மேலும் முழுத் தாளும் இப்போது கொள்குறி வகை வினாக்களாக உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Explained Cbse Cbse Exams
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment