Advertisment

பாதுகாப்பு தலைமை தளபதி பதவிக்கு அடுத்த தேர்வு யார்?

ராணுவ தலைமை அதிகாரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், ஒவ்வொரு அதிகாரிக்கும் அடுத்து இரண்டாவது நிலை அதிகாரி இருக்கிற, இராணுவத்திற்கான கட்டமைப்புகளைப் போல இல்லாமல், பாதுகாப்பு தலைமை தளபதிக்கு உடனடியாக அடுத்த நிலை அதிகாரி இல்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
New Update
Military chopper crash, helicopter crash, bipin rawat chopper crash, bipin rawat helicopter crash near coonoor, tamil nadu helicopter crash, bipin rawat, CDS, helicopter crash,tamil nadu,coonoor, chopper crash, deaths, casualties, helicopter crash, army chief, coonoor updates, ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நேரலை அறிவிப்புகள், ஹெலிகாப்டர் விபத்து நேரலை அறிவிப்புகள், பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து நேரலை, குன்னூர் அருகே பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து, பிபின் ராவத், சிடிஎஸ், ஹெலிகாப்டர் விபத்து, தமிழ்நாடு, குன்னூர், ஹெலிகாப்டர் விபத்து, இறப்பு, விபத்து, இறப்பு க்ராஷ் லைவ் புதுப்பிப்புகள், ராணுவத் தலைவர், நேரலை அறிவிப்புகள், கூனர் நேரலை அறிவிப்புகள், coonoor air crash, Bipin Rawat, India, Tamilnadu, CDS, Military, CCS, CoCS, IDS

இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்பு தலைமை தளபதி (சிடிஎஸ்) பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர்.

Advertisment

பல பத்தாண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், பாதுகாப்புப் படைகளின் தலைமை பதவி உருவாக்கப்பட்டது. எனவே, நாட்டின் முதல் பாதுகாப்பு தலைமை தளபதி பிபின் ராவத், புதன்கிழமை இறந்தநிலையில்,​​ அவரது பதவிக்காலம் இன்னும் ஒரு வருடம் மீதம் உள்ளது. இந்த சம்பவம் பாதுகாப்பு அமைப்பிற்கு எதிர்பாராத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த பதவி இரண்டு பதவிகளின் வெற்றிடத்தை நிரப்பியது. பாதுகாப்பு தலைமை தளபதியே இராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் உள்ளார்.

ஒவ்வொரு அதிகாரிக்கும் அடுத்த நிலையில் இரண்டாவது- அதிகாரி இருக்கின்ற இராணுவத்திற்கான கட்டமைப்புகளைப் போல இல்லாமல், களத்தில் இருந்தாலும் சரி அல்லது ஒரு படையின் தலைவராக இருந்தாலும் சரி, தலைமை அதிகாரி உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், மூன்று நட்சத்திரங்கள் கொண்ட ஒரு அதிகாரி பாதுகாப்பு பணியாளர்களின் அதிகாரப்பூர்வமற்ற துணைத் தலைவர் இருந்தாலும், பாதுகாப்பு தலைமை தளபதிக்கு (சிடிஎஸ்) அடுத்த நிலையில் இரண்டாம் நிலை அதிகாரி பதவி இல்லை என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

எடுத்துக்காட்டாக, ராணுவம், கடற்படை அல்லது விமானப் படையில் பணிபுரியும் தலைமைத் தளபதி தனது பதவியை வகிக்க முடியாமல் போனால், அரசாங்கம் முழு நேரத் தலைவரை நியமிக்கும் வரை அந்தப் படையின் துணைத் தலைவர் தலைவராகப் பணியாற்றுகிறார். இருப்பினும், அந்த பதவி துணை தலைவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.

பாதுகாப்பு தலைமை தளபதி/பாதுகாப்பு விவகாரங்கள் துறை செயலாளரின் நியமனம் ஒரு படைத் தலைவரின் நியமனத்தை விட ஒரு செயலாளரின் நியமனம் போன்றது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்பு தலைமை தளபதி பதவிக்கு அடுத்து ஒரு துணை அதிகாரி பதவி இல்லை. அவர் இல்லாத நேரத்தில் அவர் தனது பதவியில் தானாகவே பணியாற்றுவார்.

இரட்டைப் பதவி

பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்பு தலைமை தளபதி என்பவர் ஒரு ராணுவ அதிகாரி. ஆனால், செயலாளரைப் போன்ற ஒரு அதிகாரம் கொண்டர். அதனால்தான், அவருக்கு நேரடியாக அடுத்த நிலையில் ஒரு துணை பதவி இல்லை என்று கூறினார். இந்த பதவி அரசியல் தலைமையால் உருவாக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டது. அவர் இராணுவ சேவை செயல்பாட்டில் இல்லை. ஆனால், சிவில் அதிகாரங்களால் கவனிக்கப்பட்ட ராணுவம் தொடர்பான அதிகாரத்துவத்தின் சில பகுதிகள் பாதுகாப்பு அமைச்சக விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு தலைமை தளபதி என ராணுவ செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டத” என்று கூறினார்.

இப்போது பாதுகாப்பு தலைமை தளபதியாக யார் செயல்பட முடியும் என்பதில் புதன்கிழமை இராணுவ மற்றும் அதிகாரத்துவ அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு தலைமை தளபதி பதவியானது முப்படைத் தலைவர்களை உள்ளடக்கிய தலைமைக் குழுவின் (CoSC) நிரந்தரத் தலைவராக இருந்தது. பாதுகாப்பு தலைமை தளபதி பதவி உருவாக்கப்படுவதற்கு முன்பு, மிக மூத்த படைத் தலைவர் லைமைக் குழுவின் தலைவராக இருப்பார்.

பிபின் ராவத் இல்லாத பட்சத்தில், ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே முப்படைத் தலைவர்களில் மூத்தவராக இருப்பார்.

ஒரு படையின் துணைத் தலைவர் பதவியை அனுபவிக்கும் ஐடிஎஸ் தலைவர் (ஒருங்கிணைந்த பாதுகாப்பு அதிகாரி) முதல் முப்படை தலைவர்களை உள்ளடக்கிய தலைமைக் குழு தலைவர் வரை மூன்று நட்சத்திர அதிகாரி தலைமையில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையின் தலைவராக உள்ளனர்.

பாதுகாப்பு தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டபோது, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையின் தலைவர் (சி.ஐ.எஸ்.சி) பதவி துணை பாதுகாப்பு தலைமை தளபதி பதவி ஆக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தற்போதைய சிஐஎஸ்சி-ஆக ஏர் மார்ஷல் பி.ஆர் கிருஷ்ணா உள்ளார்.

ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை தலைவர் (சி.ஐ.எஸ்.சி) பதவியானது பாதுகாப்பு தலைமை தளபதி பதவி கிடைக்கவில்லை என்றால், அது நிர்வாக அதிகாரங்களை நிறைவேற்றுவதற்கானது அல்ல.

மூன்று நட்சத்திர அதிகாரியான ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை தலைவருக்கு (சிஐஎஸ்சி) நான்கு நட்சத்திர அதிகாரிகளுடன் முப்படைத் தலைவர்களை உள்ளடக்கிய தலைமைக் குழுவில் பணியாற்றுவது ஒரு சிக்கலாக இருக்கலாம். பணியாற்றும் தலைவர்களில் இருந்து தேர்வு செய்யவில்லை என்றால், மூன்று நட்சத்திர அதிகாரி ஒருவரை பாதுகாப்பு தலைமை தளபதியாக மாற்றுவதற்கு, ஒரு தளபதிக்கு இணையான பதவிக்கு உயர்த்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்யலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Bipin Rawat Military
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment