Advertisment

சந்திரயான் வெளியிட்ட நிலவின் புகைப்படங்கள்... நிலவின் ஒவ்வொரு இடத்துக்கும் பெயர் வைக்கும் ஆராய்ச்சியாளர்கள்!

நிலவில் இருக்கும் மலைகளுக்கும் பெயர்கள் வைக்கப்பட்டு வருகிறது. பூமியில் இருக்கும் மலைகளின் பெயர்களையே அதற்கும் சூட்டுகின்றார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chandrayaan 2 photographed lunar craters

Chandrayaan 2 photographed lunar craters

Chandrayaan 2 photographed lunar craters : சந்திரயான் 2-ல் பொறுத்தப்பட்டிருக்கும் டெரய்ன் மேப்பிங் கேமரா 2, சந்திரனின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்து நேற்று அனுப்பியது. நிலவில் இருக்கும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு பெயரினை வைக்கின்றனர். இதனால் முக்கிய இடங்களை அடையாளம் காண்பது மிகவும் எளிதாகின்றது. மலைகள், பள்ளங்கள், சமதள பரப்புகள் அனைத்திற்கும் ஆராய்ச்சியாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

Advertisment

நிலவில் இருக்கும் பள்ளங்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் இதுவரை சூட்டியுள்ள பெயர்கள்

பல்வேறு துறையில் செயல்பட்ட புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களின் பெயரை ஒவ்வொரு பள்ளத்திற்கும், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர். ஆர்னால்ட் சோமர்ஃபெல்ட் (ஜெர்மனி), டேனியல் க்ர்க்வூட் (அமெரிக்கா), ஜான் ஜாக்சன் (ஸ்காட்லாந்து), எர்ன்ஸ்ட் மாச் (ஆஸ்திரியா), செர்கெய் கொரொலெவ் (சோவியத் யூனியன்), சிசிர் மித்ரா ( இந்தியா), ஜான் ப்ளாஸ்கெட் (கனடா), திமித்ரி ரோஸ்தெஸ்வென்ஸ்கி (சோவியத் யூனியன்), சார்லஸ் ஹெர்மிட் (ஃப்ரான்ஸ்) - போன்ற அறிஞர்களின் பெயர்கள் இதுவரை சூட்டப்பட்டுள்ளது.

Chandrayaan 2 photographed lunar craters சந்திரயான் 2 வெளியிட்ட நிலவின் புகைப்படங்கள்

மித்ரா (1890 - 1963) இந்தியாவின் மேற்கு வங்கத்தில் பிறந்தவர். இவர் ஒரு இயற்பியல் ஆராய்ச்சியாளர். இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிலவின் மேற்பரப்பில் இருக்கும் ஒவ்வொரு பள்ளத்திற்கும் பெயர் வைக்கும் பழக்கம் 17வது நூற்றாண்டில் இருந்து துவங்கியது என கே.பி. ஷிங்கரேவா மற்றும் ஜி.ஏ. புர்பா தங்களுடைய புத்தகமான தி லூனார் நோமன்கல்ச்சர் : தி ரிவெர்ஸ் சைட் ஆஃப் தி மூனில் (The Lunar Nomenclature: The Reverse Side of the Moon, 1961-1973) குறிப்பிட்டுள்ளனர்.

Chandrayaan 2 photographed lunar craters சந்திரயான் 2 வெளியிட்ட நிலவின் புகைப்படங்கள்

முக்கியமான ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள் மற்றும் ராஜ குடும்பத்தில் பிறந்தவர்களின் பெயர்கள் அதிகமாக வைக்கப்பட்டன். பின்பு அதே பழக்கம் தொடர்ந்து இன்று வரை நடைமுறையில் உள்ளது.  1973ம் ஆண்டு சர்வதேச விண்வெளியார்களுக்கான யூனியனில் எடுக்கப்பட்ட முடிவின் படி, விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்து விளங்கிய, விளங்கும் ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் வைக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது, நிலவில் இருக்கும் மலைகளுக்கும் பெயர்கள் வைக்கப்பட்டு வருகிறது.

பூமியில் இருக்கும் மலைகளின் பெயர்களையே அதற்கும் சூட்டுகின்றார்கள். மிகவும் இருள் படர்ந்த அடர்த்தியான மேற்பரப்புகளுக்கு மனிதனின் மனநிலை படிகளை பெயர்களாக வைக்கின்றார்கள்.

மேலும் படிக்க : புவியை புகைப்படம் எடுத்து அனுப்பிய சந்திரயான் 2

Isro Nasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment