Advertisment

சாபரே வைரஸ்: எபோலா போல மனித குலத்தை மிரட்டும் புதிய அபாயம்

2004 ஆம் ஆண்டில் பொலிவியாவின் கிராமப்புறங்களில் முதன்முதலில் தோன்றியதாக நம்பப்படும் அரிய எபோலா போன்ற நோய் மனிதர்களிடையே பரவுகிறது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சிடிசி) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

author-image
WebDesk
New Update
Chapare virus, Chapare like Ebola virus, சாபரே வைரஸ், எபோலா வைரஸ், எபோலா வைரஸ் போல சாபரே வைரஸ், Centers for Disease Control, rodents, Chapare virus news, Tamil indian express

2004 ஆம் ஆண்டில் பொலிவியாவின் கிராமப்புறங்களில் முதன்முதலில் தோன்றியதாக நம்பப்படும் அரிய எபோலா போன்ற நோய் மனிதர்களிடையே பரவுகிறது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சிடிசி) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Advertisment

பொலிவியாவின் தலைநகரான லா பாஸில் 2 நோயாளிகளிடமிருந்து 3 சுகாதாரப் பணியாளர்கள் இந்த நோயைக் கண்டறிந்தபோது, ​​2019ம் ஆண்டில் ‘சாபரே வைரஸ்’ மிகப் பெரிய அளவில் பரவியது. இதனால், 2 மருத்துவ நிபுணர்களும் பிறகு ஒரு நோயாளியும் இறந்தனர்.  இதற்கு முன்பு, ஒரு தசாப்தத்திற்கு முன்னர் சாபரே பிராந்தியத்தில் ஒரு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், ஒரு சிறிய கொத்து தொற்றும் ஆவணப்படுத்தப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள அரசுகள், விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலைகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கையில்,  அமெரிக்காவின் சி.டி.சி.யின் ஆராய்ச்சியாளர்கள் இப்போது இந்த வைரஸ் பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். இது இறுதியில் மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக இருக்குமா என்றும் பார்க்கிறார்கள்.

சாபரே வைரஸ் என்றால் என்ன?

சாபரே வைரஸ் ரத்தக் கசிவு காய்ச்சல் (சி.எச்.எச்.எஃப்) எபோலா வைரஸ் நோய் (இ.வி.டி) போன்றவற்றுக்கு  காரணமான அதே அரினா வைரஸ் குடும்பத்தினால் ஏற்படுகிறது.

அமெரிக்காவின் சி.டி.சி வலைத்தளத்தின்படி, சாபரே வைரஸ் போன்ற  அரினா வைரஸ்கள் பொதுவாக எலிகளால் சுமந்து செல்லப்படுகிறது. மேலும், அவை பாதிக்கபப்ட்ட எலிகள் கொறித்த பொருட்கள், எலிகளின் சிறுநீர் மற்றும் நீர்த்துளிகள், அல்லது பாதிக்கப்பட்ட நபருடனான தொடர்பு மூலம் நேரடியாக பரவக் கூடும்.

இந்த வைரஸ் முதன்முதலில் கவனிக்கப்பட்ட மாகாணத்தின் பெயரால் சாபரே என்று பெயரிடப்பட்டது.  இந்த வைரஸ், வயிற்று வலி, வாந்தி, ஈறுகளில் இரத்தக் கசிவு, தோல் சொறி மற்றும் கண்களுக்கு பின்னால் வலி ஆகியவற்றுடன் எபோலா போன்ற ஒரு ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் ரத்தக்கசிவு காய்ச்சல்  என்பது கடுமையான உயிருக்கு ஆபத்தான ஒரு வகை நோயாகும். இது பல உறுப்புகளை பாதிக்கும் மற்றும் இரத்த நாளங்களின் சுவர்களை சேதப்படுத்தும்.

இருப்பினும், இந்த மர்மமான சப்பரே வைரஸ் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இந்த வைரஸ் பற்றி முறையாக ஆவணப்படுத்தப்படுவதற்கு முன்பே,  பல ஆண்டுகளாக பொலிவியாவில் இந்த வைரஸ் பரவலாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.  கொசுக்களால் பரவும் நோய் இதே போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் என்பதால், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் டெங்கு நோயாளிகள் என தவறாக கண்டறியப்பட்டிருக்கலாம்.

சி.டி.சி ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸ் பற்றி என்ன கண்டுபிடித்தனர்?

இந்த வார தொடக்கத்தில் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் டிராபிகல் மெடிசின் அண்ட் ஹைஜீன் (ஏ.எஸ்.டி.எம்.எச்) -இன் வருடாந்திர கூட்டத்தில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சி.டி.சி) ஆராய்ச்சியாளர்கள், பொலிவியாவில் 2019ம் ஆண்டு ஏற்பட்ட வைரஸ் பரவலை ஆராய்ந்ததன் மூலம், இந்த வைரஸ் நோயைக் கண்டறிந்ததை வெளிப்படுத்தினர். இந்த வைரஸ் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவுகிறது, குறிப்பாக சுகாதார அமைப்புகளில் பரவுகிறது என்று கண்டறிந்தனர்.

“ஒரு இளம் மருத்துவ குடியிருப்பாளர், ஆம்புலன்ஸ் மருத்துவர் மற்றும் இரைப்பைக் குடல் மருத்துவர் என அனைவருமே பாதிக்கப்பட்ட நோயாளிகளை சந்தித்த பின்னர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை எங்கள் பணி உறுதிப்படுத்தியது. பின்னர், இந்த இரண்டு சுகாதாரப் பணியாளர்களும் இறந்தனர்” என்று சி.டி.சி யின் உயர்-விளைவு நோய்க்கிருமிகளின் பிரிவைச் சேர்ந்த ஒரு தொற்றுநோயியல் நிபுணர் கெய்ட்லின் கோசாபூம் ஒரு அறிக்கையில் கூறினார்.  “பல உடல் திரவங்கள் வைரஸை சுமந்து செல்லக்கூடும் என்று இப்போது நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறினார்.

கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பணியாளர்கள் அதிக அபாயத்தில் உள்ளனர். இதனால், நோயாளிகளின் இரத்தம், சிறுநீர், உமிழ்நீர் அல்லது விந்து ஆகியவற்றால் மாசுபடுத்தக்கூடிய பொருட்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க நோயாளிகளை கையாளும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஒரு நோயாளியிடமிருந்து உமிழ்நீர் வழியாக நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவக் குடியிருப்பாளருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அவர்கள் கண்டறிந்தனர். இதற்கிடையில், ஆம்புலன்ஸ் மருத்துவர் நோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். அதே மருத்துவ குடியிருப்பாளரை அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாபரே வைரஸ் உடன் தொடர்புடைய ஆர்.என்.ஏ எனப்படும் மரபணு துண்டுகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த ஒருவர் 168 நாட்களுக்குப் பிறகு அவரின் விந்துவில் இந்த நோய் பாலியல் ரீதியாகவும் பரவக்கூடும் என்று இது தெரிவிக்கிறது.

லைவ் சயின்ஸ் அறிக்கையின்படி, 2019ம் ஆண்டு பரவலின்போது பாதிக்கப்பட்ட முதல் நபரைச் சுற்றியுள்ள வீடு மற்றும் அருகிலுள்ள விவசாய நிலங்களில் கொறித்துண்ணிகளில் வைரஸின் அறிகுறிகளையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

"கொறிக்கும் எலி போன்ற உயிரினங்களின் மாதிரிகளில் நாங்கள் தனிமைப்படுத்திய ஆர்.என்.ஏ.வின் மரபணு வரிசை நாங்கள் பார்த்த மனித தொற்றுகளில் மிகவும் பொருந்துகிறது” என்று கோசாபூம் கூறினார். சாபரே வைரஸ் ஆர்.என்.ஏ அடையாளம் காணப்பட்ட கொறிக்கும் இனங்கள் பொதுவாக பிக்மி எலி என்று அழைக்கப்படுகின்றன. இது பொலிவியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் காணப்படுகிறது.

கோவிட் -19 ஐக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்பட்டதைப் போல, சாபரே வைரஸைக் கண்டறிய புதிய வரிசைமுறை கருவிகள் விரைவாக ஆர்டி-பி.சி.ஆர் சோதனையை உருவாக்க அனுமதிக்கும் சி.டி.சி வல்லுநர்களுக்கு உதவும். நாடு முழுவதும் இந்த நோய் எவ்வாறு பரவுகிறது என்பதையும், அதன் பரவலுக்கு கொறித்துண்ணிகள் உண்மையில் காரணமா என்பதையும் அடையாளம் காண்பதே இப்போது ஆராய்ச்சியாளர்களின் கவனம் உள்ளது.

சாபரே ரத்தக்கசிவு காய்ச்சலுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை என்பதால், நோயாளிகள் பொதுவாக நரம்பு வழியாக செலுத்தப்படும் ஊசி போன்ற மருந்துகளின் உதவியைப் பெறுகிறார்கள்.

சி.டி.சி வலைத்தளம் நீரேற்றத்தை பராமரித்தல், திரவ மறுமலர்ச்சி மூலம் அதிர்ச்சியை நிர்வகித்தல், மயக்கம், வலி நிவாரணம் மற்றும் மாற்றங்களை சி.எச்.எச்.எஃப் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நிர்வகிக்கக்கூடிய துணை சிகிச்சையாக பட்டியலிடுகிறது.

ஆவணங்களில் மிகக் குறைவான தொற்றுகள் இருப்பதால், நோயுடன் தொடர்புடைய இறப்பு மற்றும் ஆபத்து காரணிகள் ஒப்பீட்டளவில் தெரியவில்லை. "முதலில் வைரஸ் பரவலில் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தொற்று நோயாளி மரணம் அடைந்தார். 2019ம் ஆண்டில் ஏற்பட்ட இரண்டாவது பரவலில் ஆவணப்படுத்தப்பட்ட ஐந்து தொற்றுகளில் மூன்று பேர் உயிரிழந்தனர் (தொற்று-இறப்பு விகிதம் 60%), ”என்று வலைத்தளத்தின் ஒரு பதிவு சுட்டிக்காட்டுகிறது.

சாபரே வைரஸால் ஏற்படும் அச்சுறுத்தல் என்ன?

சாபரே வைரஸ் கொரோனா வைரஸை பிடிப்பதைவிட மிகவும் கடினம் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனெனில், இது சுவாச பாதை வழியாக பரவாது. அதற்கு பதிலாக, சாபரே உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பு மூலம் மட்டுமே பரவுகிறது.

குறிப்பாக நோயால் பாதிக்கப்படும் நபர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் குடும்ப உறுப்பினர்கள் ஆபத்தில் உள்ளனர். இந்த நோய் பொதுவாக வெப்பமண்டல பகுதிகளில் பரவுகிறது. இந்த நோய் குறிப்பாக தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் சிறிய காதுகள் கொண்ட பிக்மி அரிசி எலிகளில் பொதுவாகக் காணப்படுகிறது.

“அடுத்த தொற்றுநோயைத் தொடங்கப் போகிறது அல்லது ஒரு பெரிய பரவலை உருவாக்கப்போகிறது என்று இது நாம் கவலைப்பட வேண்டிய வகையான வைரஸ் அல்ல.” என்று ASTMH அறிவியல் திட்டத் தலைவரும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டேனியல் பாஷ் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Covid 19 Usa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment