Advertisment

குடியுரிமை சட்ட திருத்த மசோதா (CAB) எங்கே செல்லுபடியாகாது?

இந்திய அரசியல் சாசனம் அட்டவணை 6-ன் கீழ் ஏற்கனவே பல்வேறு விதிகள், மற்றும் ஒழுங்குமுறைகள் இந்த மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Citizenship Amendment Bill, CAB, Northeast states, exemption,

Citizenship Amendment Bill

Abhishek Saha

Advertisment

Citizenship Amendment Bill : குடியுரிமை சட்ட திருத்த மசோதா (Citizenship (Amendment) Bill) எங்கே செல்லுபடியாகாது என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை. நுழைவு அனுமதிப் படிவம் (இன்னா்-லைன் பொ்மிட்) மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய பகுதிகளுக்கும் சட்டத் திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குளிர் கால கூட்டத்தொடரில் நேற்று குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. திருத்தப்பட்ட இந்த மசோதாவில் சில பகுதி மக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மிசோரம், மேகலாயா மற்றும் அசாம், திரிபுரா மாநிலங்களில் (சில பகுதிகளில்) இந்த சட்டத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மணிப்பூர் மாநிலம் முழுவதும் இந்த சட்டம் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

நுழைவு அனுமதிப் படிவம் மூலம் (Inner line permit) மூலம் பாதுகாகப்பட்டு வரும் அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து (திமப்பூர் பகுதி நீங்கலாக), மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கும், இந்திய அரசியல் சாசனம் அட்டவணை 6-ன் கீழ் இருக்கும் பழங்குடிகளைக் கொண்ட அசாம், மேகாலாயா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு இந்த சட்ட திருத்த மசோதாவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நுழைவு அனுமதிப் படிவம் எனப்படும் இன்னெர் லைன் பெர்மிட் எப்படி செயல்படுகிறது?

இந்தியாவில் இருக்கும் இதர குடிமக்கள் அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் மிசோரம் பகுதிகளுக்கு செல்ல ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ, பயணம் செய்யும் நாட்களுக்கான நுழைவு அனுமதியை பெற வேண்டும். இந்த ஐ.எல்.பியை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த மாநிலங்களுக்குள் செல்ல இயலும்.

உள்நாட்டு உற்பத்தியை இங்கிலாந்து நாட்டின் உற்பத்தி பொருட்கள் கெடுக்காத வண்ணம் இருக்க Bengal Eastern Frontier Regulation Act of 1873 சட்டம் இயற்றப்பட்டது. 1950ம் ஆண்டு அந்த சட்டத்தில் இடம் பெற்றிருந்த பிரிட்டிஷ் சப்ஜெக்ட்ஸ் நீக்கப்பட்டு, இந்திய குடிமக்கள் என்ற மாற்றம் கொண்டு வரப்பட்டது. இம்மாநிலங்களின் உற்பத்தி மற்றும் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்பு இதன் அடிப்படையிலேயே இன்னர் லைன் பெர்மிட் வழங்கப்பட்டு வருகிறது.

இன்னெர் லைன் பெர்மிட் மூலம் பாதுகாக்கப்படும் மாநிலங்களில் ஏற்கனவே இந்த அனுமதியை (நீண்ட காலத்திற்கு) பெற்று அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர் பிற மாநில மக்கள். தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த புதிய மசோதாவால் இந்திய குடியுரிமை பெறும் ஒருவர் இந்த மாநிலத்திற்குள் சென்று வேலை பார்க்க இயலுமா முடியாதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இந்திய அரசியல் சாசனம் அட்டவணை 6-ன் கீழ் ஏற்கனவே பல்வேறு விதிகள், மற்றும் ஒழுங்குமுறைகள் இந்த மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் கீழ் இந்திய குடியுரிமை பெறும் வெளிநாட்டவருக்கும் இந்த மாநிலங்களில் நுழைய, இந்தியர்கள் பின்பற்றும் அதே சட்ட திட்டங்கள் பொருந்தும்.  இந்திய குடியுரிமை பெறாமல் வெளிநாடுகளில் இருந்து வந்து இந்த பகுதிகளில் தங்கியிருக்கும் மக்களுக்கு இந்திய குடியுரிமை, குடியுரிமை திருத்த மசோதாவின் கீழ் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

publive-image

இந்திய அரசியல் சாசனத்தின் 6வது அட்டவணை என்றால் என்ன? எந்தெந்த பகுதிகளில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?

இந்திய அரசியல் சாசனம் 6வது அட்டவணை, உட்பிரிவு 244(2) மற்றும் 275(1) அசாம், மேகலாயா, திரிபுரா, மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. சுயேட்சை மாவட்ட கவுன்சில்கள் அங்கு செயல்பட்டு வருகிறது. அம்மாநிலங்களில் இருக்கும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு இயற்றப்படும் சட்டதிட்டங்கள் அனைத்தையும் இந்த Autonomous District Councils (ADCs) மேற்கொள்கிறது. மிசோரம் ஏற்கனவே இன்னெர் லைன் பெர்மிட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதர மூன்று மாநிலங்களான மேகலாயா, திரிபுரா மற்றும் அசாம் மூன்றும் இந்திய அரசியல் சாசனம் அட்டவணை 6-ன் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பழங்குடிகள் அதிகம் வசிக்கும் மேகலாயாவில் 3 Autonomous District Councils (ADCs) செயல்பட்டு வருகிறது. ஷில்லாங் டவுனின் சில பகுதி தவிர மொத்த மாநிலமும் இந்த கவுன்சிலின் கீழ் இடம் பெற்றிருக்கிறது. அசாம் மாநிலத்தில் மூன்று கவுன்சில்கள் மற்றும் திரிபுராவில் 1 கவுன்சிலும் செயல்படுகிறது. இவை அனைத்தும் ஆறாம் அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு பகுதிகளுக்குள்ளும் ஏன் மணிப்பூர் இடம் பெறவில்லை?

திரிபுராவும் மணிப்பூரும் மன்னராட்சியில் இயங்கி வந்தது. இந்திய யூனியனுடன் 1949ம் ஆண்டு இணைந்த இப்பகுதிகளுக்கு 1972ம் ஆண்டு தான் முழுமையான மாநிலங்களுக்கான அந்தஸ்த்துகள் வழங்கப்பட்டது. அப்போது இந்த மாநிலங்களிலும் 6வது அட்டவணையில் இடம் பெறவில்லை. 1985ம் ஆண்டு தான் திரிபுரா மாநிலத்தில் இருக்கும் பழங்குடிகள் பகுதிகளில் 6ம் அட்டவணை செயல்பட்டது. கூடிய விரைவில் மணிப்பூரும் இந்த அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது செயல்பாட்டிற்கு வரவே இல்லை என்கிறார் எல். லாம் கான் பியாங். இவர் ஜே.என்.யூவில் உதவி பேராசியராக பணியாற்றுகிறார்.

மணிப்பூரில் இருக்கும் பழங்குடி பகுதிகள் என்னென்ன?

மணிப்பூர் இரண்டு வித்தியாசமான நிலபரப்புகளை பெற்றுள்ளது. மொத்த நிலபரப்பில் பள்ளத்தாக்கு பகுதிகள் 10% ஆகும். அதில் இம்பால் உள்ளிட்ட நகரங்கள் அமைந்திருக்கிறது. மொத்த மாநிலத்தின் மக்கள் தொகையில் 60% பேர் இங்கே தான் வசிக்கின்றார்கள். பெரும்பாலானோர் மெய்தெய் இனத்தை சேர்ந்தவர்கள். மீதம் இருக்கும் 90% நிலப்பரப்பு மலைக்காடுகள் ஆகும். இங்கு நாகா மற்றும் குக்கி போன்ற பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.  மாநிலங்களுக்கான அந்தஸ்த்தினை மணிப்பூருக்கு வழங்கும் போது, பழங்குடி மக்களுக்கு பிரச்சனை வரும் என்று மத்திய அரசு உணர்ந்தது. அதனால் அவர்களுக்கு சிறப்பு அந்தஸ்தினை வழங்கும் சட்டம் 371சி அறிமுகம் செய்யப்பட்டது.

Assam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment