Advertisment

உக்ரைனில் வீசப்பட்ட கிளஸ்டர் குண்டுகள்? தெர்மோபரிக் ஆயுதங்கள் என்றால் என்ன?

உக்ரைனுக்கு எதிராக நடைபெற்று வரும் போரில், ரஷ்யா’ கிளஸ்டர் குண்டுகள் மற்றும் வெற்றிட குண்டுகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவைகள் என்ன? இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமானதா?

author-image
WebDesk
New Update
Russia ukraine war

கிளஸ்டர் வெடிமருந்துகள், கண்மூடித்தனமாக மனிதர்களைக் காயப்படுத்த அல்லது கொல்ல வடிவமைக்கப்பட்டுள்ளன.

ரஷ்யா நடத்தி வரும் போரில்’ கிளஸ்டர் குண்டுகள் மற்றும் வெற்றிட குண்டுகளை பயன்படுத்தியதாக, மனித உரிமை அமைப்புகளான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மற்றும் அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா ஆகியோர் திங்கள்கிழமை (பிப். 28) குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisment

"அவர்கள் இன்று வெற்றிட குண்டைப் பயன்படுத்தினார்கள்," என்று காங்கிரஸ் உறுப்பினர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, மார்க்கரோவா செய்தியாளர்களிடம் கூறினார். இந்த ஆயுதங்களை ரஷ்யா உண்மையில் பயன்படுத்தியிருந்தால், அது போர்க்குற்றமாக இருக்கும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறினார்.

கிளஸ்டர் வெடிமருந்துகள் என்றால் என்ன?

2008 ஆம் ஆண்டு கிளஸ்டர் வெடிமருந்துகள் பற்றிய மாநாட்டின் படி, கிளஸ்டர் வெடிமருந்து என்பது "20 கிலோகிராம்களுக்கும் குறைவான எடையுள்ள வெடிகுண்டுகளை சிதறடிப்பதற்கு அல்லது வெடிப்பதற்கு வடிவமைக்கப்பட்ட வழக்கமான ஆயுதங்கள்" என்று பொருள்படும்.

அடிப்படையில், கிளஸ்டர் வெடிமருந்துகள் துல்லியமற்ற ஆயுதங்களாகும், அவை ஒரு பெரிய பகுதியில் கண்மூடித்தனமாக மனிதர்களைக் காயப்படுத்த அல்லது கொல்ல வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் ஓடுபாதைகள், இரயில்வே அல்லது மின் கடத்தும் பாதைகள் போன்ற வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்பை அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.

அவை ஒரு விமானத்திலிருந்து எறியப்படலாம் அல்லது விமானத்தில் சுழலும் ஒரு எறிபொருளில் ஏவப்படலாம், அது பயணிக்கும்போது பல குண்டுகளை சிதறடிக்கும்.

இந்த வெடிகுண்டுகளில்’ பல வெடிக்காமல், தரையில் கிடக்கின்றன, இதை  கண்டறிவது மற்றும் அகற்றுவது கடினம், சண்டை நிறுத்தப்பட்ட பின்னர் நீண்ட காலத்திற்கு இது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.

கிளஸ்டர் வெடிமருந்துகளுக்கான மாநாடு குறிப்பாக " கிளஸ்டர் வெடிமருந்து எச்சங்களை" அடையாளம் காட்டுகிறது, இதில் "தோல்வியுற்ற கிளஸ்டர் வெடிமருந்துகள், கைவிடப்பட்ட கிளஸ்டர் வெடிமருந்துகள், வெடிக்காத வெடிகுண்டுகள்" ஆகியவை அடங்கும்.

தெர்மோபரிக் ஆயுதம் என்றால் என்ன?

தெர்மோபரிக் ஆயுதங்கள் - ஏரோசல் குண்டுகள், காற்று எரிபொருள் வெடிமருந்துகள் அல்லது வெற்றிட வெடிகுண்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன - ஒரு பெரிய, அதிக வெப்பநிலை வெடிப்புக்கு’ காற்றில் இருந்து ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகின்றன. ஒரு தெர்மோபரிக் ஆயுதம், வழக்கமான வெடிகுண்டுகளுடன் ஒப்பிடுகையில், கணிசமாக பெரிய அழிவை ஏற்படுத்துகிறது.

இரண்டு தனித்தனி நிலைகளில் செல்லும் ஆயுதங்கள், டேங்கில்’ பொருத்தப்பட்ட லாஞ்சர்களில் இருந்து ராக்கெட்டுகளாக சுடப்படலாம் அல்லது விமானத்தில் இருந்து கைவிடப்படலாம்.

அவர்கள் இலக்கைத் தாக்கும் போது, ​​ஒரு முதல் வெடிப்பு’ வெடிகுண்டின் எரிபொருள் கொள்கலனைத் திறந்து, எரிபொருள் மற்றும் உலோகத் துகள்களின் மேகத்தை வெளியிடுகிறது, அது ஒரு பெரிய பகுதியில் பரவுகிறது.

பின்னர் இரண்டாவது வெடிப்பு ஏற்படுகிறது, ஏரோசல் மேகத்தை ஒரு பெரிய நெருப்புப் பந்தாகப் பற்றவைத்து, வலுவூட்டப்பட்ட கட்டிடங்கள் அல்லது உபகரணங்களைக்கூட அழித்து, மனிதர்களை ஆவியாக்கக்கூடிய தீவிரமான குண்டுவெடிப்பு அலைகளை அனுப்புகிறது.

இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமானதா?

கிளஸ்டர் வெடிமருந்துகள் தொடர்பான மாநாட்டை அங்கீகரித்த நாடுகள்’ கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இன்றுவரை, மாநாட்டில் 110 மாநிலக் கட்சிகள் உள்ளன, மேலும் 13 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் இன்னும் அதை அங்கீகரிக்கவில்லை. இதில் ரஷ்யாவோ அல்லது உக்ரைனோ கையெழுத்திட்ட நாடுகள் அல்ல.

வெற்றிட குண்டுகள் எந்த சர்வதேச சட்டம் அல்லது உடன்படிக்கையால் தடை செய்யப்படவில்லை, ஆனால் பிபிசியின் அறிக்கையின்படி, அவை குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள் அல்லது மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் போது, 1899 மற்றும் 1907 ஆம் ஆண்டு ஹேக் ஒப்பந்தங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.

சர்வதேச மனிதாபிமான சட்டம்’ கிளஸ்டர் குண்டுகள் போன்ற உள்ளார்ந்த கண்மூடித்தனமான ஆயுதங்களைப் பயன்படுத்துவதை தடைசெய்கிறது என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்களைக் கொல்லும் அல்லது காயப்படுத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்துவது போர்க்குற்றம் என்று அறிக்கை கூறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Russia Vladimir Putin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment