Advertisment

ரஷ்யாவில் வேகமெடுக்கும் 2-வது தடுப்பூசி... அமெரிக்காவில் 3-ம் கட்ட பரிசோதனை

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பே இந்த வழிகாட்டுதல்கள் உறுதி செய்யப்பட்டு அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால், வெள்ளை மாளிகை அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

author-image
WebDesk
New Update
Corona Vaccine Tracker Tamil News

Corona Vaccine Tracker Tamil News

Corona Vaccine Tracker Tamil News: கொரோனா வைரஸ் தடுப்பூசி டிராக்கர்: ஒப்புதலுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் குறைந்தது இரண்டு மாதங்களாவது சோதனை பங்கேற்பாளர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க வேண்டுமென கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்குநர்களை அமெரிக்காவின் மருந்து ரெகுலேட்டர்களான உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (Food and Drug Administration (FDA)) கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisment

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பலமுறை கூறியதை போல, நவம்பர் 3-ம் தேதி நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், தடுப்பூசி கிடைப்பதற்கான அல்லது ஒப்புதல் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் நிராகரிக்கும் வகையில் இருந்தது கடந்த செவ்வாய்க் கிழமை FDA வெளியிட்டுள்ள இந்த புதிய கடுமையான வழிகாட்டுதல்கள்.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பே இந்த வழிகாட்டுதல்கள் உறுதி செய்யப்பட்டு அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால், வெள்ளை மாளிகை அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என்று தி நியூயார்க் டைம்ஸின் ஓர் அறிக்கை கூறுகிறது. ஒருவழியாக இதற்கான ஒப்புதல் கடந்த செவ்வாய்க்கிழமை வந்தது.

கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான நான்கு முன்னணி வேட்பாளர்கள் தற்போது அமெரிக்காவில் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதுவே பரிசோதனையின் கடைசிக் கட்டம். அக்டோபர் மாதத்திலேயே அதன் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த நம்பகமான தரவைப் பெறுவதாக Pfizer கூறியது. மேலும், செயல்திறன் தரவு திருப்திகரமாக இருந்தால், தடுப்பூசிக்கான அவசரக்கால பயன்பாட்டு ஒப்புதலுக்கு உடனடியாக விண்ணப்பிக்கும் என்றும் கூறியுள்ளது. நவம்பர் 3-ம் தேதிக்கு முன்பே தடுப்பூசியின் ஒப்புதல் பெறக்கூடும் என்ற ஊகத்தை ஃபைசரின் காலவரிசை காட்டியது.

இருப்பினும், FDA-வின் புதிய வழிகாட்டுதல் அத்தகைய லட்சிய காலக்கெடுவை நிச்சயம் தாமதப்படுத்தக்கூடும். டெவலப்பர்கள் தங்களின் சோதனை பங்கேற்பாளர்களிடமிருந்து கூடுதல் தரவை சமர்ப்பிக்கும்படி புதிய வழிகாட்டுதல்கள் கேட்கின்றன. இதில், உண்மையான தடுப்பூசிக்குப் பதிலாகப் போலியாக நிர்வகிக்கப்பட்டவை உட்பட அனைத்து தரவுகளும் அடங்கும்.

இங்கிலாந்தில் சோதனை பங்கேற்பாளர்களில் ஒருவருக்கு கடுமையான நோய் உருவாகிய நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு AstraZeneca, தன் தடுப்பூசி சோதனை முயற்சியை நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் மீண்டும் பரிசோதனை எதுவும் தொடங்கவில்லை. இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சோதனைகள் மீண்டும் தொடங்கப்பட்டிருந்தாலும், முழு அத்தியாயத்தையும் விசாரிக்க அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

3-ம் கட்ட சோதனைகளில் உள்ள மற்ற இரண்டு நிறுவனங்களான மாடர்னா மற்றும் ஜான்சன் & ஜான்சன், தங்கள் தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தயாராக இருக்கும் என்று நம்புவதாகக் கூறுகின்றனர்.

Corona Virus Latest Tamil News Corona Virus Latest Tamil News

இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியை ரஷ்யா வேகமாகக் கண்காணிக்கிறது

ரஷ்யா அதன் இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. இந்த மாதத்தின் இடையில் அதன் ஒப்புதலை உறுதி செய்வதற்காகத் தடுப்பூசியின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது என தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் முதல் தடுப்பூசி, ஆகஸ்ட் 12-ம் தேதி அன்று நாட்டின் கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்டது. இது 3-ம் கட்டம் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாததால் பரவலாக விமர்சனத்துக்குள்ளானது. ஒப்புதல் மட்டுமே நிபந்தனை என்றும், அவசரக்கால பயன்பாட்டிற்காகப் பின்னர் நடத்தப்படும் 3-ம் கட்ட சோதனைகளில் அது தொடர்ந்து உள்ளது என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

அந்த தடுப்பூசி ஏற்கெனவே ரஷ்யாவில் நிர்வகிக்கப்படுகிறது. மேலும், இந்தியா உட்படப் பிற நாடுகளும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் இந்தியாவில் தடுப்பூசி விநியோகிக்க ஒப்பந்தம் செய்துள்ளன. ஆனால், இந்திய மக்கள் தொகையில் இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு, நாட்டிற்கு வெளியே உருவாக்கப்பட்ட எந்தவொரு தடுப்பூசியையும் போலவே, இந்தியாவில் தாமதமாக மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அந்த சோதனைகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது தடுப்பூசியை முன்னாள் சோவியத் பயோவெப்பன் ஆராய்ச்சி ஆய்வகம், வெக்டர் ஸ்டேட் வைராலஜி (Vector State Virology) மற்றும் பயோடெக்னாலஜி சென்டரை உருவாக்கி வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாத நடுவில் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக ரஷ்ய சுகாதார அமைச்சரை மேலும் கூறியிருக்கிறார்.

இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசிக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்:

*முன் மருத்துவ அல்லது மருத்துவ பரிசோதனைகளில் 193 தடுப்பூசி வேட்பாளர்கள் பங்குபெற்றுள்ளனர்

*அவர்களில் 42 பேர் மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபட்டனர்

*இறுதிக் கட்டங்களில் அதாவது மூன்றாம் கட்ட மனித சோதனைகளில் பத்து பேர் இருக்கின்றனர்

*இந்தியாவில் குறைந்தது எட்டு தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு முதல் கட்ட சோதனையை முடித்து இரண்டாம் கட்ட சோதனையில் நுழைந்துள்ளன.

அதிகம் பேசப்பட்டவை:

* அஸ்ட்ராசெனெகா (AstraZeneca) / ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

* மாடர்னா

* ஃபைசர் (Pfizer) / பயோஎன்டெக் (BioNTech)

* ஜான்சன் & ஜான்சன்

* சனோஃபி / கிளாக்சோ ஸ்மித் க்லைன்

* நோவாவக்ஸ்

* மாஸ்கோவில் உள்ள கமலேயா நிறுவனம் உருவாக்கிய ரஷ்ய தடுப்பூசி

*மூன்றாம் கட்ட சோதனைகள் நிறைவடையாமல் மூன்று தடுப்பூசிகள் சீனாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றிற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அவசரக்கால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Coronavirus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment