கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 100 பில்லியன் டாலர் தேவை: நிதி நெருக்கடியில் WHO

Coronavirus (COVID-19) vaccine tracker: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பிற்கு மட்டும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது. கொரோனா தொற்று பாதிப்பால் சர்வதேச அளவில் ஜி 20 நாடுகளில் மட்டும் 10 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பாதிப்புகள் ஏற்படும்

By: Updated: August 11, 2020, 04:18:02 PM

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, தடுப்பு மருந்து கண்டுபிடித்து, அது உலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்கச்செய்ய 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் நிலையில் இன்னும் அதில் 10 சதவீத நிதி கூட திரட்டப்படவில்லை என்பதே உண்மை என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம், கடந்த ஏப்ரல் மாதத்தில், கொரோனா நோய் தடுப்பு மருந்தை, சர்வதேச நாடுகள் கண்டுபிடிக்கும் பொருட்டு, Covid-19 Tools (ACT) Accelerator programme என்ற பெயரில், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு, மேம்பாடு, தயாரிப்பு, அனைவருக்கும் கிடைக்கச்செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகை மேற்கொண்டது. WHO இதற்காக COVAX என்ற அமைப்பை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 10ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் ஜிப்ரியேசஸ் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறேன். தடுப்பு மருந்தை விரைவில் கண்டுபிடித்து அதிகளவில் தயாரித்து, உரிய நேரத்தில் மக்களுக்கு அளித்து கொரோனா எனும் பேரரக்கனை இந்த உலகில் இருந்தே விரட்டும் நடவடிக்கைக்கு உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். இந்த தடுப்பு மருந்து கண்டுபிடிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவதில் சுணக்கநிலையே நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Covid-19 Tools (ACT) Accelerator programme திட்டத்தின்படி, சர்வதேச முதலீடு மிக முக்கியமானதாக உள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிப்பிற்கு மட்டும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது. கொரோனா தொற்று பாதிப்பால் சர்வதேச அளவில் ஜி 20 நாடுகளில் மட்டும் 10 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பாதிப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covid-19 Tools (ACT) Accelerator programme திட்டத்தின்படி, சர்வதேச முதலீடு மிக முக்கியமானதாக உள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிப்பிற்கு மட்டும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது. ஜி 20 நாடுகளின் மூலம், 10 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இதுவரை வந்துள்ளது. இது மொத்த மதிப்பீட்டில் 10 சதவீதம் மட்டுமே என்று ஜிப்ரியேசஸ் குறிப்பிட்டுள்ளார்.

COVAX திட்டத்தின்படி, கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பில் சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும். எந்த நாடு முதலில் மருந்து கண்டுபிடிக்கிறதோ அந்த மருந்து உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மட்டுமல்லாது அதனை அதிகளவில் தயாரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் இத்திட்டத்தில் அடங்கும். 2021ம் ஆண்டின் இறுதிக்குள் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் உள்ள 2 பில்லியன் மக்களுக்கு அளிக்கப்படும் வகையில் மருந்தை தயாரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால சுகாதார திட்டத்தின் தலைவர் மைக் ரையான் தெரிவித்துள்ளதாவது, தடுப்பு மருந்தை அதிகளவில் தயாரித்து உலக மக்கள் அனைவருக்கும் வழங்கி, கொரோனா எனும் அரக்கனை உலகத்தில் இருந்தே விரட்டுவது என்பது மிகச்சவாலான காரியம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

சர்வதேச அளவில் கொரோனா பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 100க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகளை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்துள்ளன. இவற்றில் 30க்கும் மேற்பட்ட மருந்துகள் பல்வேறு கட்ட சோதனைகளை கடந்துள்ளன. இதேநிலை தொடரும்பட்சத்தில், 2021ம் ஆண்டிற்குள் கொரோனா தடுப்பு மருந்து சாத்தியம் என்ற நிலை நிலவுகிறது.

ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினின் மகளுக்கே கொடுத்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து 3ம்கட்ட சோதனையை எட்டியுள்ளது. சீனாவின் கேன்சினோ பயலாஜிக்கல்ஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பு மருந்து, சவுதி அரேபியாவில் 3ம் கட்ட சோதனை நடைபெற்று வருவதாக தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீன ராணுவ வீரர்களிடையே இந்த மருந்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேச அளவில், ஒப்புதலை பெற்றுள்ள ஒரே தடுப்பு மருந்து என்ற பெருமையை இந்த மருந்து பெற்றுள்ளது. சீனா கண்டுபிடித்துள்ள நான்காவது தடுப்பு மருந்து 3ம் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

சோதனையில் இதுவரை

160 பேருக்கு சோதனைக்கு முந்தைய நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன
இவர்களில் 23 பேர் சோதனைக்குட்பட்டுத்தப்பட்டுள்ளனர்
3ம் கட்ட சோதனைக்காக 6 பேர் இறுதிக்கட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இந்த சோதனைக்கு குறைந்தது 8 பேர் உட்படுத்தப்பட உள்ளனர்.
(Source: WHO Coronavirus vaccine landscape of July 31, 2020)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Covid-19 vaccine tracker, August 11: $100 billion needed to take vaccine to all, not even 10% raised, says WHO

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Corona virus covid 19 vaccine who china russia covax vaccine trial

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X