Advertisment

Explained : கோடைகாலம் வந்தால் கொரோனா வைரஸ் பலவீனமாகுமா?

இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப்பின் வாதம் முற்றிலும் அர்த்தமற்றது என்று சொல்லிவிட முடியாது.  அதிகமான வெப்பநிலையின் காரணமாக, நீர்த்துளிகளால் பரவும் SARS-CoV வைரஸின் பரவல் குறைந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Explained : கோடைகாலம் வந்தால் கொரோனா வைரஸ் பலவீனமாகுமா?

கடந்த மாதம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், செய்தியாளர்களிடம் “ வைரஸ்… பொதுவாக ஏப்ரல் மாதத்தில் போய்விடும். இந்த வகையான வைரஸ் வெப்பக் காலத்தில் தாக்கு பிடிக்காது” என்று கொரொனோ வைரஸ் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

2019 டிசம்பர் தொடக்கத்தில் சீனாவின் ஹூபே மாகாணத்தில்  கடுமையான  குளிர்காலத்தின் போது தான் கொரொனோ வைரஸ் வேகமாக பரவியது. இருப்பினும், வெப்பநிலை அதிகரிக்கும் போது வைரஸ் எவ்வாறு செயல்படும் ? பலவீனப்படுமா? வெப்பத்தை சமாளித்து மேலும் பரவுமா? என்ற கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்லும்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞான மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழிலிடம் பேசுகையில்: "இதற்கு பதில் எங்களுக்குத் தெரியாது. வெப்பம் வைரஸைக் செயலிழக்க வைக்குமா? என்ற கேள்விக்கு தற்போது எந்த பதிலும் இல்லை என்று தெரிவித்தார்.

இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப்பின் வாதம் முற்றிலும் அர்த்தமற்றது என்று சொல்லிவிட முடியாது.  அதிகமான வெப்பநிலையின் காரணமாக, நீர்த்துளிகளால் பரவும் SARS-CoV வைரஸின் பரவல் குறைந்தது. தற்போதைய கொரொனோ வைரஸும்  நீர்த்துளிகள் மூலம் தான் பரவுகிறது.

2011 ஆம் ஆண்டில், ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வறிக்கையில்: “ 22-25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும், 40-50% என்ற காற்று  ஈரப்பதத்திலும் (இது நமது  குளிரூட்டப்பட்ட அறைகள் இருக்கும் நிலை), உலர்ந்த வைரஸ், குறைந்தது 5 நாட்களாவது அதன் வீர்யத்தை தக்கவைத்துக் கொள்ளும். ஆனால், வெப்பநிலை, மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகமாகும் (எ.கா., 38 ° C, மற்றும் ஈரப்பதம்> 95%) போது,வைரஸ் அதன் வீரியத்தை விரைவாக இழக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது.

குறைந்த வெப்பநிலை, குறைந்த ஈரப்பதம் நிறைந்த சூழ்நிலையில் தான் சார்ஸ் கொரோனோ வைரஸ் ஹாங்காங் போன்ற துணை வெப்பமண்டலப் பகுதியில் பரவுவதற்கு வழிவகுத்தது.

மெர்ஸ் கொரோனா வைரஸ் : கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மெர்ஸ் கொரோனா வைரஸ்  சவுதி அரேபியாவில் பரவியது. லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் நிறுவனத்தில் பணிபுரியும் டேவிட் ஹேமான் இது குறித்து கூறுகையில் “இந்த மெர்ஸ் கொரோனா வைரஸ்கள் நிச்சயமாக அதிக வெப்பநிலை பருவங்களில் பரவக்கூடும்,” என்று கண்டறிந்தார்

எனவே, தற்போது பரவிவரும் நாவல் கொரோனா வைரஸ் வெப்பநிலையால் பாதிக்கப்படுமா? இல்லையா என்பதை ஒட்டுமொத்த விஞ்ஞான உலகமே உற்று நோக்குகிறது.

மேரிலேண்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசின் என்ற  பல்கலைக்கழகத்தில் நாவல் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டுவருகிறது. ஸ்டூவர்ட் வெஸ்டன் என்ற நிபுணர் இது குறித்து கூறுகையில், வைரஸ் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது: "இது பருவகாலத்தை சார்ந்தது வாழக் கூடியது தான் என்று நம்புகிறேன், இருப்பினும் அதை அறிவது கடினம்" என்று தெரிவித்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment