Advertisment

கொரோனா குடலை பாதிக்குமா, புது ஆய்வு கூறுவதென்ன?

கொரோனா தொற்று பாதிப்பின் விளைவாக  குடல் அசாதாரணங்கள்  ஏற்படுத்துவதாக கதிரியக்கவியல் ( ரேடியாலஜி )இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா குடலை பாதிக்குமா, புது ஆய்வு கூறுவதென்ன?

சார்ஸ்- கோவ்-2 வைரசால் ஏற்படும் கொரோனா தொற்று பாதிப்பின் விளைவாக  குடல் அசாதாரணங்கள்  ஏற்படுத்துவதாக கதிரியக்கவியல் ( ரேடியாலஜி )இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

Advertisment

மார்ச் 27 முதல் ஏப்ரல் 10 வரையிலான கால கட்டத்தில் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட 412 கொரோனா நோயாளிகளிடம் காணப்பட்ட அறிகுறிகளை  (241 ஆண்கள் மற்றும் 171 பெண்கள்) இந்த ஆய்வு பகுப்பாய்வு செய்துள்ளது. சிகிச்சையின் ஒரு பகுதியாக, 17% நோயாளிகள் கிராஸ் செக்ஷனல் அப்டோமினால்  இமேஜிங், அல்ட்ராசவுண்ட்ஸ், சி.டி ஸ்கேன் போன்ற சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில், 31% சி.டி ஸ்கேன்களில் (மொத்த நோயாளிகளில் 3.2 சதவீதம் பேர்) குடல் அசாதாரணங்கள் காணப்பட்டுள்ளது.  மேலும், உள்நோயாளிகளை விட தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள  நோயாளிகளிடம் இந்த பாதிப்பு அதிகளவில் காணப்பட்டது.

வட அமெரிக்காவின் கதிரியக்கவியல் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட் -19 நோயாளிகளுக்கு இமேஜிங் செய்ததில் குடல் அசாதாரணங்கள் கண்டறியப்படுகிறது. அதிலும்,அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளிடம் பாதிப்புகள் பொதுவாக தென்படுகிறது. குருதிப் பற்றாக் குறை குடல் நோய் (இஸ்கெமியா'(ischemia) )  குடல் செயல்படாத தன்மை போன்ற பாதிப்புகள் தென்படுகிறது. ஏற்கனவே, அறுவை சிகிச்சை செய்தவர்களில், சிலருக்கு செயல்படாத குடல் பகுதிக்கு அருகில் ரத்த நாளங்ள் உறைந்து உள்ளது.

ஐ.சி.யு-வில்  இருக்கும் நோயாளிகளுக்கு, குருதிப் பற்றாக் குறை குடல் நோய் ஏற்பட பிற காரணங்கள் இருந்தாலும், கோவிட் -19 நோயின் வெளிப்பாடாகத் தான் இரத்த உறைவு, நாளங்கள் சிதைவு போன்றவைகளை எடுத்துக் கொள்ளமுடியும். எனவே, கோவிட்- 19 நோய் குடல் அசாதாரணங்களுக்கு வழிவகுக்கின்றன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

வைரஸ் தொற்றின் நேரடி தாக்குதல், small vessel thrombosis  (அ) “ nonocclusive mesenteric ischemia” போன்ற காரணங்களினால் கோவிட்- 19 நோயாளிகளிடம் குடல் அசாதாரணங்கள் காணப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கின்றன்ர்.  எவ்வாறாயினும், குடல் (அ) ரத்த நாளங்களில் ஏற்படும் சிதைவிற்கு கொரோனா வைரஸ் நேரடி பங்கு வகிக்கிறதா என்பதை தீர்மானிக்கவும், தெளிவுபடுத்தவும்,மேலும் சில ஆய்வுகள் தேவைப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

"முதல்நிலை ஆய்வின் முடிவுகள் அடிப்படையில் தற்போது பேசி வருகிறோம். குடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த  காரணத்தைப் புரிந்துகொள்ள மேற்ப்படி ஆய்வுகள்  தேவைப்படுகிறது" என்று ஆய்வை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment